Actor Satish: நான் பாஸா இல்ல பெயிலா.. பாக்கியலட்சுமி கோபி சொன்ன அதிர்ச்சி தகவல்!

சென்னை: விஜய் டிவியின் முன்னணி சீரியலாக கடந்த 5 ஆண்டுகளை கடந்து 1300க்கும் மேற்பட்ட எபிசோடுகளை கொடுத்து வரும் பாக்கியலட்சுமி சீரியல் விரைவில் எண்ட் கார்ட் போட உள்ளதாக பல மாதங்களாக கூறப்பட்டு வருகிறது. இந்நிலையில் தற்போது இந்த தகவலை சீரியலில் கோபியாக லீட் கேரக்டரில் நடித்து வரும் நடிகர் சதீஷ் உறுதிப்படுத்தியுள்ளார்.

தான் இந்த கேரக்டரில் பாஸா அல்லது பெயிலா என்றும் அவர் ரசிகர்களிடையே கேள்வி எழுப்பியுள்ளார். கடந்த சில வாரங்களாகவே இந்த சீரியல் நிறைவடைவதற்கான அடுத்தடுத்த சம்பவங்களை பதிவு செய்து வருகிறது. அந்த வகையில் கோபிக்கும் ராதிகாவிற்கும் விவாகரத்து ஆனது. செழியன் மற்றும் எழிலும் வாழ்க்கையில் செட்டில் ஆகியுள்ளனர். இனியாவிற்கும் காதல் ஏற்பட்டுள்ளது.

Television Baakiyalakshmi serial Satish

பாக்கியலட்சுமி சீரியல்: விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியல் ஏறக்குறைய இறுதி கட்டத்தை அடைந்துள்ளதாக தெரிகிறது. இதையொட்டி சீரியலின் அடுத்தடுத்த காட்சி அமைப்புகளை இயக்குநர் கொடுத்து வருகிறார். முன்னதாக கோபி உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் அவரை இரவு நேரத்தில் சென்று காப்பாற்றுகிறார் பாக்கியா. இதனால் பாக்கியா மீது இருந்த கோபம், வெறுப்பு, பழி உணர்ச்சி அனைத்தும் கோபிக்கு நீங்குகிறது. தன்னுடைய அம்மாவின் விருப்பத்திற்கு ஏற்ப பாக்கியா வீட்டிலேயே தங்குவதாக அமைந்தது. கோபி மற்றும் ராதிகா இடையில் நீண்ட காலங்களாக இருந்த நெருடல், மனக்கசப்பு வெளிப்பட்டு அவர்கள் இருவருக்கும் விவாகரத்தும் நடந்து முடிந்துள்ளது.

விரைவில் எண்ட் கார்ட்: செழியன் மற்றும் எழில் இருவரும் தங்கள் வாழ்க்கையை செம்மைப்படுத்திக் கொண்டுள்ளனர். இதனிடையே இனியாவிற்கும் செல்வியின் மகனுடன் காதல் ஏற்பட்டுள்ளது. இவ்வாறு இந்த சீரியலில் ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் அடுத்த கட்டத்தை அடைந்துள்ளனர். இதனிடையே பாக்கியாவும் தன்னுடைய இரண்டாவது ரெஸ்டாரண்டை ஓபன் செய்து விட்டார். மூன்றாவது ரெஸ்டாரண்டிற்கான வேலைகளும் இன்னும் ஒரு வருடத்தில் நடக்கும் என்று அவர் ராதிகாவிடம் பெருமையாக கூறியதை பார்க்க முடிந்தது. ராதிகா மற்றும் பாக்கியா இடையில் சரியான புரிதல் இருந்து வருகிறது. இந்நிலையில் இந்த சீரியல் விரைவில் நிறைவடைய உள்ளதாக கூறப்படுகிறது.

பாக்கியலட்சுமி சீரியல் பிரமோ: சீரியலின் பிரமோ நேற்றைய தினம் வெளியாகியுள்ளது. பாக்கியா தன்னுடைய பிறந்த நாளை முதல் முறையாக கொண்டாடும் நிலையில் அந்த கொண்டாட்டத்தில் வைத்து பாக்கியா மற்றும் கோபி இருவரும் இணைய உள்ளதாக ஈஸ்வரி கூறுகிறார். இதை கண்டிப்புடனும் உறுதியுடனும் பாக்கியா நிராகரிப்பதாக இந்த ப்ரோமோவில் காணப்பட்டது. இந்நிலையில் இன்றைய எபிசோடில் பாக்கியா முதல் முறையாக தன்னுடைய பிறந்த நாளை தானே கொண்டாடுவதற்கான ஏற்பாடுகளை செய்கிறார். தனக்காக மற்றவர்கள் ஏதாவது செய்வார்களா என்ற எதிர்பார்ப்பை விட நம்மை நாமே கொண்டாட வேண்டும் என்பதை அவர் இந்த இன்றைய எபிசோடில் வலியுறுத்துகிறார்.

சதீஷ் அதிர்ச்சி தகவல்: இதனிடையே இன்றைய தினம் கோபியாக நடித்து வரும் நடிகர் சதீஷ் தன்னுடைய இன்ஸ்டாகிராமில் இந்த சீரியல் விரைவில் நிறைவடைய உள்ளதாக தெரிவித்துள்ளார். பாக்கியலட்சுமி என்ற பப்ளிக் எக்ஸாம் நிறைவடையவுள்ளதாகவும் கோபியாக தன்னுடைய கேரக்டர் பாஸா அல்லது பெயிலா என்று ரசிகர்களிடையே கேள்வி எழுப்பி உள்ளார். மனதளவிலும் உடலளவிலும் தான் சோர்ந்து விட்டதாகவும் ஆனாலும் தன்னுடைய முயற்சிகள் தொடரும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். பாக்கியலட்சுமி சீரியல் நிறைவடைந்தாலும் தன்னுடைய நடிப்பு பயணம் தொடரும் என்றும் அவர் உறுதியுடன் கூறியுள்ளார்.

ரசிகர்கள் வருத்தம்: கடந்த சில மாதங்களாகவே இந்த சீரியல் நிறைவடைய உள்ளதாக பல தரப்பிலும் கூறப்பட்டு வந்த நிலையில் தற்போது அதை நடிகர் சதீஷ் உறுதிப்படுத்தியுள்ளார். இந்த சீரியல் பல்வேறு கலவையான விமர்சனங்களை பெற்ற போதிலும் ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக பாக்கியலட்சுமி சீரியலுடன் பயணித்து வந்த ரசிகர்கள் இந்த நிறைவை எப்படி எடுத்துக் கொள்வார்கள் என்பது குறித்து கேள்வி எழுந்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X