twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    அலுவலக கதையை அப்படியே சொல்லும் விஜய் டிவி ‘ஆபிஸ்’

    By Mayura Akilan
    |

    பள்ளி, கல்லூரி என்று கலக்கல் சீரியல்களை ஒளிபரப்பி வரும் விஜய் டிவி இப்போது ஆபிஸ் சீரியலை புதிதாக தொடங்கியுள்ளது.

    கல்லூரி முடித்துவிட்டு காம்பஸ் இண்டர்வியூவில் செலக்ட் ஆனவர்கள் புதிதாக ஆபிஸ் செல்வதுதான் கதை. வாழ்க்கையே ஆபிஸ் என்றான பின்னர், நட்பு, காதல் என ஆபிசில்தான் நகர்கிறது.

    நகரமும் கிராமமும்

    நகரமும் கிராமமும்

    நகரத்தில் படித்து வேலைக்குப் போகும் பையன்கள், கிராமத்தில் இருந்து வேலைக்குப் போகும் ஸ்ருதி என கதை லைவ் ஆக நகர்கிறது.

    முதல்நாளில் ஜாலி பட்டாசு

    முதல்நாளில் ஜாலி பட்டாசு

    கார்த்திக், மதன், விஷ்ணு என மூன்று நண்பர்கள் ஒரே அலுவலகத்தில் வேலைக்கு சேர்கின்றனர்.

    முதல்நாளில் வேலைக்குச் சேரும் போது அப்ளிகேசன் நிரப்புவதும், கையெழுத்துப் போடுவதும் முதன் முதலாக நிறுவனத்தில் வேலை சேரும் போது ஏற்பட்ட அனுபவங்களை தருகிறது.

    நண்பன் கார்த்திக்கைப் பார்த்து காப்பியடிக்கும் நண்பன் விஷ்ணு அட்ரஸைக்கூட காப்பியடிக்கிறான்.

    22 எபிசோடுகள்

    22 எபிசோடுகள்

    பொட்டு வைத்து விபூதி குங்குமம் பூசி டிபிகல் கிராமப் பெண்ணாக உள்ளே நுழைகிறாள் ஸ்ருதி. சிக்னலில் பார்த்த முகம் ஆபிசில் பார்க்கநேரிடுவதை எண்ணி குழப்பத்துடனே நுழைகிறாள் ஸ்ருதி. இதுவரை 22 எபிசோடுகளை கடந்துள்ளது ஆபிஸ்.

    காதல் பத்திக்கிச்சா

    காதல் பத்திக்கிச்சா

    விஷ்ணுவுக்கும், லட்சுமிக்கும் காதல் என்று கார்த்திக்கிடம் கூறுகிறார் ஸ்ருதி. அவள் சொன்னது போலவே இருவருக்கும் காதல் என்பது உறுதியாகிறது.

    இவங்க பண்ற எல்லாமே நாமளும் பண்றோம். நமக்குள்ளே என்று யோசிப்பதாக கூறுகிறான் கார்த்திக். அதைக் கேட்டு வெட்கத்தில் ஸ்ருதியின் முகம் சிவக்கிறது.

    சூசன் இதில் பாஸ்

    சூசன் இதில் பாஸ்

    'தென்றல்' தொடரில் கல்லூரி மாணவியாக வந்த ஸ்ருதிதான் ஆபிஸ் தொடரின் கிராமத்து கதாநாயகி. 'ஆபீஸ்' சீரியலில் சௌந்தர்யா, விஷ்ணு, கார்த்திக்னு புதிய நண்பர்களாம் ஸ்ருதிக்கு. 'தென்றல்' தொடரில் கல்யாணியாக வரும் சூசன்... இந்த சீரியலில் அனைவருக்கும் பாஸ் ஆக கலக்குகிறார். கலகலப்பாக போகிறது ஆபிஸ்.

    ஜாலியாக பார்க்கலாம்

    ஜாலியாக பார்க்கலாம்

    இந்த தொடரைப் பற்றி சின்னச் சின்ன விமர்ச்சனங்கள் எழாமல் இல்லை. 8 மணி நேரமும் , பெண்களை பார்த்த படி, அல்லது பெண்களுடன் வேலைக்கு சேர்ந்த முதல் நாளே சண்டையிட்டவாறு, நண்பரிடம் அரட்டை அடித்தவாறு எங்கு சார் இருப்பாங்க? என்று கேட்கின்றனர்.

    பாலிடிக்ஸ் பத்தி சொல்லலாம்

    பாலிடிக்ஸ் பத்தி சொல்லலாம்

    எப்பவாவது அலுவலகத்தில் வேலை செய்தவரை விட்டு திரைக்கதை ,வசனம் எழுத சொல்லலாம். டயலாக் கொஞ்சம் டிராமத்தனமாக இருக்கிறது என்கின்றனர்.

    ஆபிஸ் அங்குள்ள பாலிடிக்ஸ் என்பது மிக பெரிய கதைக்களம். அதை எவ்வளவு சொதப்ப முடியுமோ அவ்வளவு சொதப்பியிருப்பதாகவும் கூறுகின்றனர். ஆனாலும் ஜாலியாக பார்க்கலாம்.

    English summary
    Vijay tv telecast new serial office The Serial Which tell about how we r in Office.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X