தப்பு தப்பா வீடியோ போடுறாங்க?.. ரக்‌ஷனுக்கும் எனக்கும் என்ன தொடர்பு.. ஓபனாக பேசிய ஜாக்குலின்!

சென்னை: விஜய் டிவியின் பிரபல தொகுப்பாளினி ஜாக்குலின் விஜய் டிவி பிரபலங்களுடன் தன்னை தொடர்புபடுத்தி யூடியூப் சேனல்களில் மோசமான வீடியோக்கள் வெளியாவதாக அதிர்ச்சி தகவலை கூறியுள்ளார். மேலும், விஜய் டிவி தொகுப்பாளர் விஜே ரக்‌ஷனுடன் காதலா? என்கிற கேள்விக்கும் ஜாக்குலின் விளக்கம் அளித்துள்ளார்.

விஜய் டிவியில் கலக்கப் போவது யாரு, விருது விழா நிகழ்ச்சிகள் என பல நிகழ்ச்சிகளை செம ஃபன்னாக தொகுத்து வழங்கி ஏகப்பட்ட ரசிகர்களை கவர்ந்தவர் ஜாக்குலின். இன்ஸ்டாகிராமில் இவர் வெளியிடும் புகைப்படங்கள் மற்றும் ரீல்ஸ் வீடியோக்கள் என எல்லாமே ரசிகர்கள் மத்தியில் டிரெண்டாகி விடும்.

Vijay Tv Vj Jacqueline opens up about his relationship with CWC fame Rakshan

விஜய் டிவியின் சின்னத்திரை சீரியல்கள் மற்றும் நயன்தாராவின் கோலமாவு கோகிலா உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ள ஜாக்குலின் திடீரென விஜய் டிவியில் அதிகம் தென்படாமல் காணாமல் போனது ரசிகர்கள் மத்தியில் ஏகப்பட்ட கேள்விகளை எழுப்பியது.

விஜய் டிவி ஜாக்குலின்: தேன்மொழி பி.ஏ. சீரியலில் நடித்து ரசிகர்கள் மத்தியில் அதிகளவில் பிரபலமானவர் விஜய் டிவி ஜாக்குலின். தொகுப்பாளினியாக விஜய் டிவிக்குள் நுழைந்த ஜாக்குலின் ஏகப்பட்ட ரியாலிட்டி ஷோக்களை தொகுத்து வழங்கி உள்ளார். கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் அவர் பல எபிசோடுகளை தொகுத்து வழங்கியது குறிப்பிடத்தக்கது.

பிக் பாஸ் வரலை: பிக் பாஸ் சீசன் 7ல் போட்டியாளராக ஜாக்குலின் பங்கேற்பார் என ரசிகர்கள் ரொம்பவே எதிர்பார்த்தனர். ஆனால், அவர் இன்னமும் விஜய் டிவியின் பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்கவில்லை. பிரியங்கா, அர்ச்சனா மற்றும் மைனா நந்தினி உள்ளிட்ட பிரபலங்கள் போட்டியாளராக பங்கேற்ற நிலையில், டிடி நீலகண்டன், பாவனா வரிசையில் ஜாக்குலினும் போட்டியாளராக இதுவரை பங்கேற்கவில்லை.

தப்பு தப்பா பேசுறாங்க: தன்னை ஒரு லெஸ்பியன் என மோசமாக கமெண்ட் அடித்ததை பார்த்து ரொம்பவே கடுப்பாகி விட்டேன் என்றும் ஜாக்குலின் கூறியுள்ளார். மேலும், விஜய் டிவியின் தொகுப்பாளர் ரக்‌ஷனுடன் தொடர்பு படுத்தி பேசி வருவது ரொம்பவே மனசை கஷ்டப்படுத்தி விட்டது என்றும் கூறியுள்ளார்.

ரக்‌ஷன் என்னோட பெஸ்ட் ஃபிரெண்ட்: விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வரும் ரக்‌ஷன் துல்கர் சல்மானுடன் இணைந்து கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். ரக்‌ஷன் மற்றும் ஜாக்குலின் இருவரும் நெருங்கி பழகி வந்ததை பார்த்த ரசிகர்கள் இருவரும் காதலித்து வருவதாகவும் லிவ்வின் ரிலேஷன்ஷிப்பில் உள்ளார்களா என்றும் கமெண்ட் போட்டு வருவது தன்னை ரொம்பவே ஷாக் ஆக்கியது. ரக்‌ஷன் என்னோட பெஸ்ட் ஃபிரெண்ட் ஏன் தப்பு தப்பா பேசுறீங்க எனக் கூறியுள்ளார்.

புகழ் எனக்கு க்ளோஸ் ஃபிரெண்ட்: மேலும், குக் வித் கோமாளி புகழ் கூட எல்லாம் உங்களை சேர்த்து வைத்து பேசுறாங்களே அதுக்கு என்ன பதில் வச்சிருக்கீங்க என கேட்கும் போது புகழ் எல்லாம் என்னோட க்ளோஸ் ஃபிரெண்ட். விஜய் டிவி ஷோவில் ஏதாவது ரொமான்ஸ் செய்வது போல டிராமா பண்ணினால் அதற்கு முன்னதாக என்னிடம் வந்து இப்படி பண்ணவா என கேட்டு விட்டுத்தான் பண்ணுவார்கள். டிவி நிகழ்ச்சிகளை பார்த்து விட்டு அதுதான் ரியாலிட்டி என நினைத்துக் கொண்டிருக்கும் நபர்கள் பதிவிடும் கமெண்ட்டுகளை எல்லாம் நான் கண்டுக்கொள்ளவே மாட்டேன். அதுபற்றி என்னிடம் கேள்வி கேட்க வேண்டாம் என கடுப்பாகி விட்டார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X