சொம்புக்கு பதிலாக செருப்பா.. மாகாபா ஆனந்த் பதிவால் எரிச்சலடைந்த ரசிகர்கள்!

சென்னை: விஜய் டிவியின் மணிமேகலை மற்றும் பிரியங்கா விவகாரத்திற்கு ஒரு முடிவே கிடையாதா என்று ரசிகர்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றனர். குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் ஆங்கராக செயல்பட்டு வந்த மணிமேகலை, இந்த நிகழ்ச்சியில் பிரியங்காவுடன் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக நிகழ்ச்சியிலிருந்து வெளியேறும் முடிவை எடுத்திருந்தார்.

பணம், புகழை காட்டிலும் சுயமரியாதை முக்கியம் என்று அவர் பதிவிட்டு வீடியோ வெளியிட்ட நிலையில் அவருக்கு ஆதரவாக பல்வேறு தரப்பினரும் பேசி வந்தனர். இந்நிலையில் தனக்கு எதிராக பேசிய குரேஷி, நடிகை சகிலா மற்றும் சுனிதா ஆகியோரை குறிப்பிட்டு சொம்புகள் என்று மணிமேகலை வீடியோ வெளியிட்டு இருந்தார். இந்நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் விஜய் டிவி ஆங்கர் மாகாபா ஆனந்த் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் செருப்பை பதிவிட்டுள்ளார். அவரது இந்த பதிவு பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.

televisiion cwc show makapa anand

குக் வித் கோமாளி நிகழ்ச்சி: ஏன் இந்த பிரச்சனையை இப்படி நீட்டிக் கொண்டே போகிறார்கள் எண்ணும்படியாக தான் இருக்கிறது விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் விவகாரம். இந்த நிகழ்ச்சியில் தன்னை சிறப்பாக செயல்பட விடவில்லை என்று பிரியங்கா மீது குற்றச்சாட்டை வைத்து நிகழ்ச்சியிலிருந்து விலகி இருந்தார் நிகழ்ச்சியின் ஆங்கர் மணிமேகலை. இந்த நிகழ்ச்சி குறித்து அடுத்தடுத்து அவரும் தன்னுடைய யூடியூப் சேனலில் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அவர் குறித்து உடன் பணியாற்றிய சுனிதா, சரத், குரேஷி நடிகை சகிலா உள்ளிட்டவர்கள் அடுத்தடுத்த விமர்சனங்களை பதிவு செய்துள்ளனர்.

மாகாபா புதிய போஸ்ட்: இந்த விவகாரத்தில் மணிமேகலைக்கு ஆதரவாக அதிகமானோர் பேசி வரும் நிலையில் நடுநிலையாக கடந்த சில தினங்களுக்கு முன்பு பேசி இருந்தார் விஜய் டிவியின் ஆங்கர் மாகாபா ஆனந்த், இந்த விவகாரம் அப்படியொன்றும் முக்கியமானது இல்லை என்றும் இதில் அவர்கள் இருவருமே பேசி தீர்த்துக் கொள்ளட்டும் என்றும் நாம் இடையில் நுழைவது சரியாக இருக்காது என்றும் மிகவும் சரியாக பேசி இருந்த மாகாபா, தற்போது இந்த நிகழ்ச்சி குறித்து தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் செருப்பை பதிவிட்டு மணிமேகலைக்கு எதிரான மறைமுகமான தாக்குதலில் ஈடுபட்டுள்ளார்.

televisiion cwc show makapa anand

செருப்பை பதிவிட்ட மாகாபா: தனக்கு எதிராக முன்னதாக கருத்துக்களை தெரிவித்த குரேஷி, சகிலா மற்றும் சுனிதா ஆகியோரை மறைமுகமாக குறிப்பிட்டு மணிமேகலை சொம்புகள் என்று வீடியோ வெளியிட்டு இருந்தார். இது பல்வேறு தரப்பினரின் கோபத்தையும் தூண்டிவிட்டுள்ளது. அதற்கு குரேஷி உள்ளிட்டவர்கள் பதிலடி கொடுத்துள்ள நிலையில், தற்போது மாகாபா ஆனந்த் இந்த விஷயத்தில் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் செருப்பை பதிவிட்டு பதிலடி கொடுத்துள்ளார். அமானுஷ்ய சக்திகளிடம் இருந்து விலகியிருக்க வேண்டும் என்று கூறி செருப்பை அவர் பதிவிட்ட நிலையில், இந்த விஷயத்தில் அவரை தொடர்ந்து டிஜே பிளாக்கும் பதிவிட்டிருந்தார்.

அதிகரிக்கும் கண்டனங்கள்: சனிக்கிழமை எல்லாரும் ஃப்ரீயா இருப்பாங்க என்று குறிப்பிட்டுள்ள மாகாபா ஆனந்த், வீடியோ போடலாம் வாங்க, செருப்பு படம்தான் இருக்கு என்றும் குறிப்பிட்டிருந்தார். இதனிடையே, சொம்புக்கு பதிலடியாக செருப்பா என்று ரசிகர்கள் இந்த விஷயத்தில் தங்களது கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர். பிரியங்காவிற்கு ஆதரவாக பேசிய பிரபலங்களும் தற்போது இந்த விஷயத்தில் தங்களது கோபத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். இந்த சம்பவத்திற்கு ஒரு முடிவே கிடையாதா என்று ரசிகர்களும் கேள்வி எழுப்பி வருகின்றனர்

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X