விஜய் டிவி சீரியல் ஹீரோவுக்கு கெட்டிமேளம் கொட்டியாச்சு.. பொண்ணு யாரு தெரியுமா.. அட தங்கச்சி இவங்களா?
சென்னை: விஜய் டிவியின் வீட்டுக்கு வீடு வாசல்படி சீரியலில் கண்ணன் என்ற கேரக்டரில் நடித்துவரும் நடிகர் அவினாஷ் தன்னுடைய நீண்ட நாள் காதலியை தற்போது கரம் பிடித்துள்ளார். இவர்களது லவ் கடந்த 13 ஆண்டுகளாக தொடர்ந்த நிலையில் தற்போது தனக்கு திருமணமானதை இன்ஸ்டாகிராமில் மகிழ்ச்சியுடன் அவினாஷ் பகிர்ந்துள்ளார்.
தன்னுடைய திருமண தருணத்தின் புகைப்படங்களை அவினாஷ் பகிர்ந்துள்ள நிலையில் அவருக்கு திரைத்துறை மற்றும் சீரியல் பிரபலங்கள் மட்டுமில்லாமல் ரசிகர்களும் வாழ்த்துக்களை பகிர்ந்து வருகின்றனர். அவினாஷ் மட்டுமில்லாமல் அவரது தங்கை அக்ஷிதாவும் பாக்கியலட்சுமி சீரியலில் அமிர்தாவாக நடித்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

சீரியல் நடிகர் அவினாஷ்: நடிகர் அவினாஷ் தன்னுடைய சீரியல் பயணத்தை சன் டிவியின் அழகு சீரியலில்தான் துவங்கினார். இந்த சீரியலை தொடர்ந்து டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு ஏராளமான ரசிகர்களை தன்னுடைய நடனத்தால் கவர்ந்திருந்தார். இறுதிக்கட்டம் வரையில் இவரது டான்ஸ் தொடர்ந்த நிலையில், ஒருகட்டத்தில் பயிற்சியின்போது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டதால் அவரால் நிகழ்ச்சியில் தொடர முடியவில்லை. தொடர்ந்து இதனால் சில மாதங்கள் ஓய்வில் இருந்தார் அவினாஷ். தொடர்ந்து சீரியல்களில் நடிக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து சன் டிவியின் கயல் சீரியலிலும் அவினாஷ் அவரது தம்பியாக நடித்திருந்தார்.
வீட்டுக்கு வீடு வாசல்படி சீரியல் ஹீரோ: இதனிடையே கயல் சீரியலில் இருந்து பாதியில் விலகிய அவினாஷ் தற்போது விஜய் டிவியின் வீட்டுக்கு வீடு வாசற்படி சீரியலில் கண்ணன் என்ற கேரக்டரில் நடித்து வருகிறார். இந்த சீரியலில் திரவியம்தான் ஹீரோ என்ற போதிலும் இரண்டாவது ஹீரோவாக அவினாஷ் மாஸ் காட்டி வருகிறார். ஏராளமான ரசிகர்களின் இதயத்திலும் இடம் பிடித்துள்ளார். இந்நிலையில் அவர் தன்னுடைய நீண்ட நாள் காதலியை தற்போது திருமணம் செய்துள்ளார். இதன் கலர்ஃபுல் புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவினாஷ் பகிர்ந்துள்ளார். தங்களுடைய காதல் நட்பாக துவங்கி, காதலாக மாறி தற்போது கல்யாணத்தில் முடிந்துள்ளதாக அவர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

13 ஆண்டு காதலி: காதல் திருமணமாக இருந்தாலும் இரு வீட்டார் சம்மதத்துடன் இந்த திருமணம் சிறப்பாக நடந்துள்ளதாகவும் அவினாஷ் தன்னுடைய பதிவில் கூறியுள்ளார். இதையடுத்து இவர்களுக்கு சின்னத்திரை பிரபலங்கள் மட்டுமில்லாமல் ரசிகர்களும் தங்களது வாழ்த்துக்களை பகிர்ந்து வருகின்றனர். அவினாஷின் தங்கை அக்ஷிதாவும் சீரியல்களில் நடித்து வருகிறார். தற்போது பாக்கியலட்சுமி சீரியலில் அமிர்தாவாக எழிலின் மனைவியாக நடித்து வருகிறார் அக்ஷிதா. முன்னதாக வில்லியாக நடித்துவந்த இவர், பாக்கியலட்சுமி சீரியலில் பாசிட்டிவ் கேரக்டரில் நடித்து வருகிறார்.
பாக்கியலட்சுமி சீரியல் நடிகையின் அண்ணன்: காற்றுக்கென்ன வேலி சீரியலில் சூர்யாவின் தங்கையாக வெண்ணிலாவிற்கு வில்லியாக நடித்து ரசிகர்களின் திட்டுக்களை அதிகமாக வாங்கிக் கட்டிக் கொண்ட அக்ஷிதாவிற்கு தற்போது மிகவும் அழகான கேரக்டர் பாக்கியலட்சுமி சீரியலில் கிடைத்துள்ளது. இந்நிலையில் தன்னுடைய அண்ணனின் திருமணத்தை அக்ஷிதாவும் கொண்டாடி வருகிறார்.


Click it and Unblock the Notifications











