ஆண் குழந்தைக்கு அம்மாவானார் விஜய் டிவி சீரியல் நடிகை… வாழ்த்து பிரபலங்கள் !
சென்னை : விஜய் டிவி பகல் நிலவு சீரியல் நடிகை சமீரா ஷெரீன், சையத் தம்பதிக்கு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது.
Recommended Video
இந்த மகிழ்ச்சியான தகவலை சையத் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளனர்.
இவர்களுக்கு பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

பகல் நிலவு சீரியல்
விஜய் டிவி ஒளிபரப்பான பகல் நிலவு சீரியலில் சக்தி என்ற கேரக்டரில் நடித்தார். இந்த தொடர் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. இதையடுத்து ஜீ தமிழில் ஒளிபரப்பான ரெக்கை கட்டி பறக்குது மனசு சீரியலில் மலர் என்ற கதாபாத்திரத்தில் நடித்து இல்லத்தரசிகளின் மனங்களை வென்றார் நடிகை சமீரா ஷெரீன்.

சீரியலை தயாரித்தனர்
பகல் நிலவு சீரியலில் தன்னுடன் இணைந்து நடித்த சையத்தை கடந்த 2019ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார். மேலும், இவர்கள் இருவரும் றெக்கை கட்டி பறக்குது மனசு தொடரை தயாரித்தனர். இந்த தொடர். சில காரணங்களால் இந்த தொடர் கைவிடப்பட்டது. இந்த தொடரை சையத்-சமீராவும் இணைந்து சில சூப்பர்ஹிட் தொடர்களையும் தயாரித்திருந்தனர்.

அழகான ஆண் குழந்தை
இதையடுத்து, சையத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சமீரா ஷெரீன் கர்ப்பமாக இருப்பதாக தங்களது ரசிகர்களுக்கு முறைப்படி தெரிவித்தார். இந்நிலையில், தற்போது சையத் சமீரா ஷெரீன் தம்பதியினருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது. சையத் தனது குழந்தையின் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். ரசிகர்கள் இவர்களுக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

ஏன் இப்படி ஆடுறீங்க
கர்ப்பாக இருக்கும் போது சமீரா ஷெரீன், குழந்தையை வயிற்றில் வைத்துக்கொண்டு வாயா என் வீரா என்ற பாடலுக்கு ஆட்டம் ஆடி ஒரு வீடியோவை அப்லோடு செய்திருந்தார். இந்த வீடியோவை பார்த்து கொதித்துப்போன நெட்டிசன்ஸ், வயித்துல குழந்தையை வைத்துக்கொண்டு இப்படி ஆடுறீங்க என்று கேட்டு இருந்தனர். இதனால்,கடுப்பான சமீரா, நான் பிரக்னன்ட்டாக இருக்கிறது எனக்கு தெரியும், என் குழந்தையை எப்படி பார்த்துக்குனும்னு எனக்கு தெரியும், என் குழந்தை மேல உங்களை விட எனக்கு அக்கறை இருக்கு என்று பதிவிட்டு இருந்தார். சமீராவின் இந்த பதிவு அப்போது பரபரப்பாக பேசப்பட்டது.


Click it and Unblock the Notifications











