Don't Miss!
- News
சென்னை அண்ணா பல்கலை. கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 11 ஆக அதிகரிப்பு
- Automobiles
இந்த இ-ஸ்கூட்டருல போகும்போது லைசென்ஸ் கையில வச்சிருக்கணும்னு அவசியம் இல்ல! போலீஸ் பிடிச்சாலும் பயப்பட வேண்டாம்
- Finance
உக்ரைன் மீதான போர் எதிரொலி: ரஷ்யாவில் இருந்து வெளியேறுகிறதா மார்க்ஸ் & ஸ்பென்ஸர் நிறுவனம்?
- Lifestyle
Today Rasi Palan: இன்று இந்த ராசிக்காரர்களின் பணிச்சுமை சற்று அதிகமாக இருக்கும்...
- Sports
ஒரே ஓவரில் மாறிய விதி.. ஹாசல்வுட் செய்த கடைசி நேர மேஜிக்.. ஆர்சிபி அணி அபார வெற்றி பெற்றது எப்படி?
- Technology
16எம்பி ரியர் கேமரா, 5000 எம்ஏஎச் பேட்டரியுடன் மோட்டோ இ32எஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம்.!
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
வெள்ளித்திரைக்கு தாவும் சின்னத்திரை பிரபலம்... வெப் தொடரிலும் நடிக்கிறார்
சென்னை : நடிகை காவ்யா அறிவுமணி பாரதி கண்ணம்மா, பாண்டியன் ஸ்டோர்ஸ் போன்ற தொடர்களின் மூலம் கவனம் பெற்றவர்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரின் புதிய முல்லையாக இவர் நடித்து வருகிறார்.
இந்நிலையில் இவர் தற்போது வெள்ளித்திரையிலும் நடிக்கவுள்ளதாக அறிவித்துள்ளார்.
கமல்
தயாரிப்பில்
சிவகார்த்திகேயன்
நடிக்கப்
போகும்
படத்தின்
ஹீரோயின்
இவர்
தானா?
வேறலெவல்
தான்
போங்க!

விஜய் டிவி
விஜய் டிவியில் நிகழ்ச்சிகளில் பங்கேற்பவர்கள் தொடர்ந்து சினிமாவில் வாய்ப்பு பெறுவது காலங்காலமாக நடந்து வருகிறது. இதற்கு சிறப்பான உதாரணங்களாக சந்தானம், சிவகார்த்திகேயன் ஆகியோரை உதாரணங்களாக கூறலாம். இவர்கள் விஜய் டிவியின் தொகுப்பாளர்களாக இருந்து சினிமாவிற்கு வந்தவர்கள்.

சினிமாவிற்கு தாவிய நிகழ்ச்சி பங்கேற்பாளர்கள்
இதேபோல குக் வித் கோமாளி, பிக் பாஸ் போன்ற நிகழ்ச்சிகளின் பங்கேற்பாளர்களாக இருந்து அதன்மூலம் கிடைத்த புகழின் மூலமாகவும் வெள்ளித்திரைக்கு வந்தவர்கள் லிஸ்ட்டில் அஸ்வின், ஷிவாங்கி, புகழ் போன்றவர்களை கூறலாம்.

சீரியல் மூலம் சினிமா வாய்ப்பு
இதுமட்டுமில்லாமல் சீரியல்களில் நடித்து அதன்மூலம் கிடைக்கும் புகழிலும் சினிமாவிற்கு வருபவர்களையும் சுட்டிக் காட்டலாம். அந்த வகையில் மறைந்த நடிகை சித்ரா பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர்மூலம் சிறப்பான அறிமுகத்தை சினிமாவில் பெற்றார்.

சினிமாவிற்கு தாவும் காவ்யா
அந்த வகையில் அவரது கதாபாத்திரத்தில் நடித்துவரும் நடிகை காவ்யா அறிவுமணி விஜய் டிவியின் பாரதி கண்ணம்மா தொடரில் அறிமுகமானார். அந்த தொடரில் அறிவு என்ற கதாபாத்திரத்தில் இவரது நடிப்பு பரவலாக ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. தொடர்ந்து தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் நடித்து வருகிறார்.

மகேந்திரன் படத்தில் வாய்ப்பு
இந்நிலையில் இவருக்கு தற்போது வெள்ளித்திரையில் வாய்ப்பு கிடைத்துள்ளது. இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் அவரே அப்டேட் தெரிவித்துள்ளார். நடிகர் மகேந்திரன் நடிப்பில் அருண் கார்த்திக் இயக்கவுள்ள புதிய படம்ன ரிப்பப்பரி படத்தில்தான் இவர் தற்போது இணைந்துள்ளார்.

காமெடி த்ரில்லர் படம்
படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் தான் தோன்றவுள்ளதாக இவர் தெரிவித்துள்ளார். ஆனால் மகேந்திரனுக்கு இவர் ஜோடி இல்லையாம். காமெடி த்ரில்லராக இந்தப் படம் உருவாகவுள்ளது. இந்தப் படத்தில் நடிக்கும் இவருக்கு மகேந்திரன் தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்திருந்தார்.

வெப் தொடரிலும் வாய்ப்பு
இது மட்டுமின்றி டாம் அண்ட் ஜெர்ரி என்ற வெப் தொடரிலும் இவர் கமிட்டாகியுள்ளார். இது மட்டுமின்றி தனது சமூக வலைதள பக்கங்களில் தொடர்ந்து பிசியாக போட்டோஷுட் புகைப்படங்களை அவ்வப்போது பதிவிட்டு ரசிகர்களுக்கு உற்சாகத்தை இவர் ஏற்படுத்தி வருகிறார்.