Actor Sathish: மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கோபி.. அட இப்படியொரு வீடியோ வெளியிட்டிருக்காரே!
சென்னை: பாக்கியலட்சுமி தொடர் மூலம் தன்னுடைய நடிப்பால் ஏராளமான ரசிகர்களை கட்டிப் போட்டவர் நடிகர் சதீஷ்.
இந்தத் தொடரில் கோபி என்ற நெகட்டிவ் கேரக்டரில் நடித்தாலும் தன்னுடைய சிறப்பான ஃபேஸ் ரியாக்ஷனால் அனைவரையும் கவர்ந்து வருகிறார்.

கடந்த சில மாதங்களாக இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களை பிடித்த பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரத்தில் அதிக டிஆர்பி புள்ளிகளுடன் முதலிடத்திற்கு தாவியுள்ளது.
பாக்கியலட்சுமி தொடர்: விஜய் டிவியின் முன்னணி சீரியல்களின் ஒன்றான பாக்கியலட்சுமி அடுத்தடுத்த சிறப்பான எபிசோட்களை கொடுத்து வருகிறது. தொடர்ந்து முதலிடத்தில் இருந்த இந்தத் தொடர் கடந்த சில மாதங்களாக ரசிகர்களை கவரத் தவறியது. இதையடுத்து டிஆர்பியில் குறைவான புள்ளிகளை பெற்று இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களையே பிடித்தது. இந்நிலையில் சமீபத்தில் இந்தத் தொடரின் அடுத்தடுத்த எபிசோட்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகின்றன.

முதலிடத்தில் பாக்கியலட்சுமி: இதையடுத்து தற்போது டிஆர்பியில் அதிக புள்ளிகளை பெற்றுள்ள பாக்கியலட்சுமி சீரியல் மீண்டும் முதலிடத்தை பிடித்துள்ளது. தொடர்ந்து முதலிடத்தை பிடித்துவந்த சேனலின் சிறகடிக்க ஆசை சீரியல் தற்போது குறைவான புள்ளிகள் வித்தியாசத்தில் இரண்டாவது இடத்தில் பின்தங்கியுள்ளது. பாக்கியலட்சுமி சீரியலில் பாக்கியா, கோபி, ராதிகா என லீட் கேரக்டர்களில் நடித்துவரும் நடிகர், நடிகைகள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகின்றனர்.
நெகட்டிவ் ரோலில் கோபி: குறிப்பாக நெகட்டிவ் ரோலில் நடித்து வந்தாலும் தன்னுடைய உடல் மொழி மற்றும் ஃபேஸ் ரியாக்ஷனால் ஏராளமான ரசிகர்களை கவர்ந்துள்ளார் நடிகர் சதீஷ். இந்த சீரியலில் பாக்கியாவின் முன்னாள் கணவனாக கோபி என்ற கேரக்டரில் நடித்து வருகிறார். இந்தக் கேரக்டரில் பாக்கியாவை விவாகரத்து செய்த போதிலும் அவரை விட முடியாமல் அவரது அடுத்தடுத்த நடவடிக்கைகளை கண்காணிப்பதும் அவரது வளர்ச்சிக்கு பங்கம் விளைவிப்பதுமாக இருக்கிறார். அவரது வளர்ச்சியை ஜீரணிக்க முடியாதவராகவும் தன்னை வெளிப்படுத்துகிறார்.
பாக்கியாவை கடுப்பேற்றும் கோபி: பாக்கியாவிடமிருந்து 18 லட்சத்தை பெற்றுக் கொண்டு வீட்டை அவருக்கு எழுதிக் கொடுத்துவிட்டு வீட்டை விட்டு வெளியேறிய கோபியை உடல்நிலை சரியில்லாததை காரணமாக குறிப்பிட்டு ஈஸ்வரி மீண்டும் வீட்டிற்கு அழைத்து வருகிறார். இதனால் ஏற்படும் குழப்பங்களால் பாக்கியா மன நிம்மதியை இழக்கும் நிலை உருவாகிறது. இந்நிலையில் தன்னுடைய மகன்களின் வாழ்க்கையையும் மீட்டெடுக்கும் பொறுப்பு அவருக்கு ஏற்படுகிறது. இதுகுறித்தெல்லாம் எந்த கவலையும் இல்லாமல் பாக்கியாவை கடுப்பேற்றும் வேலைகளை மட்டுமே செய்கிறார் கோபி. இதனால் ரசிகர்கள் அவரை திட்டித் தீர்க்கின்றனர்.
மழை வெள்ளத்தில் பாதிப்பு: இந்நிலையில் தற்போது மிக்ஜாம் புயலால் தன்னுடைய வீட்டில் கரண்ட் இல்லாத சூழலில் தான் தன்னுடைய அக்கா வீட்டிற்கு சென்றுள்ளதாக அவர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். தொடர்ந்து சமூக வலைதளங்களில் ஆக்டிவாக காணப்படும் கோபி, அடுத்தடுத்த வீடியோக்களை பதிவிட்டு வருகிறார். இந்த வீடியோவில் அன்புதான் உலகத்தில் எல்லாம் என்று அவர் நெகிழ்ச்சியாக குறிப்பிட்டுள்ளார்.
வீடியோ வெளியிட்ட கோபி: இந்நிலையில் தற்போது தன்னுடைய வீட்டில் பவர் வந்துவிட்டதாகவும் கடந்த 3 நாட்களாக தன்னுடைய அக்கா வீட்டில் இருந்த தன்னுடைய குடும்பம் தற்போது மீண்டும் தன்னுடைய வீட்டிற்கு செல்லவுள்ளதாகவும் அவர் வீடியோ வெளியிட்டுள்ளார். தனக்காக தன்னுடைய வீட்டின் நாய், பூனை, காக்க போன்றவற்றுடன் கொசுவும் காத்திருக்கும் என்று நகைச்சுவையாக பேசியுள்ள சதீஷ், அதற்கு தேங்காய் எண்ணெயை பயன்படுத்துமாறு தீர்வும் குறிப்பிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications