வடிவேலு “வில்லு“ மாடசாமி கெட்டப்பில் சிவாங்கி… காலரை தூக்கிவிட்டு கெத்தா போஸ்!
சென்னை : விஜய் தொலைக்காட்சி புகழ் சிவாங்கி வில்லு பட வடிவேலுவின் மாடசாமி கெட்டப்பில் போஸ் கொடுத்துள்ளார்.
சிவாங்கியின் கெட்டப்பை பார்த்த ரசிகர்கள் அவருக்கு லைக்குகளை போட்டு தாக்கி வருகின்றனர்.
வடிவேலுவின் தீவிர ரசிகையான சிவாங்கி சமீபத்தில் புலிகேலி கெட்டப்பை போட்டிருந்தார். தொடர்ந்து வடிவேலுவின் கெட்டப்பை போட்டு வருகிறார்.

குக் வித் கோமாளி
விஜய் டி.வி.யில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி சீசன் 3 நிகழ்ச்சி ரசிகர்களிடையே பெரும் அளவு வரவேற்பை பெற்றுள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு, குக் வித் கோமாளி சீசன் 1 வெளியானதை தொடர்ந்து மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. குறிப்பாக அதில் கோமாளிகளாக வந்த புகழ், பாலா, ஷிவாங்கி, மணிமேகலை, தங்கதுரை, பிஜிலி ரமேஷ் உள்ளிட்டோரின் அட்டகாசத்தை ரசித்தனர்.

குக் வித் கோமாளி வின்னர்
குக் வித் கோமாளி நிகழ்ச்சி, தமிழ் நாட்டின் ஸ்ட்ரெஸ் பஸ்டர் என புகழ் பெற்றது. முதல் சீசனில் நடிகை வனிதா விஜயகுமார் டைட்டிலை வென்றார், இரண்டாவது சீசனில் அகத்தியனின் மகள் கனி டைட்டிலை தட்டிச்சென்றார். இந்த நிகழ்ச்சியின் மூலம் அஸ்வின் பிரபலம் அடைந்தார்.

வடிவேலு கெட்டப்
குக்வித் கோமாளி சீசன் 3 அதே கலகலப்புடன் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த கோமாளியாக வரும் சிவாங்கி விஜய் நடித்த வில்லு திரைப்படத்தில் மாடசாமி கதாபாத்திரத்தில் வரும் வடிவேலு கெட்அப்புடன் காலரை தூக்கிவிட்டு கலக்கலாக போஸ் கொடுத்துள்ளார். இந்த புகைப்படத்தைப்பார்த்த ரசிகர்கள் லைக்குகளை போட்டு தாக்கி வருகின்றனர்.

டான்
சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பாடகியாக வந்த சிவாங்கிக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் கூட்டம் உண்டு. சிவகார்த்திகேயன் கல்லூரி மாணவாக நடிக்கும் படத்தில் சிவாங்கி நடித்துள்ளார். இத்திரைப்படம், மே 13ந் தேதி திரையரங்கில் வெளியாக உள்ளது.


Click it and Unblock the Notifications











