லவ்வரை எதுவுமே பண்ணலனா.. அப்புறம் எதுக்குடா லவ் பண்ற.. சூப்பர் சிங்கர் மேடையை அலற விட்ட மிஷ்கின்
சென்னை: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் வெற்றிகரமான நிகழ்ச்சிகளில் ஒன்று சூப்பர் சிங்கர். இதுவரை 10 சீசன்கள் முடிந்து 11 வது சீசனில் உள்ளது. 11வது சீசனும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த சீசனில் போட்டியாளர்கள் பாடல்கள் பாடுவது சுவாரஸ்யம் என்றால், நடுவர்கள், போட்டியாளர்கள், தொகுப்பாளர்களுக்கு இடையில் நடைபெறும் உரையாடல் மேலும் சுவாரஸ்யத்தை ஏற்படுத்துகிறது.
இப்படி இருக்கும்போது, இந்த சீசனில் ரசிகர்களுக்கு அதிகப்படியான சுவாரஸ்யத்தை ஏற்படுத்தும் நடுவர்களில் ஒருவர் இயக்குநர் மிஷ்கின். இவரது ரியாக்ஷன்கள் மற்றும் பாடல்களுக்கான விமர்சனங்கள் என அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படி இருக்கும்போது இந்த வார எபிசோடில் போட்டியாளர் சரணிடம் அவரது காதல் கதை குறித்து தொகுப்பாளர்களான பிரியங்கா மற்றும் மா.கா.பா. ஆனந்த் கேட்டனர்.
அதாவது நீ காதலித்து இருக்கிறாயா சரண்? உனது காதல் கதையைச் சொல்லு என்று கேட்டார்கள். அப்போது போட்டியாளர் சரண் கூறுகையில், நான் ஒரு பெண்ணை காதலித்தேன். அவரும் என்னை காதலித்தார். அதன் பின்னர் என்ன என்று தெரியவில்லை அவர் என்னை வேண்டாம் என்று கூறிவிட்டு பிரேக்-அப் செய்து விட்டு சென்றுவிட்டார் என்று கூறினார்.

லவ் பிரேக் -அப்: இவர் இப்படிச் சொன்னதும் பிரியங்கா உடனே இவ்வளவு நல்ல பையனை ஏன் அந்த பெண் பிரேக் - அப் செய்து விட்டுப் போனார் என்று கேட்டார். மேலும் அந்த பெண் உன்னை பிரேக்-அப் செய்துவிட்டுப் போகும் அளவுக்கு நீ என்ன செய்தாய் என்று மா.கா.பா. ஆனந்த் கேள்வி கேட்டார். அதற்கு போட்டியாளர் சரண், நான் எதுவுமே செய்யவில்லை என்று கூறினார்.
மிஷ்கின் கமெண்ட்: உடனே சிரித்த மா.கா.பா. ஆனந்த் மற்றும் பிரியங்கா, மிஷ்கினை நோக்கி, மிஷ்கின் சார் சரண் லவ் பண்ண பொண்ண எதுவுமே செய்யலயாமா சார் என்று கூறினார்கள். உடனே வேகமாக பேசிய மிஷ்கின், என்னது லவ் பண்ண பொண்ண எதுவுமே செய்யலையா? அவனை மலை மேலே இருந்து கீழே தள்ளிவிட்டு விடு என்று கூறினார். இவர்கள் இவ்வாறு பேசியது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது, இது தொடர்பான வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.


Click it and Unblock the Notifications











