Baakiyalakshmi: பாக்கியாவை திருமணம் செய்துக்கோங்க.. ராதிகாவின் பேச்சால் ஆடிப்போன பழனிச்சாமி!
சென்னை: விஜய் டிவியின் முன்னணி தொடரான பாக்கியலட்சுமி சீரியலின் அடுத்தடுத்த எபிசோட்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகின்றன.
இந்த சீரியலில் பாக்கியாவின் பிசினஸ் கேள்விக்குறியான நிலையில், தற்போது பொருட்காட்சி கேன்டீன் கான்டிராக்ட் அவருக்கு வசமாகியுள்ளது.
இந்த சீரியலில் பகைமை பாராட்டி வந்த பாக்கியா மற்றும் ராதிகா இடையில் மீண்டும் நட்பு துளிர்த்துள்ளது.

பாக்கியலட்சுமி தொடர்: விஜய் டிவியின் முன்னணி சீரியல்களில் ஒன்றான பாக்கியலட்சுமி தொடரின் அடுத்தடுத்த எபிசோட்கள் ரசிகர்களை கவர்ந்து வருகிறது. கடந்த சில மாதங்களாக டிஆர்பியில் குறைவான புள்ளிகளை பெற்று தன்னுடைய முதலிடத்தை இழந்த பாக்கியலட்சுமி தொடர், தற்போது அதிகமான புள்ளிகளை பெற்று முதலிடத்தை மீண்டும் பெற்றுள்ளது. சீரியலில் அடுத்தடுத்த பரபரப்பான கதைக்களங்களை இயக்குநர் புகுத்தி வருவது ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று வருகிறது.
வசப்பட்ட பொருட்காட்சி கேன்டீன்: அடுத்தடுத்து கேன்டீன் கான்டிராக்ட், மசாலா பிசினஸ் என தன்னுடைய தொழில்களை இழந்த பாக்கியலட்சுமிக்கு பழனிச்சாமி மூலமாக பொருட்காட்சி கேன்டீன் கான்டிராக்ட் கிடைக்கிறது. இதனால் சற்று ஆசவாசப்படுத்திக் கொள்ளும் பாக்கியாவிற்கு, மழை காரணமாக பொருட்காட்சி ரத்து செய்யப்படுவதாக கிடைத்த தகவல் பேரிடியாக விழுகிறது. இதனால் வாங்கி வைத்த பொருட்கள் எல்லாம் வீணான நிலையில் பரிதவிக்கிறார் பாக்கியா.
பாக்கியாவிற்கு குவியும் பாராட்டு: இந்நிலையில் தற்போது பொருட்காட்சி துவங்கியுள்ளது. இதனால் பாக்கியா மட்டுமில்லாமல் அவரது குடும்பத்தினர், அவருக்கு கீழ் வேலை செய்யும் தொழிலாளர்கள் என அனைவரும் நிம்மதியடைகின்றனர். இந்நிலையில் பொருட்காட்சி தற்போது துவங்கியுள்ளது- இதையடுத்து சிறுதானியத்தில் வித்தியாசமான சிற்றுண்டிகள் என அசத்துகிறார் பாக்கியா. இதுமட்டுமில்லாமல் அவரை பொருட்காட்சியில் வைத்து அவரது குடும்பத்தினர் அனைவரும் பாராட்டுகின்றனர்.
அம்மாவிற்கு கிப்ட் கொடுத்த செழியன்: செழியன் ஒருபடி மேலே போய், தன்னுடைய அம்மாவின் இந்த வளர்ச்சியை பாராட்டி வாட்ச் பரிசளிக்கிறார். இதையடுத்து பொருட்காட்சிக்கு வரும் ஜெனி, செழியனை அங்கே பார்த்துவிட்டு உடனடியாக திரும்புகிறார். இதனால் பாக்கியா மிகுந்த கவலைக்குள்ளாகிறார். ஆனால் இந்த விஷயத்தில் செழியன் நிம்மதி அடைகிறார். பாக்கியாவை மன்னித்தது போல ஜெனி தன்னையும் விரைவில் மன்னித்து விடுவார் என்று எழிலிடம் நம்பிக்கை தெரிவிக்கிறார்.

ராதிகா வருகையால் பாக்கியா நெகிழ்ச்சி: இந்நிலையில் பொருட்காட்சிக்கு பழனிச்சாமி வந்து, பாக்கியா செய்த இனிப்பை சுவைத்து பாராட்டுகிறார். தொடர்ந்து பொருட்காட்சி கேன்டீனுக்கு வரும் ராதிகா, பாக்கியாவிற்கு நேரடியாக பாராட்டு தெரிவிக்கவில்லை என்ற போதிலும் உணவை சாப்பிட்டு ருசிக்கிறார். அவருடைய வருகை திருப்தியளித்த போதிலும் தன்னுடைய மாமியார் ஈஸ்வரி அங்கு வராதது குறித்து பாக்கியா தன்னுடைய மகன்களிடம் கவலை தெரிவிப்பதாக இன்றைய எபிசோட் காணப்படுகிறது.
பழனிச்சாமி -பாக்கியா திருமணம் குறித்து பேசும் ராதிகா: இதனிடையே பாக்கியா குறித்து பழனிச்சாமி ராதிகாவிடம் பேசும் சந்தர்ப்பம் கிடைக்க, பாக்கியாவை தன்னால் வெறுக்க முடியாது என்று கூறும் ராதிகா, தன்னுடைய முதல் திருமணத்தின் பிரச்சினைகளில் தான் சிக்கித் தவித்தபோது, தனக்கு பாக்கியாதான் ஆறுதலாக இருந்ததாக கூறுகிறார் ராதிகா. தொடர்ந்து பாக்கியாவிற்கும் பழனிச்சாமிக்கும் இடையில் நல்ல நட்பு இருப்பதை சுட்டிக் காட்டும் ராதிகா இருவரும் திருமணம் செய்துக் கொள்ளலாமே என்றும் கேட்கிறார்.


Click it and Unblock the Notifications











