Baakiyalakshmi: இந்த வீட்டை விட்டு போ எழில்.. ஈஸ்வரியால் வீட்டைவிட்டு வெளியேறிய எழில் -அமிர்தா!
சென்னை: விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலின் இந்த வார ப்ரமோ தற்போது வெளியாகியுள்ளது. ஜெனி தற்போது இரண்டாவது குழந்தைக்காக கர்ப்பம் தரித்துள்ளார். முன்னதாக எழில் மற்றும் அமிர்தா குழந்தை பெற்றுக் கொள்ள தொடர்ந்து ஈஸ்வரி வலியுறுத்திய நிலையில், தற்போது அவர் தொடர்ந்து இந்த விஷயத்தில் மேலும் அடாவடித்தனத்தை காட்டுகிறார்.
இதனால் ஒரு கட்டத்தில் இந்த விஷயத்தில் தன்னுடைய பாட்டி ஈஸ்வரியையே எழில் எதிர்க்கும் சூழல் காணப்படுகிறது. இதையொட்டி தற்போது இந்த வார ப்ரமோ வெளியாகியுள்ளது. இதில் அமிர்தாவை திட்டிய ஈஸ்வரியை எழில் கேள்வி கேட்பதாகவும் அவர் பதிலுக்கு ஆத்திரத்துடன் பேசுவதாகவும் காணப்பட்டது.

பாக்கியலட்சுமி சீரியல்: விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியல் தொடர்ந்து ரசிகர்களை சிறப்பாக கவர்ந்து டிஆர்பியிலும் அதிக புள்ளிகளை பெற்று சேனலின் முன்னணி தொடராக இருந்து வருகிறது. இந்த சீரியலில் ஏற்கனவே திருமணமாகி ஒரு குழந்தைக்கு தாயான அமிர்தாவை திருமணம் செய்துக் கொண்டுள்ளார் எழில். இறந்ததாக கருதப்பட்ட அமிர்தாவின் முன்னாள் கணவர் கணேஷ் மீண்டும் உயிருடன் வந்து தன்னுடைய மனைவி மற்றும் மகள் நிலாவை மீண்டும் தன்னுடன் வர அழைத்ததையும் பிறகு அவர் அவர்களை கடத்திய நிலையில், அவரை போலீஸ் கைது செய்ததையும் பார்க்க முடிந்தது.
ஜெனி கர்ப்பம்: தற்போது நடந்த சம்பவங்களையெல்லாம் சுட்டிக் காட்டி ஈஸ்வரி எழில் மற்றும் அமிர்தாவை குழந்தை பெற்றுக் கொள்ள தொடர்ந்து வற்புறுத்துகிறார். ஆனால் சினிமாவில் இயக்குநராக சாதிக்கும் கனவுடன் இருக்கும் எழில், தான் சாதித்த பின்புதான் குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார். அவருக்கு பாக்கியாவும் தொடர்ந்து சப்போர்ட் செய்து வருகிறார். இந்நிலையில் தற்போது செழியனின் மனைவி ஜெனி, இரண்டாவது குழந்தைக்காக கர்ப்பமாக இருக்கிறார். இதனால் மகிழ்ச்சியடையும் ஈஸ்வரி, இதை சுட்டிக்காட்டி தொடர்ந்து அமிர்தாவையும் எழிலையும் திட்டுகிறார்.
இந்த வார ப்ரமோ: இந்நிலையில் தற்போது இந்த வாரத்திற்கான பிரமோ வெளியாகியுள்ளது. முன்னதாக குழந்தை பெற்றுக் கொள்ளாமல் இருப்பதற்கு எழிலை அமிர்தாதான் கட்டாயப்படுத்துகிறாரா என்பதாக ஈஸ்வரி திட்டிய நிலையில், இந்த வாரத்திற்கான பிரமோவில், தன்னுடைய பாட்டி ஈஸ்வரியிடம் இதுகுறித்து எழில் கேள்வி எழுப்புகிறார். இதுகுறித்து அதற்குள் அமிர்தா வத்தி வைத்து விட்டாளா என்று கோபப்படும் ஈஸ்வரி, அமிர்தாவால் தான் வீட்டில் அனைத்து பிரச்சினைகளும் ஏற்படுவதாக ஆத்திரத்துடன் பேசுகிறார். அமிர்தா வீட்டில் காலடி எடுத்து வைத்தவுடன் எழில் வாழ்க்கையில் அனைத்தும் முடிந்துவிட்டதாகவும் கூறுகிறார்.
முற்றும் வாக்குவாதம்: இதை கேட்கும் எழில், இதற்குமேல் ஒரு வார்த்தை பேச வேண்டாம் என்று கூறுகிறார். ஈஸ்வரி தொடர்ந்து தான் அப்படித்தான் பேசுவேன் என்றும் தான் பேசுவதை கேட்டு இருப்பதானால் இரு, இல்லையென்றால் வெளியில் கிளம்பி போய்க் கொண்டே இரு என்றும் கோபத்துடன் பேசுகிறார். வீட்டைவிட்டு வெளியில் சென்றால்தான், இந்த வீட்டில் எவ்வளவு சொகுசாக இருந்தாய் என்பது தெரியும் என்றும் அவர் கூறுகிறார். இதைக்கேட்கும் பாக்கியா, கோபத்துடன் வீட்டைவிட்டு வெளியில் செல்லுமாறு எழிலிடம் கோபத்துடன் சொல்கிறார். இதுக்குமேல் இங்கே இருக்க வேண்டாம் என்றும் பாக்கியா கூற, எழில் அமிர்தா மற்றும் நிலாவுடன் வீட்டைவிட்டு வெளியேறுவதாக இந்த பிரமோவில் காணப்பட்டது. மேலும் இதை நினைத்து பாக்கியா பரிதவித்து கண்ணீர் விட்டு கதறி அழுவதாகவும் காட்சிகள் அமைந்திருந்தன.


Click it and Unblock the Notifications











