பிரியங்காவை பர்சனலாக இழிவுப்படுத்தலாமா.. ரெண்டு பேரையும் விசாரிக்கனும்.. அறந்தாங்கி நிஷா வெளிப்படை!

சென்னை: விஜய் டிவியின் முன்னணி நிகழ்ச்சியாக கடந்த 5 சீசன்களாக மாஸ் காட்டிவரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி எண்ட் கார்ட் போடவுள்ளது. நாளைய தினம் இந்த நிகழ்ச்சியின் பிரம்மாண்ட இறுதிப்போட்டி தொடர்ந்து 5 மணிநேரங்கள் நடக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான பிரமோக்கள் தெறித்து வருகின்றன.

இந்த பிரம்மாண்ட இறுதிச்சுற்று குறித்து பேசுகிறார்களோ இல்லையோ தொடர்ந்து பல நாட்களாக இந்த நிகழ்ச்சியில் வெடித்த பிரியங்கா -மணிமேகலை விவகாரத்தைதான் அனைத்து தரப்பினரும் பேசி வருகின்றனர். விஜய் டிவியில் சம்பந்தப்பட்ட அனைவரும் இதுகுறித்து பேசி வருகின்றனர். பல விமர்சகர்களும் இந்த விவகாரத்தில் தங்களது விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.

televisiion aranthangi nisha

குக் வித் கோமாளி 5 ஷோ: விஜய் டிவியின் முன்னணி ஷோக்களில் ஒன்றான குக் வித் கோமாளி நிகழ்ச்சி தற்போது 5வது சீசனை நிறைவு செய்யவுள்ளது. இதன் பிரம்மாண்டமான நிறைவுப்போட்டி நாளைய தினம் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த வாரத்தில் சேனலின் அடுத்த முன்னணி நிகழ்ச்சியான பிக்பாஸ் துவங்கவுள்ளதால் குக் வித் கோமாளி நிகழ்ச்சி நாளையுடன் எண்ட் கார்ட் போடவுள்ளது. இதையொட்டிய அடுத்தடுத்த பிரமோக்களை சேனல் தரப்பு அடுத்தடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறது. இந்த இறுதிப்போட்டியில் மெய்யழகன் ஹீரோக்கள் கார்த்தி, அரவிந்த் சாமி உள்ளிட்டவர்களும் பங்கேற்கவுள்ளனர்.

குக் வித் கோமாளி 5 இறுதிப்போட்டி: இதனிடையே குக் வித் கோமாளியின் இன்றைய எபிசோடில் நடிகை அபிராமி, நடிகர் ஷாம் உள்ளிட்டவர்களும் கலந்துக் கொண்டுள்ளனர். இந்த நிகழ்ச்சியின் இறுதிப்போட்டி மற்றும் அதன் அடுத்தடுத்த நிகழ்வுகள் குறித்து அடுத்தடுத்த பிரமோக்கள் மூலம் ரசிகர்கள் கவனம் பெற்று வருகின்றனர். ஆனாலும் இந்த நிகழ்ச்சி மற்றொரு சம்பவத்திற்காக அதிகமான கவனத்தை கடந்த சில தினங்களாக பெற்று வருகிறது. அந்த வகையில் இந்த 5வது சீசனின் ஆங்கராக இருந்த மணிமேகலை நிகழ்ச்சியிலிருந்து வெளியேறும் முடிவை எடுத்திருந்தார். நிகழ்ச்சியில் குக்காக செயல்பட்ட பிரியங்காவின் டார்ச்சர் காரணமாகவே தான் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறியதாக அவர் வீடியோ மூலம் தெரிவித்திருந்தார்.

அறந்தாங்கி நிஷா காட்டம்: இந்நிலையில் இந்த விஷயத்தில் விஜய் டிவியின் ஆங்கர்கள், கோமாளிகள் உள்ளிட்ட பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். ஆனால் சம்பந்தப்பட்ட ஆங்கர் பிரியங்கா இதுகுறித்த எந்த விளக்க்ததையும் தெரிவிக்காமல் உள்ளது இந்தப் பிரச்சினையை மேலும் நீள செய்து வருகிறது. இந்நிலையில் விஜய் டிவியின் ஆங்கர் உள்ளிட்ட பல செயல்பாடுகளில் தன்னை ஈடுபடுத்திவரும் அறந்தாங்கி நிஷா, இந்த விஷயத்தில் தன்னுடைய கருததுக்களை தெரிவித்துள்ளார். கோவையில் நிகழ்ச்சியொன்றில் பங்கேற்று பெண்களை ஊக்குவிக்கும்வகையில் அவர் பேசினார்.

இருவரிடமும் பேச வேண்டும்: இதனிடையே குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் சம்பவ தினத்தன்று தான் அங்கே இல்லை என்றும் என்ன நடந்தது என்று தெரியாமல் இரு தரப்பிலும் விசாரிக்காமல் தான் கருத்துக்களை கூற முடியாது என்றும் நிஷா கூறியுள்ளார். மேலும் ஒரு தொழில்சார்ந்து ஒருவர்மீது குறை கூறப்படும் பட்சத்தில் அதுகுறித்து மட்டுமே பேச வேண்டும் என்றும் மாறாக, அவர்களது பர்சனல் விஷயங்களை அந்தப் பெண்ணை இழிவுப்படுத்தக்கூடாது என்றும் தெரிவித்துள்ளார். இதுகுறித்து இருவரிடமும் பேசி நடந்ததை தெரிந்துக் கொள்ள தான் விரும்புவதாகவும் அறந்தாங்கி நிஷா கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X