Sangamam episodes: பாக்கியாவுடன் சமையலில் இணைந்த கோமதி.. ரசிகர்களை கவர்ந்த சங்கமம் எபிசோட்கள்!

சென்னை: விஜய் டிவியின் பாக்கியலட்சுமி, பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்கள் ஏராளமான ரசிகர்களை கவர்ந்து சிறப்பான டிஆர்பியுடன் மாஸ் காட்டி வருகிறது. இந்த சீரியல்களின் சங்கமம் தற்போது அதிரடி சரவெடியாக நடந்து வருகிறது. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் தன்னுடைய அண்ணன் மகளுக்கு திருமணம் நடக்கும் நிலையில் தனக்கு அழைப்பு விடுக்கப்படாதால் மனம் வருந்தும் கோமதி, தன்னுடைய மகன் மற்றும் மருமகள் மீனாவுடன் திருச்செந்தூர் கோயிலுக்கு செல்கிறார். அங்குதான் அவர் பாக்கியா, எழில் உள்ளிட்டவர்களை சந்திக்கிறார். இவர்களது அறிமுகம் சண்டையில் துவங்கினாலும் தொடர்ந்து நட்பு பாராட்டி வருகின்றனர்.

அமைச்சரின் சிபாரிசின்பேரில் கட்சி கூட்டத்திற்கு 3 நாட்கள் சமைக்க திருச்செந்தூர் போகிறார் பாக்கியா. வழக்கம்போல இந்த நிகழ்வில் அவர் சந்திக்கும் சோதனைகள், சாதனைகளை மையமாக கொண்டு தற்போது எபிசோட்கள் ஒளிபரப்பாகி வருகின்றன. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 மற்றும் பாக்கியலட்சுமி தொடரின் சங்கமம் தற்போது நடந்து வருகிறது. சமையலில் ஒத்துழைக்க ஆட்கள் இல்லாத நிலையில், பாக்கியாவிற்கு உதவ முன்வருகிறார் கோமதி. அமிர்தா மற்றும் மீனா தங்களது வாழ்க்கையில் நடந்துவரும் நிகழ்வுகளை பகிர்ந்து வருகின்றனர். இதேபோல எழில் மற்றும் கதிரும் நண்பர்களாகின்றனர்.

Vijay TVs Baakiyalakshmi & Pandian stores 2 serial Sangamam episodes

சங்கமம் எபிசோட்கள்: விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியல் அதிக டிஆர்பியுடன் 2வது இடத்தில் உள்ளது. இதேபோல பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலும் தன்னுடைய ஒளிபரப்பை துவங்கிய சில வாரங்களிலேயே அதிக டிஆர்பியுடன் 4வது இடத்தில் உள்ளது. இந்த இரு சீரியல்களும் ரசிகர்களின் விருப்பத்திற்குரிய சீரியல்களாக உள்ள நிலையில் தற்போது இந்த இரு சீரியல்களின் சங்கமம் நடைபெற்று வருகிறது. வேண்டுதலை நிறைவேற்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரின் கோமதி, கதிர் மற்றும் மீனா திருச்செந்தூர் கோயிலுக்கு செல்ல, அதேபோல அமைச்சரின் சிபாரிசில் கட்சி மீட்டிங்கில் சமைப்பதற்காக பாக்கியாவும் அங்கு செல்கிறார்.

மோதலில் துவங்கிய நட்பு: பாக்கியா மற்றும் டீம் வந்த வேன், கோமதி மீது மோதப்போக, அதனால் எழில் மற்றும் கதிர் இருவரும் சண்டைப்போடுவதாக இவர்களின் அறிமுகம் ஏற்படுகிறது. தொடர்ந்து பாக்கியா, கோமதி இருவரும் சமாதானப்படுத்துகின்றனர். இந்நிலையில் இவர்கள் இருவரின் குடும்பத்தினரும் ஒரே ஹோட்டலில் தங்குவதால் அடிக்கடி சந்தித்து, நட்பாகின்றனர். பாக்கியாவை பார்த்தவுடன் நெருக்கமாகிறார் கோமதி. தொடர்ந்து தங்களின் வீட்டு நிகழ்வுகளையும் தன்னுடைய அண்ணன் மகள் திருமணத்திற்கு தான் அழைக்கப்படாததையும் கூறுகிறார். இதனால் கடுப்பாகும் மீனா, அவரை பேசவிடாமல் தடுக்கிறார்.

பாக்கியாவிற்கு கைக்கொடுக்கும் கோமதி: இதனிடையே தன்னிடம் ஆட்கள் குறைவாக உள்ளதாக பாக்கியா கூறியதையடுத்து, அமைச்சர் தன்னுடைய ஆட்களை நியமிக்கிறார். ஆனால் அவர்கள் அனுபவம் இல்லாததால் சொதப்புகின்றனர். இதனால் பாக்கியாவிற்கு மனஉளைச்சலும் நஷ்டமும் ஏற்படுகிறது. இந்நிலையில் இதுகுறித்து அவர் கோமதியிடம் புலம்ப, உடனே தான் சமையலில் உதவி செய்வதாக கோமதி கூறுகிறார். பாக்கியா இதை மறுத்த போதிலும் விடாப்பிடியாக தான் உதவி செய்வதாக கோமதி கூறுவதாக இன்றைய எபிசோடில் காணப்படுகிறது. இந்நிலையில் அமிர்தா மற்றும் மீனாவுக்கு இடையிலும் நல்ல நட்பு துளிர்க்கிறது.

Vijay TVs Baakiyalakshmi & Pandian stores 2 serial Sangamam episodes

பாக்கியாவின் அசத்தல் சமையல்: தன்னுடைய மகள் நிலாவிற்கு எழில் அப்பா இல்லை என்பதை அமிர்தா கூற, தன்னுடைய திருமணம் காதல் மற்றும் பெற்றோரை எதிர்த்து நடந்த திருமணம் என்பதை மீனா கூறுகிறார். இதனால் அவர்கள் இருவருக்கும் இடையில் நெருக்கம் அதிகரிக்கிறது. இதனிடையே கட்சி மீட்டிங்கின் முதல் நாளில் அதிகமான டென்ஷனுடன் பாக்கியா சிறப்பாக சமைத்து நல்ல பெயரை எடுக்கிறார். இதையடுத்து அவர் இருக்கும் இடத்திற்கே வரும் அமைச்சர், பாராட்டு தெரிவிக்கிறார். மேலும் தொடர்ந்து அடுத்தடுத்த நாட்களிலும் இதேபோல சிறப்பாக சமைக்கவும் அறிவுறுத்துவதாகவும் இன்றைய எபிசோடில் காணப்படுகிறது.

கேள்விக்குறியாகும் ராஜி திருமணம்: இதனிடையே கோமதியின் அண்ணன் மகள் ராஜி திருமணத்திற்கு ராதிகா, கோபி மற்றும் இனியா வருகின்றனர். அவர்கள் வீட்டில் தங்குகின்றனர். கோபிக்கும் பாண்டியனுக்கும் இடையில் அடுத்தடுத்த பிரச்சினைகள் ஏற்படுகின்றன. இதனிடையே ராஜியின் திருமணத்தால் அவளுக்கும் அவளது காதலனுக்கும் இடையில் பிரச்சினை ஏற்படுகிறது. திருமணத்திற்கு முன்னதாக வீட்டை விட்டு வெளியே வருமாறு அவர் கூறுவதால் செய்வது அறியாமல் ராஜி தொடர்ந்து கலக்கத்தில் இருக்கிறார். அவரது சந்தோஷம் இல்லாத முகம் ராதிகாவிற்கு தொடர்ந்து சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X