சரவணன் மீனாட்சி தலை தீபாவளிக்கு போறாங்க…!
தீபாவளி பண்டிகை நெருங்குவதால் புதியதாக திருமணமான தம்பதிகள் தலை தீபாவளிக்குப் போவார்கள். நெடுந்தொடர்களிலும் இப்போது தலைதீபாவளி சீன்கள் வைக்க ஆரம்பித்து விட்டனர். சின்னத்திரை ரொமான்ஸ் தம்பதியர் சரவணன் மீனாட்சி தலை தீபாவளிக்கு போவதுதான் இனி வரும் எபிசோடுகளின் ஸ்பெசல்...

நல்ல ஜோடிப் பொருத்தம்…
சரவணன் மீனாட்சி டிவி சீரியலை யாருமே தொடர் போல பார்ப்பதில்லையாம். பக்கத்து வீட்டில் நடக்கும் சம்பவம் போலத்தான் பார்க்கின்றனராம். சரவணனாக மிர்ச்சி செந்திலும் மீனாட்சியாக ஸ்ரீஜாவும் நிஜ காதலர்களா என்று கேட்கும் அளவிற்கு நடிப்பில் அசத்துகிறார்கள். சரவணன் மீனாட்சி ஜோடிப் பொருத்தம் சூப்பரா இருக்குல்ல என்பது இளசுகளின் கமெண்ட்.

நிச்சயதார்த்தம் கொண்டாட்டம்…
சரவணன் மீனாட்சியின் திருமண நிச்சயதார்த்தம், ஒரு விழாவாகவே கொண்டாடப்பட்டது. எண்ணற்ற ரசிகர்கள் முன்னிலையில் திருமணத்திற்குத் தேவையான உடைகள், நகைகளை தேர்வு செய்தது இந்த காதல் ஜோடி.

கல்யாண கலாட்டா…
சரவணன் மீனாட்சி ஜோடிக்கு திருமணம் நடந்ததே பயங்கர கலாட்டாதான். இருவருக்கும் சீக்கிரம் திருமணம் நடக்கவேண்டும் என்று சீரியல் ரசிகர்கள் கோவில்களில் வேண்டிக்கொண்டனராம். திருமணத்திற்காக பயங்கர கொண்டாட்டமாக இருந்தது. ஒரு வழியாக கல்யாணம் முடிந்து ஜோடிகளின் ரொமான்ஸ் இப்போது களை கட்டுகிறது.

இட்லி ஊட்டும் மீனாட்சி
இப்போது வீட்டில் இட்லி ஊட்டி விடுவதும் கொஞ்சுவதுமாய் பயங்கர ரொமான்ஸ்தான். இந்த ஜோடியின் காதல் காட்சிகளில் துளி கூட விரசம் இல்லை என்று பாராட்டுப் பத்திரம் வாசிக்கின்றனர் ரசிகர்கள்.

தலை தீபாவளிக்குப் போறாங்க…
சரவணன் மீனாட்சிக்கு ஜூலையில்தான் திருமணம் முடிந்தது. இப்போது தலை தீபாவளிக்கு அழைக்க வந்திருக்கின்றனர் மீனாட்சியின் பெற்றோர். ஜவுளிக்கடையில் ஆடைகள், நகைகள் வாங்குவதில் இருந்து ஒவ்வொரு விசயத்தையும் பார்த்துப் பார்த்து செய்கின்றனர் சீரியல் தயாரிப்பாளர்கள்.

அடுத்து எந்த ஜோடி?
இதேபோல் சன் டிவியில் நாதஸ்வரம் கோபி, மலர் ஜோடி தலை தீபாவளிக்கு போக வாய்ப்புள்ளது. இதுவரை தன்னுடைய பெற்றோர் குடும்பத்துடன் பிரச்சினையாக இருந்த மலர் இப்போது ராசியாகிவிட்டார். இப்போதுதான் இந்த ஜோடி விருந்துக்கு சென்று வந்திருக்கிறது. விரைவில் தலை தீபாவளிக்கு அழைப்பு வரலாம்.


Click it and Unblock the Notifications











