அனைவருக்கும் நன்றி சொன்ன மணிமேகலை.. அம்மணி எங்க போயிருக்காங்க தெரியுமா?
சென்னை: விஜய் டிவியின் குக் வித் கோமாளி 5 நிகழ்ச்சி வழக்கமான சுவாரஸ்யங்களுடன்தான் சென்றுக் கொண்டிருந்தது. ஆனால் கடந்த சில தினங்களாக இந்த ஷோ, டாக் ஆஃப் தி டவுனாக மாறியுள்ளது. இந்த நிகழ்ச்சியில் தன்னை குக்காக செயல்பட்டுவரும் மற்றொரு ஆங்கர் சிறப்பாக செயல்பட விடவில்லை என்று குற்றம்சாட்டி மணிமேகலை நிகழ்ச்சியிலிருந்து விலகும் முடிவை எடுத்துள்ளார்.
அவரால் அடுத்தடுத்து சமூக வலைதளப்பக்கங்கள் பற்றி எரிந்து வருகின்றன. ஆனால் ஒருபக்கம் பிரியங்கா வெளிநாட்டிற்கு சுற்றுலாவிற்கு சென்றதுபோல, மணிமேகலையும் அடுத்தடுத்த தன்னுடைய பணிகளில் கணவருடன் பிசியாகியுள்ளார். தன்னுடைய யூடியூப் பக்கத்தில் வீடியோக்களை வெளியிடுவதில் மும்முரம் காட்டி வருகிறார்.

ஆங்கர் மணிமேகலை: விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் துவக்கம் முதலே பங்கேற்றவர் மணிமேகலை. கடந்த 4 சீசன்களாக கோமாளியாக இருந்த இவர், தற்போது 5வது சீசனில் ஆங்கராக மாறினார். கடந்த சீசன்களிலேயே ஆங்கராக மாறும் தன்னுடைய ஆர்வத்தை இவர் காட்டி வந்த நிலையில், அந்த அவரது கனவு இந்த சீசனில் நிறைவேறியது. ரக்ஷனுடன் இணைந்து குக் வித் கோமாளி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். இந்த நிகழ்ச்சி தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. வரும் அக்டோபர் முதல் வாரத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சி துவங்கவுள்ளதாக கூறப்பட்டுள்ள நிலையில், குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் இறுதி எபிசோட் சூட்டிங் எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
மணிமேகலை அதிரடி: இந்த நிகழ்ச்சியில் டைட்டில் வின்னராக பிரியங்கா தேர்வாகியுள்ளதாகவும் கூறப்பட்டுள்ள நிலையில், அவர் அந்த சூட்டிங்கை நிறைவு செய்துவிட்டு, வெளிநாட்டிற்கு சுற்றுலா கொண்டாட்டத்திற்கு பறந்துவிட்டார். இந்நிலையில், இந்த நிகழ்ச்சியில் இருந்து விலகும் முடிவை கடந்த சில தினங்களுக்கு முன்பு அறிவித்திருந்தார் மணிமேகலை. நிகழ்ச்சியின் ஆங்கர் ஒருவர் தன்னை சிறப்பாக செயல்பட விடவில்லை என்றும் தன்னுடைய சுயமரியாதை முக்கியம் என்பதால் நிகழ்ச்சியிலிருந்து விலகும் முடிவை தான் எடுத்ததாகவும் அவர் வீடியோ மூலம் கூறியிருந்தார். இந்நிலையில் அவரது இந்த முடிவு ஏராளமான ரசிகர்களை மட்டுமில்லாமல் பிரபலங்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
மணிமேகலை யூடியூப் வீடியோ: இந்த விவகாரத்தில் பலரும் கொந்தளித்து பிரியங்காவிற்கு எதிர்ப்பு தெரிவித்தும் ஆதரவாகவும் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர். இந்நிலையில் இதுகுறித்தெல்லாம் கவலை கொள்ளாமல் தன்னுடைய இயல்பான வாழ்க்கையை மேற்கொண்டு வருகிறார் மணிமேகலை. தன்னுடைய யூடியூப் பக்கத்தில் அடுத்தடுத்த வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது தீபாவளிக்கு பட்டாசுகள் வாங்க சிவகாசிக்கே தன்னுடைய கணவலர் ஹுசைனுடன் சென்றுள்ளார் மணிமேகலை. இதன் வீடியோவை தன்னுடைய யூடியூப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

நன்றி சொன்ன மணிமேகலை: இந்த வீடியோவின் துவக்கத்திலேயே தனக்கு சப்போர்ட்டாக இருந்த அனைவருக்கும் அவர் நன்றி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அடுத்தடுத்த வீடியோக்களில் பேசலாம் என்றும் கூறியுள்ளார். தற்போது அவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலிருந்து விலகிய நிலையில் அனைவருடைய ஆதரவும் அவருக்கு கிடைத்து வருவதற்கே அவர் நன்றி தெரிவித்துள்ளார். இதனிடையே சிவகாசியில் தங்களுக்கு பிடித்த பட்டாசுகளை வாங்கிய ஹுசைன் மற்றும் மணிமேகலை தம்பதி, சில பட்டாசுகளை அங்கேயே கொளுத்தி மகிழ்ந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











