சீரியலா? இல்ல மிட் நைட் மசாலாவா?..இதெல்லாம் ரொம்ப ஓவர்..கடுப்பான இல்லத்தரசிகள்!

சென்னை : தமிழ் சேனல்களில் சின்னத்திரை ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருப்பது சீரியல்கள் தான். ரியாலிட்டி ஷோக்கள் ஒரு பக்கம் சேனல்களின் டிஆர்பி ரேட்டிங்கை உயர்த்தினாலும் , மீதி நேரங்களில் சேனல்களுக்கு துணை நிற்பவை சீரியல்களே.

சன் டிவி, விஜய்டிவி, ஜீ தமிழ், கலர்ஸ் டிவி, கலைஞர் டிவி என்று பல்வேறு தொலைக்காட்சியின் அச்சாரமாக இருக்கும் சீரியல் ரசிகர்களை தக்க வைத்துக்கொள்ள புதிது புதிதாக யோசித்து வருகின்றனர்.

இனிமேலும், குடும்ப சென்டிமென்ட் காட்சிகளை வைத்து கதையை நகர்த்தினால் வேலைக்கு ஆகாது என யோசித்த இயக்குநர் அதிரடியாக ரொமான்ஸ் காட்சியை கையில் எடுத்துள்ளனர். இதன் மூலம் இளசுகளை எப்படியாவது சீரியல் பக்கம் இழுத்துவிடலாம் என்ற திட்டமா கூட இருக்கலாம்.

கண்ணான கண்ணே

கண்ணான கண்ணே

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர் கண்ணான கண்ணே இந்த சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. பலவிதமான பிரச்சனைகளுக்குப் பிறகு காதலித்து திருமணம் செய்து கொண்ட கதாநாயகன் மற்றும் கதாநாயகி இருவரும் ரொமான்ஸில் எல்லை மீறிய காட்சி கடந்த வாரம் ஒளிபரப்பானது.

சீரியலா ...இல்ல

சீரியலா ...இல்ல

நாயகனும், நாயகியும் தனிமையில் இருக்கும் முதல் இரவு காட்சியை ஒரு பாடலோடு அப்படியே ஒரு எபிசோடு புல்லா எடுத்துள்ளார்கள். திரைப்படத்தில் இப்படி காட்சி வரும் என்று பார்த்தால் குடும்பத்தோடு அமர்ந்து பார்க்கும் நேரத்தில் இல்லத்தரசிகள் அனைவரையும் முகம் சுளிக்க வைத்துவிட்டது. இது சீரியல் தானா இல்ல மிட் நைட் மசாலாவா என யோசிக்கவைத்துவிட்டது.

அம்மாடி அம்மாடி

அம்மாடி அம்மாடி

இது சரிப்பட்டு வராதுனு வேற சேனலை மாத்துனா அங்கேயும் "அம்மாடி அம்மாடி நெருங்கி ஒரு தரம் பாக்கவானு" ஒருமுதல் இரவு காட்சி.. இது என்னடா வம்பா போச்சு இது என்ன.. முதல் இரவு வாரமா..இல்லை ஒரு குரங்கு தொப்பியை கழட்டினால் அனைத்து குரங்கும் தொப்பியை கழட்டுவது போல இனி வரும் அனைத்து சீரியலிலும் முதல் இரவு காட்சி வீரியத்தோட இருக்குமோ என்று யோசிக்க வைக்கிறது.

தென்றல் வந்து என்னை தொடும்

தென்றல் வந்து என்னை தொடும்

விஜய் டிவியில் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வந்த தென்றல் வந்து என்னை தொடும் சீரியலில் தான் இந்த கசமுசா. அமெரிக்காவில் படித்துவிட்டு சொந்த ஊருக்கு வரும் கதாநாயகியின் கழுத்தில் ஒரு ரவுடி எதிர்பாராத விதமாக தாலி கட்டி விடுகிறார். அந்த தாலி சும்மா கட்டி இருந்தாலும் அவர் தான் தன்னுடைய புருஷன் என நினைத்து வாழ்கிறார் அந்த பெண். இந்த சீரியல் ஆரம்பிக்கும் போதே தாலி கட்டும் பிரச்சனைக்காக சர்ச்சையில் சிக்கியது.

அம்மாடி அம்மாடி

அம்மாடி அம்மாடி

பல போராட்டங்களுக்கு பிறகு இருவரும் இப்போதுதான் மன ஒத்த தம்பதிகளாக வாழ்க்கையை தொடங்க உள்ளனர் அதற்குத்தான் இந்த அம்மாடி அம்மாடி என்ற ரொமான்ஸ் பாடல். இவர்களுக்கு முதல் இரவு நடக்கிறது. இந்த எபிசோடுகள் தான் தற்பொழுது ஒளிபரப்பாகி வருகிறது. இவர்களின் ரொமான்சை பார்த்து ரசிகர்கள் இதெல்லாம் ரொம்ப ஓவர் என்றும், டிஆர்பி ரேட்டுக்காக என்ன வேணும்னாலும் செய்வீங்களா ? சீரியல் நல்ல போகனும்னா புதுசா எதையாவது யோசிக்க என கழுவி ஊற்றி வருகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X