Baakiyalakshmi: பாக்கியாவை கடுப்பேற்ற கோபி செய்த செயல்.. சின்னப்புள்ளத் தனமால்ல இருக்கு!
சென்னை: விஜய் டிவியின் முன்னணி தொடரான பாக்கியலட்சுமி சீரியலின் தற்போதைய எபிசோட் ரசிகர்களுக்கு உற்சாகத்தை அளிக்கும்வகையில் அமைந்துள்ளது.
பொருட்காட்சி கான்டிராக்ட் குறித்து அடுத்த நாள்தான் அறிவிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்ததால் அதுகுறித்து குழப்பமான மனநிலையில் பாக்கியா காணப்படுகிறார்.

மேலும் சாலையில் வழிமறித்து அமிர்தாவின் முன்னாள் கணவர் கணேஷ் கொடுத்த அச்சுறுத்தலும் அவரை தளர்வாக்கியுள்ளது.
பாக்கியலட்சுமி தொடர்: விஜய் டிவியின் முன்னணி தொடரான பாக்கியலட்சுமி சீரியல் அடுத்தடுத்த சிறப்பான எபிசோட்களை கொடுத்து வருகிறது. தற்போது வெளியாகியுள்ள எபிசோடில் அடுத்தடுத்த பிரச்சினைகளால் பாக்கியா தளர்வாகியுள்ளதை பார்க்க முடிந்தது. எப்போதும் சுறுசுறுப்பாக அடுத்தடுத்த செயல்களில் ஈடுபடும் அவர் தற்போதைய பிரச்சினைகளால் மன உளைச்சலுக்கு உள்ளாகி சமைக்கக்கூட தெம்பில்லாமல் இருப்பதை தற்போதைய எபிசோடில் காண முடிந்தது.
அடுத்தடுத்த பிரச்சினைகள்: முன்னதாக மழை காரணமாக பொருட்காட்சி நடப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ள நிலையில், அதுகுறித்து விசாரிக்க சம்பந்தப்பட்ட அலுவலகத்திற்கு செல்கிறார் பாக்கியா. அங்கு அதற்கான மீட்டிங் நடக்கவுள்ளதாகவும் மறுநாள் அறிவிப்பு வெளியாகும் என்றும் அதிகாரிகள் கூறுகின்றனர். பொருட்காட்சி கண்டிப்பாக நடக்கும் என்று எழில் உள்ளிட்டவர்கள் நம்பிக்கை கொடுத்த போதிலும் அதற்காக வாங்கி வைத்த காய்கறிகள் அழுகியதையொட்டி பாக்கியா மிகுந்த மனஉளைச்சலுக்கு உள்ளாகிறார்.
கணேஷின் அச்சுறுத்தல்: மேலும் வீடு திரும்பும் வழியில் பாக்கியாவை வழிமறித்து கணேஷ், அமிர்தா விவகாரம் குறித்து அச்சுறுத்தியதையும் அவர் தொடர்ந்து மனதில் போட்டு குழம்புகிறார். மேலும் ஒன்றரை லட்சம் ரூபாய் கொடுத்து பொருட்காட்சி கேன்டீன் கான்டிராக்டை வாங்கியது குறித்தும் குழம்புகிறார். இதுபோன்ற அடுத்தடுத்த பிரச்சினைகளால் பாக்கியா குழம்பிக் கொண்டிருக்க சமைப்பதில்கூட நாட்டம் இல்லாமல் தளர்வாக உணர்கிறார்.

சதிச்செயலில் கோபி: இந்நிலையில் அவர் சமைப்பதை குலைக்கும் வகையில் கோபி, வீட்டில் உள்ளவர்கள் அனைவரையும் டின்னருக்கு வெளியில் கூட்டிக் கொண்டு செல்கிறார். பாக்கியாவை பழிவாங்குவதாக நினைத்துக் கொண்டு இதுபோன்ற சின்னப்புள்ளை தனமான நடவடிக்கைகளில் கோபி ஈடுபடுவதாக அவரது அப்பா கூறுகிறார். இதைக் கேட்டு பாக்கியா, எழில், அமிர்தா மற்றும் செல்வி உள்ளிட்டவர்கள் சிரிப்பதாக இன்றைய எபிசோட் காணப்படுகிறது. மேலும் எழில் உள்ளிட்டவர்களை கோபி கூப்பிடாதது பாக்கியாவிற்கு மனவருத்தத்தை ஏற்படுத்துகிறது.
மொக்கை வாங்கிய கோபி: பாக்கியா சமைக்காத நிலையில், அவரை பழிவாங்குவதாக நினைத்துக் கொண்டு கோபி அனைவரையும் டின்னருக்கு அழைத்து சென்றதும் அவர்களிடையே சிரிப்பை ஏற்படுத்துகிறது. இந்நிலையில் டின்னருக்கு ராதிகா மற்றும் ஈஸ்வரி ஒன்றாக சென்ற நிலையில் அங்கு என்ன நடக்கப் போகிறதோ என்று செல்வியும் ஒரு சந்தேகத்தை எழுப்புகிறார். டின்னருக்கு சென்ற நிலையில் அங்கு என்ன நடக்கும் என்பதை அடுத்த எபிசோடில் பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











