விஜய் டிவியின் ஸ்டார்ட் மியூசிக் சீசன் 3 நிகழ்ச்சி... இந்த வாரம் ரஜினி ஸ்பெஷல்!
சென்னை : விஜய் டிவியின் ஸ்டார்ட் மியூசிக் சீசன் 3 நிகழ்ச்சி மிகவும் ஸ்பெஷலானது.
இந்த நிகழ்ச்சியில் இந்த வாரம் ரஜினிகாந்த் பிறந்தநாள் ஸ்பெஷலாக நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளது.
இதற்கான ப்ரமோவை விஜய் டிவி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு உள்ளது.

ரஜினி பிறந்தநாள்
நடிகர் ரஜினிகாந்த் இந்த மாதத்தில் தனது பிறந்தநாளை கொண்டாட உள்ளார். அவரது அண்ணாத்த படம் சமீபத்தில் வெளியாகி வெற்றி பெற்றுள்ளது. இந்நிலையில் அவரது இந்த பிறந்தநாள் மிகவும் சிறப்பானதாக பார்க்கப்படுகிறது.

சிறப்பான கொண்டாட்டம்
வழக்கமாக ரஜினி ரசிகர்கள் அவரது பிறந்தநாளை தடபுடலாக ஏற்பாடு செய்வார்கள். பல்வேறு நிகழ்ச்சிகளையும் அவர்கள் செய்வார்கள். இந்நிலையில் இந்த மாத இறுதியில் வரும் ரஜினியின் பிறந்த நாளும் சிறப்பான கொண்டாட்டத்துடன் அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தொலைக்காட்சிகளில் சிறப்பு நிகழ்ச்சிகள்
ரஜினியின் பிறந்த நாளையொட்டி பல்வேறு தொலைக்காட்சிகளிலும் சிறப்பு நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகும். அந்த வகையில் விஜய் டிவியின் ஸ்டார்ட் மியூசிக் சீசன் 3 நிகழ்ச்சியில் இந்த வாரம் ரஜினி ஸ்பெஷல் நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளது.

ஸ்டார்ட் மியூசிக் நிகழ்ச்சி
ஸ்டார்ட் மியூசிக் இன் கடந்த 2 சீசன்களை தொகுத்து வழங்கினார் பிரியங்கா. இந்நிலையில் அவர் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளதால் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார் மாகாபா. இந்த நிகழ்ச்சி வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை இரவு 8 மணிக்கு விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது.

ரஜினி ஸ்பெஷல்
இந்த நிகழ்ச்சி இந்த வாரம் ரஜினிகாந்த் பிறந்தநாள் ஸ்பெஷலாக ஒளிபரப்பாக உள்ளது. நிகழ்ச்சியில் சின்னி ஜெயந்த், உமா மகேஸ்வரி, தினேஷ் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

ப்ரமோ வெளியீடு
இதன் பிரமோவை தற்போது விஜய் டிவி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு உள்ளது. அதில் பல்வேறு விஷயங்கள் ரஜினி குறித்து ஒளிபரப்பாக உள்ளது தெரிய வருகிறது.

ரஜினியின் பஞ்ச் டயலாக்குகள்
ரஜினியின் பஞ்ச் டயலாக்குகள் உள்ளிட்டவற்றையும் நிகழ்ச்சியில் பங்கேற்கும் நடிகர்கள் பேசி ரசிகர்களை மகிழ்வித்து உள்ளனர். மேலும் ரஜினியின் பாடல்களை வைத்தும் நிகழ்வுகள் திட்டமிடப்பட்டுள்ளன.

ரசிகர்கள் ஆர்வம்
மொத்தத்தில் ரஜினியின் பிறந்தநாள் ஸ்பெஷலாக ஒளிபரப்பாக உள்ள இந்த நிகழ்ச்சி ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டும் வகையில் இருக்கும் என்று எதிர்பார்க்கலாம். பிரமோவை கொண்டு இதை ஓரளவு யூகிக்க முடிகிறது.


Click it and Unblock the Notifications











