Baakiyalakshmi serial: பாக்கியாவை அசிங்கப்படுத்திய கோபி.. மல்லுக்கு நின்ற எழில்!

சென்னை: விஜய் டிவியின் முன்னணி தொடரான பாக்கியலட்சுமி சீரியல் அடுத்தடுத்த சிறப்பான எபிசோட்களை கொடுத்து வருகிறது.

பாக்கியாவின் பிசினஸ்களில் வெற்றிபெற அவருக்கு உறுதுணையாக இருந்து வருகிறார் பழனிச்சாமி. இவர்கள் இருவரின் நட்பை தொடர்ந்து கொச்சைப்படுத்தி வருகிறார் கோபி.

Vijay TVs Baakiyalakshmi serial 27th november episode makes fans more thrilling

பாக்கியாவை விவாகரத்து செய்த நிலையிலும் அவரது அடுத்தடுத்த செயல்பாடுகளை கேள்விக்குட்படுத்திவரும் கோபி, பழனிச்சாமியுடனான நட்பையும் தொடர்ந்து விமர்சித்து வருகிறார்.

பாக்கியலட்சுமி தொடர்: விஜய் டிவியின் முன்னணி தொடரான பாக்கியலட்சுமியின் அடுத்தடுத்த எபிசோட்கள் ரசிகர்களை தொடர்ந்து என்டர்டெயின் செய்து வருகிறது. பாக்கியாவை விவாகரத்து செய்த நிலையிலும் அவரது அடுத்தடுத்த செயல்களை தொடர்ந்து விமர்சித்து வருவதுடன் தடங்கலாகவும் இருந்து வருகிறார் கோபி. தன்னுடைய இரண்டாவது மனைவி ராதிகாவுடன் இணைந்து பாக்கியாவிற்கு தொடர்ந்து குடைச்சல் கொடுத்து வருகிறார்.

Vijay TVs Baakiyalakshmi serial 27th november episode makes fans more thrilling

பாக்கியாவிற்கு குடைச்சல் கொடுக்கும் கோபி: அவர் கேட்ட 18 லட்சம் ரூபாயை கொடுத்து அவரது வீட்டை தன் பேரில் ரிஜிஸ்டர் செய்கிறார் பாக்கியா. மிகுந்த சிரமத்திற்கிடையில் அவர் இந்த விஷயத்தை செய்த நிலையில், ராதிகாவுடன் கோபி வீட்டை விட்டு வெளியேறினார். இருந்தபோதிலும் அவருக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தை சொல்லி, மீண்டும் அவரை வீட்டிற்கு அழைத்து வருகிறார் ஈஸ்வரி. அவருடன் ராதிகாவும் பாக்கியா வீட்டிற்கு வருகிறார். இதனால் அவரது குடைச்சல் மேலும் அதிகமாகிறது.

கனமழையால் ரத்தான பொருட்காட்சி: கேன்டீன் கான்டிராக்ட், மசாலா பிசினஸ் உள்ளிட்டவை கைநழுவிப் போன நிலையில், தற்போது கவர்மெண்ட் பொருட்காட்சி கான்டிராக்டை 1.6 லட்சம் கொடுத்து கைப்பற்றுகிறார் பாக்கியா. பொருட்காட்சி துவங்கவிருந்த நிலையில், கனமழை காரணமாக அது தள்ளி வைக்கப்படுகிறது. இதனால் பாக்கியா மிகுந்த மனஉளைச்சலுக்கு உள்ளாகிறார். இந்த கான்டிராக்ட் கிடைக்க காரணமாக இருந்த பழனிச்சாமி, பாக்கியாவின் இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஆறுதல் சொல்ல வீட்டிற்கு வருகிறார்.

Vijay TVs Baakiyalakshmi serial 27th november episode makes fans more thrilling

பழனிச்சாமி -பாக்கியா உறவை கொச்சைப்படுத்திய கோபி: வீட்டில் யாரும் இல்லாத நிலையில் அவர்கள் இருவரும் பேசிக் கொண்டிருப்பதை பார்த்த கோபி, இருவரையும் கொச்சைப் படுத்தி பேசுகிறார். இதனால் பழனிச்சாமி வருத்தம் அடைகிறார். தொடர்ந்து தங்களது நட்பை கொச்சைப்படுத்திய கோபி மீது பாக்கியா அதிகமான ஆத்திரம் அடைகிறார். அவரை தன்னுடைய வீட்டை விட்டு கிளம்புமாறு கூறுகிறார். இதை தான் சும்மா விடப் போவதில்லை என்று கூறும் கோபி, வெளியில் சென்றிருந்த தன்னுடைய அம்மா வீட்டிற்கு வந்தவுடன் பற்ற வைக்கிறார்.

கோபியிடம் எழில் சண்டை: கோபியின் பேச்சைக் கேட்டு ஆத்திரமடையும் ஈஸ்வரி, பாக்கியாவிடம் சண்டையிடுகிறார். இதனால் பாக்கியாவின் ஆத்திரம் மேலும் அதிகரிக்கிறது. தன்னையும் பழனிச்சாமியையும் இணைத்து கோபி பேசிய பேச்சை அவர் குடும்பத்தினரிடம் கூறுகிறார். இதனால் செய்வதறியாது ஈஸ்வரி திகைக்க, தன்னுடைய அம்மாவை எப்படி அப்படி பேசலாம் என்று எழில் கோபியிடம் சண்டைக்கு போவதாக இன்றைய எபிசோட் காணப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X