பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு மாகாபா போகனும்.. கேமராவை உடைக்கனும்.. புதிய பிரமோ.. ரசிகையோட ஆசையை பாருங்க!
சென்னை: விஜய் டிவியின் பிக்பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சி நாளைய தினம் பிரம்மாண்டமான துவக்க விழாவுடன் மாலை 6 மணியளவில் துவங்கவுள்ளது. இதற்கான சூட்டிங் நடத்தி முடிக்கப்பட்டு விட்டதாக கூறப்பட்டுள்ள நிலையில், அடுத்தடுத்து நிகழ்ச்சியில் இணையவுள்ள போட்டியாளர்கள் குறித்த அப்டேட்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வருகின்றன
இந்த நிகழ்ச்சியில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற முன்னாள் போட்டியாளர்களுடன் ரசிகர்கள் இணைந்து பல கேள்விகளை எழுப்பும் ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு நிகழ்ச்சியும் நாளைய தினம் நடக்கவுள்ள நிலையில், இதற்கான பிரமோவை தற்போது விஜய் டிவி தன்னுடைய சமூக வலைதளப் பக்கங்களில் பகிர்ந்துள்ளது.

பிக்பாஸ் 8 ஷோ: விஜய் டிவியின் பிக்பாஸ் தனது 8வது சீசனை நாளைய தினம் பிரம்மாண்டமான துவக்கவிழாவுடன் மாலை 6 மணியளவில் துவங்கவுள்ளது. இந்த சீசனில் புதிய ஆங்கராக நடிகர் விஜய் சேதுபதி பங்கேற்கவுள்ள நிலையில், நாளை நடைபெறும் துவக்கவிழாவில் அவர் நிகழ்ச்சியின் போட்டியாளர்களை ரசிகர்களிடையே அறிமுகப்படுத்தி பிக்பாஸ் வீட்டிற்குள் அனுப்பி வைக்கவுள்ளார். இந்த துவக்க நிகழ்ச்சிக்கான சூட்டிங் நேற்றைய தினமே நடந்து முடிந்துள்ளதாக கூறப்படும் நிலையில், நிகழ்ச்சியில் பங்கேற்கும் போட்டியாளர்கள் குறித்த தகவல்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வருகிறது.
ஆங்கர் விஜய் சேதுபதி: நிகழ்ச்சியில் புதிய ஆங்கராக இணைந்துள்ள விஜய் சேதுபதி ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு என்ற பேச்சுடன் களமிறங்கியுள்ளார். நிகழ்ச்சியில் கடந்த சில வாரங்களாக இதையொட்டி அடுத்தடுத்த பிரமோக்களை விஜய் டிவி வெளியிட்டு ரசிகர்களை மிகப்பெரிய எதிர்பார்ப்பிற்கு உள்ளாக்கி வருகிறது. இதனிடையே ரசிகர்கள் அதிகமான எதிர்பார்ப்புகளுடன் இந்த நிகழ்ச்சியை நாளைய எதினம் எதிர்கொள்ள தயாராகி வருகின்றனர். நிகழ்ச்சியில் விஜய் சேதுபதியின் புதிய ஆட்டம் எப்படி இருக்கம் என்றும் யோசித்து வருகின்றனர். இந்த நிகழ்ச்சி குறித்து சமூக வலைதளங்களில் தினந்தோறும் விமர்சனங்கள் எழும்.
ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு ஷோ: அந்த வகையில் இந்த சீசனில் நிகழ்ச்சி குறித்த ரிவ்யூவை தினந்தோறும் கூறவுள்ளதாக நடிகை வனிதா விஜயகுமாரும் ராபர்ட் மாஸ்டருடன் இணைந்து அறிவித்துள்ளார். முன்னதாக பிக்பாஸ் சீசனில் பங்கேற்று தன்னுடைய ஆட்டத்தை வெளிப்படுததிய வனிதா விஜயகுமார், இந்த சீசனில் வெளியில் இருந்து ஆட்டத்தை தொடரவுள்ளார். இந்நிலையில் இந்த நிகழ்ச்சியின் முந்தைய சீசன்களின் போட்டியாளர்கள் மற்றும் ரசிகர்கள் இணைந்து ஒரு நிகழ்ச்சியை நாளைய தினம் கொடுக்கவுள்ளனர். இதன் பிரமோவும் தற்போது வெளியாகியுள்ளது. இதை மாகாபா மற்றும் குரேஷி ஆகியோர் இணைந்து தொகுத்து வழங்கவுள்ளனர்.
மாகாபா பிக்பாஸ் போகனும்: இந்த நிகழ்ச்சியின் பிக்பாஸ் போட்டியின் முன்னாள் போட்டியாளர்கள் வனிதா விஜயகுமார், ஆர்த்தி உள்ளிட்ட பலரும் பங்கேற்றுள்ள நிலையில், நிகழ்ச்சியில் நாளை துவங்கவுள்ள சீசனில் யாரெல்லாம் பங்கேற்றால் நிகழ்ச்சி சிறப்பாக இருக்கும் என்ற கேள்விக்கு பதிலளித்த ரசிகர்கள், வனிதா விஜயகுமார் பங்கேற்க வேண்டும்,என்றும் கூடவே தானும் பங்கேற்க வேண்டும என்றும் கூறியதை பார்க்க முடிந்தது. முன்னதாக இந்த நிகழ்ச்சியில் தான் பங்கேற்றால், உள்ளே சென்று கேமராவை உடைத்து விடுவேன் என்று மாகாபா கூறியிருந்த நிலையில், அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று கேமராக்களை உடைப்பதை தான் பார்க்க வேண்டும என்று மற்றொரு ரசிகர் கூறியிருந்தார்.
ரசிகர்களின் ஆசைகள்: இதனிடையே நடிகர் விஜய் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டும என்றும் மற்றொருவரும் தனது ஆசையை பகிர்ந்திருந்தார். சீமான், சந்தானம் உள்ளிட்டவர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டும என்று அடுத்தடுத்த தங்களது ஆசைகளை ரசிகர்கள் பகிர்ந்துக் கொண்டனர். இந்த நிகழ்ச்சி நாளை மாலை 4.30 மணிக்கு விஜய் டிவியில் ஒளிபரப்பாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை மாலை 6 மணிக்கு பிக்பாஸ் 8 துவங்கவுள்ள நிலையில், அதன் சிறப்பான முன்னோட்டமாக இந்த நிகழ்ச்சி அமையும் என்று எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











