»   »  சரவணன் மீனாட்சி... ஒரே ரொமான்ஸ் மீனாட்சியா இருக்கே!

சரவணன் மீனாட்சி... ஒரே ரொமான்ஸ் மீனாட்சியா இருக்கே!

Posted By:
Subscribe to Oneindia Tamil
சரவணன் மீனாட்சி...ஒரே ரொமான்ஸ் மீனாட்சியா இருக்கே!- வீடியோ

சென்னை: சரவணன் மீனாட்சி சீசன் 3யில் பேய் எபிசோடுகள் முடிந்து விட்டன. இப்போது மீண்டும் ரொமான்ஸ், போட்டி பொறாமை ஆரம்பித்து விட்டது.

சரவணன் மீனாட்சி விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் மிக பிரபலமான தொடர். கடந்த 2011ம் ஆண்டு முதல் தற்போது 3வது சீசனாக ஒளிபரப்பாகி வருகிறது.

சரவணன் மீனாட்சி சீரியலின் முதன் பகுதியில் செந்தில் மற்றும் ஸ்ரீஜா இருவரும் இணைந்து நடித்து அந்த கதாபாத்திரத்திற்கே ஒரு முத்திரையை பதித்தனர்.

சரவணன் மீனாட்சி சீரியலின் இரண்டாவது பகுதியில் சரவணனான இர்பான் நடித்தார். அப்புறம் வெற்றி நடிக்க, வேட்டையன் கவின் மீனாட்சியை மணக்க, கவின் மற்றும் ரக்ஷிதா சீரியலை நகர்த்தினர்.

ரியோ - ரக்ஷிதா

ரியோ - ரக்ஷிதா

சரவணன் மீனாட்சி சீசன் 3 கடந்த ஜூலை முதல் ஒளிபரப்பாகி வருகிறது. கிராமத்தில் உள்ள சரவணன் வெளிநாட்டில் படித்து விட்டு வந்து மதுரையில் வசித்து வரும் மீனாட்சியை காதலித்து திருமணம் செய்து கொள்கிறார்.

அண்ணியான முத்தழகு

அண்ணியான முத்தழகு

மாமன் மகன் சரவணனை காதலித்த முத்தழகு கோபம் கொண்டு சரவணனின் அண்ணனை திருமணம் செய்து கொள்கிறாள். ஒரே வீட்டிற்குள் இருவரும் வசிக்க போட்டி, பொறாமை சண்டைகள் ஆரம்பிக்கின்றன.

பேய்கதையான சீரியல்

பேய்கதையான சீரியல்


சீரியல்களை பேய் சீசன் ஆரம்பிக்க சரவணன் மீனாட்சியையும் விட்டு வைக்கவில்லை.
மெஸ் வைப்பதற்காக மீனாட்சி குடும்பத்தினர் ஒரு வீட்டினை வாடகைக்கு பிடிக்க, அந்த வீட்டில் தூக்கு போட்டு இறந்து போன பெண்ணின் பேய் முத்தழகுவை பிடித்துக்கொள்கிறது. இது சரவணன் குடும்பத்தினரை ஆட்டி வைக்கிறது.

மீனாட்சிக்கு அம்மன் அருள்

மீனாட்சிக்கு அம்மன் அருள்

பேய் இருந்தால் சாமி வராமலா? சரவணன் மனைவி மீனாட்சிக்கு அம்மன் அருள் பிடிக்கிறது. அப்புறம் என்ன தனது குடும்பத்தினரை பழிவாங்க நினைக்கும் பேயிடம் இருந்து தனது குடும்பத்தை காப்பாற்ற போராடி ஜெயிக்கிறாள் மீனாட்சி.

அடடா தாங்க முடியலையே

அடடா தாங்க முடியலையே

பேய் சீசன் முடிந்த உடனேயே மறுபடியும் சரவணன் மீனாட்சியில் ரொமான்ஸ் ஆரம்பித்து விட்டது. முத்தழகு தனது கணவனுடன் ஒருபக்கம் ரொமான்ஸ் செய்ய, சரவணனின் ரொமான்ஸ் மீனாட்சி உடன் தொடர்கிறது.

போட்டியில் ஜெயிப்பார்களா?

போட்டியில் ஜெயிப்பார்களா?

சிறந்த தம்பதியர் யார் என்ற போட்டியில் முத்தழகு தம்பதியர் சொதப்பி விட சரவணன் மீனாட்சி தம்பதியர் ஜெயிக்கிறார்கள். இது முத்தழகுவிற்கு கோபத்தை ஏற்படுத்துகிறது. அடுத்தடுத்த போட்டிகளில் ஜெயித்தே ஆகவேண்டும் என்று கணவனுக்கு கண்டிசன் போடுகிறாள்.

ஏதோ நடக்கிறது

ஏதோ நடக்கிறது

சரவணன் மீனாட்சி சீரியலில் கதையையே காணோமே? கொஞ்சநாள் பேயை வைத்து ஓட்டினார்கள் மீண்டும் பழைய குருடி கதவை திருடி கதையாக வீட்டிற்குள்ளே போட்டி, பழிவாங்குதல் என்று ஆரம்பித்து விட்டனர். புதுசா ஏதாவது யோசிங்கலேம்பா.

English summary
Vijay TV telecast Serial Saravanan Meenakshi ghost episode finished, romance episode begins.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil