எப்படி இருந்த நீங்க இப்படி ஆகிட்டீங்களே.. செம்ம டோஸ் விடும் சுருதி.. சந்திரமுகியாக மாறிய ரோகினி
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்கும் ஆசை சீரியல் பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஓடிக்கொண்டிருக்கிறது. முன்பை விட விஜயா வீட்டில் அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்போடு ரசிகர்களும் காத்திருக்கின்றனர். ரோகினி பொய் சொல்லி மாட்டிக்கொண்ட நிலையில், அவரை விஜயா என்னென்ன டார்ச்சர் செய்ய போகிறாரோ? அதை நினைத்தால் தான் கதிகலங்குகிறது. இது ஒரு பக்கம் இருந்தாலும் முத்து விஜயாவை பாட்டு பாடி டோஸ் விடுவது என அனல் பறக்கிறது.
சிறகடிக்க ஆசை சீரியலில் ரோகினி பணக்கார பெண் இல்லை என்றும் அவரது மாமாவாக நடித்தவர் யார் என்ற விவரமும் வீட்டிற்கு தெரிந்துவிட்டது. வீட்டிற்கு வந்த விஜயா ரோகினி கண்டபடி திட்டிவிட்டு தாறுமாறு வெளுக்க தொடங்கினார். இதை பார்த்துக்கொண்டிருந்த அவரது மாமியார் விஜயா நீ பன்றது ரொம்ப தப்பு வீட்டுக்கு வந்த மருமகளை இப்படி அடிக்காதே. அவ செய்தது தப்பாவே இருந்தாலும், அதற்கு நீயும் ஒரு காரணமா இருந்திருக்க என விஜயா மாமியார் அட்வைஸ் செய்தார். ஆனால் என்னாலே பொறுத்துக்க முடியலை அத்தை இவளை நான் எவ்ளே நம்புனேன். என்னை ஏமாத்திட்டாளே, நான் கூட்டி வந்த பொண்ணு சொல்லி மீண்டும் ரோகினியை அடிக்க பாய்ந்தார் விஜயா.

மனோஜ் கொடுத்த ட்விஸ்ட்: அப்போது மனோஜ் தனது அம்மாவிடம் ரோகினியை அடிக்காதீங்க இந்த விசயம் எனக்கு ஏற்கனவே தெரியும். அப்படி பார்த்தால் என்னையும் நீங்கள் அடிக்க வேண்டும் என மனோஜ் கூறியதும் வீட்டில் இருந்த அனைவரும் ஷாக் ஆனார்கள். என்ன சொல்ற மனோஜ் என்று அவரது அப்பா சுந்தர்ராஜன் கேட்க, கொஞ்சம் தயங்கியபடியே மனோஜ் ஆமாப்பா எனக்கு எல்லாம் தெரியும். ஏற்கனவே ரோகினி சொன்ன பொய்யால அம்மா அவளை அடித்து வீட்டை விட்டு துரத்திட்டாங்க. இப்ப மறுபடியும் இது தெரியவந்தால் கோபமாக நடந்துக்குவாங்க என்று நினைத்து சொல்லாமல் இருந்துவிட்டேன் என மனோஜ் கூறுகிறார். பிறகு இருவர் செய்த தவறை அண்ணாமலையும் அவரோட அம்மாவும் மன்னித்தாலும், விஜயா விடுவதாக இல்லை.
ரோகினியை வெறுக்கும் விஜயா: ரோகினியை கண்டாலே வெறுக்கும் விஜயா அவர் பக்கமே செல்லக்கூடாது என்று மனோஜிடம் விஜயா கூறுகிறார். அம்மா சொல்லை தட்டாத மனோஜ் விஜயா சொல்வதை கேட்டு தலையாட்டுகிறார். நேற்று வெளியான புரோமோவில் ரோகினியை கடைக்குள் வர விடாதே. அவள் எந்த நேரத்தில் எதை வேண்டும் என்றாலும் செய்யலாம். நான் சொல்வது புரிகிறதா என ஆணவமாக மனோஜிடம் கூறும் போது ரோகினி அவர்கள் பேசுவதை கேட்டு கண்ணீர் விட்டு அழுகிறார். இப்படி ஒவ்வொரு நாளும் பரபரப்புடன் காட்சிகள் நகர்கின்றன. ரோகினிக்கு ஆதரவாக மனோஜ் பேசியிருந்தாலும் ரோகினி சொன்ன பொய்யை அவரால் ஏற்க முடியவில்லை. மனோஜூம் மனதளவில் காயத்தோடு தான் சுற்றி கொண்டிருக்கிறார்.

பாட்டு பாடி டோஸ் விடும் முத்து: ரோகினி பணக்கார பெண் என்று பொய் மாட்டிக்கொண்ட பிறகு முத்துவின் ஆட்டம் கொஞ்சம் ஓவராத்தான் போய்க்கொண்டிருக்கிறது. சும்மாவே ஆடுவாறு இப்போ சலங்கை கட்டி விட்டாச்சு விடுவானா. மீனா ஏழை வீட்டு பெண் என்பதால் அவரை விஜயா மிகவும் தரக்குறைவான வார்த்தைகளால் திட்டி, அதட்டி வேலை வாங்குவார். பணக்கார பெண் என்று நம்பி ரோகினி செய்த தவறுக்கெல்லாம் சப்போர்ட் செய்து வந்த விஜயாவின் முகம் தற்போது வாடி கிடக்கிறது. ரொம்ப பல்ப் வாங்கி இருக்கும் இந்த நேரத்தில் முத்து பழைய பாடல்களை பாடி டோஸ் விட்டார். ஆடிய ஆட்டம் என்ன... பேசிய வார்த்தை என்ன..தேடிய செல்வம் என்ன என்ன என்று பாட்டு பாடி விஜயாவை வெறுப்பேத்தியுள்ளார். முத்து பேசும் பேச்சுக்கெல்லாம் பதில் பேசும் விஜயா.. அவன் பாடும் பாட்டை கேட்டு வார்த்தைகளால் சொல்ல முடியாமல் முகம் வாடி போனது.
பழிக்குப் பழி: ஆனாலும் ரோகினி திருந்தவில்லை. மீனாவும் முத்துவும் சேர்ந்து தன்னை பற்றிய உண்மைகளை போட்டு கொடுத்ததால் இவர்களை பழிவாங்க அடுத்து என்ன பிளான் வைத்திருக்கிறார் என்பதும் மேலும் ஆர்வத்தை கூட்டியுள்ளது. விஜயா கெடுபிடியாக இருப்பது ரோகினிக்கு சோகம் தான். தொடர்ந்து பணம் கேட்டு டார்ச்சர் செய்ததால் தனது தோழியுடன் சேர்ந்து ரோகினி பார்லரை விற்றுள்ளார் என விஜயாவிடம் தெரிவித்திருக்கிறார். பலநாள் ரகசியம் வெளியே வந்திருக்கிறது. ரோகினியின் அடுத்த பொய் எப்போது தெரிய வருமோ அதுதான் சீரியலின் க்ளைமாக்ஸ் ஆக இருக்கும். இரண்டாவது திருமணம், ரோகினியின் குழந்தை விஷயத்தை எப்படியும் முத்துவும் மீனாவும் கண்டு பிடித்துவிடுவார்கள் என்னதான் நடக்கிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

க்ளைமாக்ஸ்: சிறகடிக்க ஆசை சீரியல் மற்ற சீரியல்களை காட்டிலும் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்து வருகிறது. இந்த சீரியலில் இருக்கும் பட்ட பெயர்களும் மிகவும் ஃபேமஸ் ஆகியுள்ளது. பார்லர் அம்மா, ஓடுகாளி 1, ஓடுகாளி 2, பலகுரல் சுருதி என ஒவ்வொருவருக்கும் முத்து சிவைக்கும் பட்டப்பெயர்கள் அட்டகாசமாக பொருந்தியிருக்கிறது. முத்து சொன்னால் அது நன்றாகத்தான் இருக்கிறது என பார்வையாளர்களே தெரிவித்திருக்கின்றனர். இதுவரை இல்லாத அளவிற்கு கடந்த வாரம் டாப் ரேட்டிங்கில் முதலிடம் சிறகடிக்க ஆசை சீரியல் தான் பிடித்திருக்கிறது. அதற்கு காரணம் ரோகினி தான். இதுவரை மாட்டாமல் தப்பித்து வந்த ரோகினி கையும் களவுமாக சிக்கியதால் டிஆர்பி எகிறியிருக்கிறது.
இந்நிலையில், சிறகடிக்க ஆசை சீரியல் இதுவரை 700 எபிசோடுகளை தாண்டி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த சீரியலின் வசனகர்த்தா சம்பத்குமார் அண்மையில் அளித்த பேட்டியில் மொத்தம் 1300 எபிசோடுகள் வரை செல்லும் என்று எதிர்பார்க்கிறோம். இதன் பிறகு சீரியலுக்கு கிடைக்கும் வரவேற்பு, கதையின் தன்மை பொறுத்தே அடுத்தக்கட்டத்தை பற்றி யோசிக்க முடியும். பார்ப்போம் எது வேண்டும் என்றாலும் நடக்கலாம் என சம்பத்குமா தெரிவித்திருக்கிறார்.
ரோகினிக்கு இப்படி ஒரு நிலையா: தற்போது வெளியாகியிருக்கும் புரோமோவில் ரோகினி சமைத்துக்கொண்டிருக்க. அதை பார்த்த மீனா என்ன ரோகினி நீங்க சமைக்கிறீங்க. விடுங்க நான் பார்த்துக்கொள்கிறேன் என்று கூறுகிறார். அப்போது அங்கு வந்த சுருதி ரோகினியை பார்த்து ஆன்டி இப்போ ரோகினிக்கு வேற டிபார்ட்மெண்ட் வேலை ஒதுக்கிட்டாங்க போல. எப்படி இருந்த ரோகினி இப்படி ஆகிட்டீங்களே என கூற ரோகினி கடுகடுத்த முகத்தில் இருக்கிறார். எரியும் நெருப்பில் எண்ணெய்யை ஊற்றுவது போல் சுருதியின் பேச்சு இருக்கிறது. ரோகினிக்கு இப்படி ஒரு நிலையா என ரசிகர்கள் கமெண்ட் பதிவிடுகின்றனர்.


Click it and Unblock the Notifications











