ராஜு மிஸ்டர் பீன் போன்றவர்... உலகநாயகனுடன் விரைவில் இணைவேன்... இமான் அண்ணாச்சி பளீச்

சென்னை : விஜய் டிவியில் பிக் பாஸ் நிகழ்ச்சி கலகலப்பாக செல்வதற்கு முக்கிய காரணமாக அமைந்தார் இமான் அண்ணாச்சி.

முன்னதாக சிறப்பான பல படங்களில் தனக்கே உரிய மொழியுடன் நடித்துள்ள இவருக்கு இந்த நிகழ்ச்சி மேலும் ஏற்றத்தை கொடுள்ளது.

பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியில் வந்தபின்பு முதல்முறையாக ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து இமான் பேசியுள்ளார்.

பிக் பாஸ் தமிழ் சீசன் 5 நிகழ்ச்சி

பிக் பாஸ் தமிழ் சீசன் 5 நிகழ்ச்சி

விஜய் டிவியின் பிக் பாஸ் நிகழ்ச்சி தற்போது நடைபெற்று வருகிறது. நிகழ்ச்சியில் பிக் பாஸ் வீட்டை கலகலப்பாக வைத்திருந்ததில் முக்கிய பங்கு வகித்து வந்தார் இமான் அண்ணாச்சி. அவருடைய செயல்பாடுகள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

இமான் அண்ணாச்சி வெளியேற்றம்

இமான் அண்ணாச்சி வெளியேற்றம்

இதனிடையே 68 நாட்களுக்கு பிறகு பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார் இமான். இவருக்கு வருண் மற்றும் ராஜூவுடன் நல்ல நட்பு ஏற்பட்டிருந்தது. இவரது வெளியேற்றத்திற்கு ரசிகர்கள் கண்டனம் தெரிவித்த சம்பவமும் நடைபெற்றது. பிக் பாஸ் வீட்டிற்கு உள்ளேயும் வெளியில் ரசிகர்களிடையேயும் இந்த நிகழ்ச்சி சிறப்பான வரவேற்பை பெற்றுத் தந்துள்ளதாக இமான் தற்போது கூறியுள்ளார்.

ரசிகர்கள் கேள்விகளுக்கு பதில்

ரசிகர்கள் கேள்விகளுக்கு பதில்

தனது வெளியேற்றத்திற்கு பிறகு ரசிகர்களின் கேள்விகளுக்கு முதல் முறையாக பதிலளித்து பேசிய இமான், தனக்கு சிறிய இடங்களில் எல்லாம் ஏராளமான ரசிகர்களை பெற்றுத் தந்துள்ள பிக் பாஸ் நிகழ்ச்சிக்கும் விஜய் டிவிக்கும் நன்றி தெரிவித்துக் கொண்டுள்ளார்.

ராஜூவுக்கு தான் டைட்டில்

ராஜூவுக்கு தான் டைட்டில்

ராஜூவிற்கு சிறப்பான எதிர்காலம் உள்ளதாகவும் எதையும் வெளிப்படையாக பேசுபவர் அவர் என்றும் அவரிடம் எந்த ரகசியமும் இல்லை என்றும் இமான் கூறியுள்ளார். மேலும் டைட்டிலை ராஜூதான் வெற்றிக் கொள்வார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மிஸ்டர் பீன் போன்றவர் ராஜூ

மிஸ்டர் பீன் போன்றவர் ராஜூ

அதிகமான திறமைகள் அவரிடம் உள்ளதாகவும் நல்ல காமெடி சென்ஸ் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஒரு இயக்குநருக்கான அனைத்து திறமையையும் அவர் கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மிஸ்டர் பீன் போன்ற திறமை கொண்டவர் ராஜூ என்றும் கூறியுள்ளார்.

ஸ்கிரிப்ட் தேவையில்லை

ஸ்கிரிப்ட் தேவையில்லை

பிக் பாஸ் நிகழ்ச்சியில் தன்னுடைய வெளியேற்றத்தின்போது ராஜூ குலுங்கிக் குலுங்கி அழுததையும் அவர் நினைவு கூர்ந்துள்ளார். மேலும் பிக் பாஸ் வீட்டிற்குள் ஸ்கிரிப்ட் தேவையில்லை என்றும் ஒரு டாஸ்க் கொடுக்கப்படும் நிலையில் அதை ஜாலியாக எதிர்கொண்டு செய்ய வேண்டியது மட்டுமே முக்கியம் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

பிக் பாஸ் பார்க்கவில்லை

பிக் பாஸ் பார்க்கவில்லை

பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய பின்பு மட்டன் குழம்புடன் தன்னை தனது வீட்டார் எதிர்கொண்டதையும் மகிழ்ச்சியுடன் அவர் நினைவு கூர்ந்துள்ளார். மேலும் அங்கிருந்து வெளியேறிய பின்பு அடுத்தடுத்து படத்தின் கதை டிஸ்கஷனுக்காக நேரம் செலவழித்து வருவதால் பிக் பாசை பார்க்கவில்லை என்றும் கூறியுள்ளார்.

100% கமலுடன் நடிப்பேன்

100% கமலுடன் நடிப்பேன்

பிக் பாஸ் இல்லத்தில் உலக நாயகன் தெரிவித்ததை போல விரைவில் உலகநாயகனுடன் இணைந்து படத்தில் நடிப்பேன் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். 100 சதவிகிதம் இது நடக்கும் என்றும் அவர் கூறியுள்ளார். தான் நடிக்காத 6 -7 நாயகர்களுடன் விரைவில் இணைந்து நடிப்பேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X