Sangamam episodes: விருப்பமில்லாத திருமணம்.. தாலியுடன் கோமதி.. கதிர் வாழ்க்கையில் என்ன நடக்கும்?
சென்னை: விஜய் டிவியின் பாக்கியலட்சுமி மற்றும் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்களின் சங்கமம் தற்போது நடந்து வருகிறது. இதில் பாக்கியலட்சுமி சீரியலை காட்டிலும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு முக்கியத்துவம் தரப்பட்டு வருகிறது. முன்னதாக முதல் சிசனிலும் பாக்கியலட்சுமி சீரியலுடன் இணைந்து சங்கமம் நிகழ்ச்சியை பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடத்தியது. இந்நிலையில் தற்போது மீண்டும் சங்கமம் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. இதில் பாக்கியலட்சுமிக்கு அமைச்சர் மூலமாக கிடைத்த மாநாட்டு சமையல் கான்டிராக்டை சிறப்பாக முடிக்க கோமதி கைக்கொடுக்கிறார்.
இதனிடையே கோமதியின் நெருக்கடியான சூழலுக்கு பாக்கியலட்சுமியும் உதவுவதாக காட்டப்பட்டுள்ளது. கோமதி 28 ஆண்டுகளுக்கு முன்பு வீட்டை விட்டு விரும்பியவருடன் ஓடியதால் தன்னுடைய அண்ணன்களின் பாசத்தை இழந்த நிலையில் தற்போது தன்னுடைய அண்ணன் மகள் ராஜியும் திருமணத்திற்கு முந்தைய தினம் வீட்டை விட்டு காதலனுடன் ஓடியதை கேள்விப்பட்டு அதிர்ச்சி அடைகிறார். தொடர்ந்து ராஜியை தான் தங்கியிருக்கும் ஹோட்டலிலேயே பாக்கியா மூலம் காணும் கோமதி ராஜியின் வாழ்க்கைக்காகவும் தன்னுடைய அண்ணன்களின் கௌரவத்திற்காகவும் அதிரடியாக முடிவெடுக்கிறார்.

சங்கமம் எபிசோட்கள்: விஜய் டிவியின் முன்னணி சீரியல்களாக பாக்கியலட்சுமி மற்றும் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்கள் காணப்படுகின்றன. வாரந்தோறும் வெளியாகிவரும் டிஆர்பியில் அதிக புள்ளிகளை பெற்று இந்த சீரியல்கள் முதல் 5 இடங்களில் இடம்பிடித்து வருகின்றன. ரசிகர்களுக்கு விருப்பமான இந்த சீரியல்களின் சங்கமம் கடந்த சில தினங்களாக நடந்து வருகின்றன. அந்த வகையில் அமைச்சர் மூலமாக கிடைத்த மாநாட்டு சமையல் கான்டிராக்டை மிகுந்த சிரமத்திற்கிடையில் வெற்றிகரமாக நடத்தி முடிக்கிறார் பாக்கியா. ஆட்கள் கிடைக்காமல் அவர் அவதிப்பட்ட நேரத்தில் அவருக்கு சிறப்பாக கைக்கொடுக்கிறார் கோமதி.
கோமதியின் அதிரடி முடிவு: இந்நிலையில் சாமி கும்பிட வந்த இடத்தில் தன்னுடைய அண்ணன் மகள் ராஜியின் திருமணம் நின்றதை கேள்விப்பட்டு கோமதி மன உளைச்சல் அடைகிறார். 28 ஆண்டுகளுக்கு முன்பு தான் செய்த அதே தவறை தற்போது தன்னுடைய அண்ணன் மகளும் செய்ததை பார்த்து அதிர்ச்சி அடையும் கோமதி மிகுந்த மன வேதனை அடைகிறார். இதனிடை,யே வீட்டைவிட்டு வெளியேறிய ராஜியை அவரது காதலன் ஏமாற்ற நிற்கதியாக நிற்கும் அவரை பாக்கியா காப்பாற்றுகிறார். தொடாந்து கோமதியின் அண்ணன் மகள்தான் ராஜி என்பதும் தெரியவருகிறது. இதையடுத்து கேள்விக்குறியான ராஜியின் வாழ்க்கை மற்றும் தன்னுடைய அண்ணன்களின் கௌரவத்தை சரியாக கோமதி ஒரு முடிவெடுக்கிறார்.
கதிர் -ராஜி திருமணம்: அதன்படி, தன்னுடைய மகன் கதிர் மற்றும் ராஜிக்கு திருமணம் செய்ய முடிவெடுக்கிறார். முன்னதாக அவர்கள் இருவரும் விரோதிகளாக உலவிவந்த நிலையில், அந்த திருமணத்தை இருவருமே ஏற்காத நிலையில், தன்னுடைய மகனின் காலில் விழுந்து சம்மதம் பெறுகிறார். ராஜியையும் சம்மதிக்க வைக்கிறார். இந்நிலையில் அவர்கள் இருவரின் திருமணத்தையும் பாக்கியா, எழில் உள்ளிட்டவர்களின் துணையோடு ஏற்பாடு செய்கிறார். இந்த திருமணத்தால் கதிரின் வாழ்க்கை பாதிக்கும் என்று அவரது மருமகள் மீனா கூறுவதையும் கேட்காமல் எல்லாம் காலப்போக்கில் சரியாகும் என்று சமாதானம் கூறுகிறார்.

கோமதி மன வேதனை: ஆனாலும் தன்மேல் மிகுந்த நம்பிக்கை வைத்திருக்கும் தன்னுடைய கணவன் பாண்டியனுக்கு தெரியாமல் இந்த திருமணத்தை செய்வது குறித்து அதிகமான மன வேதனைக்கு உள்ளாகிறார். முன்னதாக செந்தில் மீனா திருமணமும் பாண்டியனுக்கு தெரியாமல் நடந்த நிலையில் தற்போது கதிரின் திருமணமும் அவ்வாறே நடப்பது குறித்து மனக்குமுறலை பாக்கியாவிடம் வெளிப்படுத்துகிறார். இந்நிலையில் திருமண ஏற்பாடுகள் செய்யப்பட்டு, கோயிலுக்கு கதிர் -ராஜி உள்ளிட்டவர்கள் வருகின்றனர். அப்போது முன்னதாக அவர்களுக்குள் நடந்த சண்டை குறித்து இருவருமே நினைத்து பார்ப்பதாக இன்றைய எபிசோட் காணப்படுகிறது. தொடர்ந்து தன்னுடைய மகனிடம் கோமதி தாலி எடுத்துக் கொடுக்கிறார்.


Click it and Unblock the Notifications











