Baakiyalakshmi serial: சிறப்பாக போன பொருட்காட்சி கேன்டீன்.. சதிவேலையை துவங்கிய கான்டிராக்டர்!

சென்னை: விஜய் டிவியின் முன்னணி தொடராக மீண்டும் மாறியுள்ளது பாக்கியலட்சுமி. கடந்த வார டிஆர்பி ரேட்டிங்கில் அதிக புள்ளிகளை பெற்று முதலிடத்தில் உள்ளது.

குறைவான கேரக்டர்களை கொண்டு நிறைவான எபிசோட்களை கொடுத்து வருகிறது பாக்கியலட்சுமி சீரியல். பெங்காலியில் புகழ்பெற்ற ஸ்ரீமோயி என்ற தொடரின் ரீமேக்காக இந்தத் தொடர் உருவாக்கப்பட்டுள்ளது.

Vijay TVs Baakiyalakshmi serial 11th december 2023 episode released

கோபி, பாக்கியா மற்றும் ராதிகா என லீட் கேரக்டர்களையும் அவர்களை சுற்றி சில குடும்ப உறுப்பினர்களையும் மட்டுமே கேரக்டர்களாக கொண்டு இந்த சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது.

பாக்கியலட்சுமி சீரியல்: விஜய் டிவியின் முன்னணி சீரியலான பாக்கியலட்சுமி நீண்ட மாதங்களுக்கு பிறகு தற்போது டிஆர்பியில் அதிக புள்ளிகள் பெற்றும் மீண்டும் முதலிடத்தை பிடித்துள்ளது. இந்தத் தொடரில் குறைவான கேரக்டர்களை கொண்டு நிறைவான எபிசோட்களை கொடுத்து வருகிறார் அதன் இயக்குநர். பெங்காலியில் அதிகமான ரசிகர்களை கவர்ந்த ஸ்ரீமோயி என்ற தொடரின் ரீமேக்காக இருந்தாலும் தமிழில் ஏராளமான ரசிகர்களை கவர்ந்து தற்போது முன்னிலையில் உள்ளது பாக்கியலட்சுமி சீரியல்.

கலவையான விமர்சனங்கள்: இந்த சீரியலில் கோபி, பாக்கியா, ராதிகா, பழனிச்சாமி என லீட் கேரக்டர்களும் அவர்களை சுற்றிய சொந்தங்களும் மட்டுமே கேரக்டர்களாக காணப்படுகின்றனர். குறைவான கேரக்டர்களை மட்டுமே எடுத்துக் கொண்டு அவர்களின் உணர்ச்சிகளை மையமாக கொண்டு இந்த சீரியல் சிறப்பான எபிசோட்களை கொடுத்து வருகிறது. சில கலவையான விமர்சனங்களை பெற்ற போதிலும் மொத்தத்தில் ரசிகர்களை இந்தத் தொடர் வெகுவாக கவர்ந்துள்ளது.

பாக்கியாவின் அடுத்தடுத்த பிரச்சினைகள்: தற்போது தன்னுடைய வாழ்க்கையில் தொடர்ந்து குடைச்சல் கொடுத்துவரும் கோபியை சமாளிக்கும் சூழல் ஏற்பட்டுள்ள நிலையில், பிரச்சினைகளுக்கு உள்ளாகியுள்ள தன்னுடைய மகன்களின் வாழ்க்கையை மீட்டெடுக்கும் பொறுப்பும் பாக்கியாவிற்கு ஏற்பட்டுள்ளது. இதனிடையே மீண்டும் பூக்கத் துவங்கியுள்ள ராதிகாவுடனான நட்பு பாக்கியாவிற்கு ஆசுவாசத்தை ஏற்படுத்தியுள்ளது. கோபியுடன் இணைந்துக் கொண்டு தன்னுடைய மாமியார் கொடுக்கும் குடைச்சலும் பாக்கியாவிற்கு சவாலாக அமைந்துள்ளது.

குடும்பத்தினரின் ஆதரவு: ஆயினும் குடும்பத்தில் மற்ற உறுப்பினர்கள் அனைவரின் ஆதரவும் பாக்கியாவிற்கு ஆறுதலை கொடுத்து வருகிறது. இந்நிலையில் பொருட்காட்சி கேன்டீன் கான்டிராக்ட் மிகுந்த இடர்பாடுகளுக்கிடையில் பாக்கியாவிற்கு கிடைத்து அதை துவங்கியுள்ளார். முன்னதாக இந்த கேன்டீன் கான்டிராக்டை தனக்கு கொடுக்கும்படி கான்டிராக்டர் ஒருவர் கேட்க, இது தன்னுடைய கனவு என்றும் அதை கொடுக்க முடியாது என்றும் பாக்கியா மறுத்த நிலையில் அவர் மிகுந்த கோபத்திற்குள்ளாகிறார்.

சதி செய்த கான்டிராக்டர்: இதனிடையே பொருட்காட்சி கேன்டீன் முதல்நாளில் மிகச்சிறப்பாக நடந்த நிலையில், அங்குவரும் அந்த கான்டிராக்டர், பாக்கியாவின் கேன்டீன் உணவு சரியில்லை என்பதாக சமூக வலைதளங்களில் பரப்பிவிடுகிறார். இதனால் பாக்கியாவின் கேன்டீனுக்கு அரசு அதிகாரிகள் சீல் வைக்கின்றனர். அவரது உணவு தரமற்ற நிலையில் சப்ளை செய்யப்பட்டதாக தங்களுக்கு புகார் வந்ததாக அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். இதனால் பாக்கியா அதிர்ச்சிக்குள்ளாவதாக இன்றைய எபிசோட் காணப்படுகிறது.

சிக்கலில் கோபி: இதனிடையே தன்னுடைய கிரெடிட் கார்ட் பில்லை தொடர்ந்து செலுத்த முடியாமல் வங்கி ஊழியர்களிடம் இருந்து தொடர்ந்து எஸ்கேப் ஆகிறார் கோபி. ஆனால் தொடர்ந்து அவரை சுற்றிவரும் அவர்கள், அவரது வீட்டிற்கு மறுபடி மறுபடி வருகின்றனர். இந்நிலையில் இன்றைய எபிசோடிலும் அவர்கள் வந்து கோபியை அச்சுறுத்தி பேசுகின்றனர். வீட்டிற்கு இந்த விவகாரம் தெரியாமல் கோபி பார்த்துக் கொண்டிருந்த நிலையில், இந்த சமயத்தில் அந்த இடத்தில் ராதிகா வருவதாக இந்த எபிசோடில் காணப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X