Vijay TV's top 5 serials: முதலிடத்திற்கு திணறும் பாக்கியலட்சுமி தொடர்.. சில புள்ளிகளில் இழப்பு!
சென்னை: விஜய் டிவியின் முன்னணி தொடர்களில் ஒன்றான பாக்கியலட்சுமி தொடர்ந்து இந்த வாரமும் இரண்டாவது வாரத்திலேயே நிலை கொண்டுள்ளது.
இந்த வாரத்திற்கான டிஆர்பி ரேட்டிங்குகள் வெளியான நிலையில் இந்த வாரமும் முதலிடத்தை சில புள்ளிகளில் பாக்கியலட்சுமி தவறவிட்டுள்ளது.
கடந்த பல மாதங்களாக விஜய் டிவியின் முன்னணி தொடராக தனி ராஜ்ஜியம் நடத்திவந்த பாக்கியலட்சுமி கடந்த சில வாரங்களாகவே பின்னடைந்துள்ளது.

இந்த வாரமும் இரண்டாவது இடத்தை பெற்ற பாக்கியலட்சுமி தொடர்: விஜய் டிவியின் மாஸ் கிளப்பி வரும் சீரியல்களில் தொடர்ந்து பல மாதங்களாக முன்னணியில் இருந்த பாக்கியலட்சுமி, கடந்த சில வாரங்களாக பின்னடைவை சந்தித்து வருகிறது. ஒரே மாதிரியான எபிசோட்களை கொடுத்து வந்ததால், இந்த பின்னடைவு ஏற்பட்டது. இதையடுத்து சுதாரித்துக் கொண்ட சீரியல் இயக்குநர் அடுத்தடுத்து பரபரப்பான காட்சிகளை கொண்டு ரசிகர்களை கவரும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்.
தொடர்ந்து முதலிடத்தில் மாஸ் காட்டி வந்த பாக்கியலட்சுமி தொடர், கடந்த சில வாரங்களாக பின்னடைந்துள்ளது. கடந்த வாரத்திற்கு முந்தைய வாரத்தில் மூன்றாவது இடத்திற்கு வந்து பரிதாபமாக காட்சியளித்தது. சிறகடிக்க ஆசை, பாண்டியன் ஸ்டோர்ஸ் என இரண்டு சீரியல்கள் முதலிரண்டு இடங்களை பிடித்த நிலையில் பாக்கியலட்சுமி மூன்றாவது இடத்திற்கு சென்றது. ஆனால் அடுத்தடுத்த சிறப்பான கதைக்களத்தை சீரியலில் இணைத்ததன்மூலம் கடந்த வாரத்தில் இரண்டாவது இடத்திற்கு முன்னேறியது.
இந்நிலையில் இந்த வாரத்திற்கான டிஆர்பி ரேட்டிங்குகள் தற்போது வெளியாகியுள்ளன. இந்த வாரத்திற்கான டிஆர்பியில் 8.23 புள்ளிகள் பெற்று விஜய் டிவி சீரியல்களில் பாக்கியட்சுமி இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. மாறாக சிறகடிக்க ஆசை தொடர், 8.26 புள்ளிகள் பெற்று முதலிடத்தை தொடர்ந்து தக்க வைத்து வருகிறது. இந்தத் தொடரில் முத்து, மீனா கேரக்டர்களின் அடுத்தடுத்த செயல்பாடுகள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகின்றன.
இந்நிலையில் தன்னுடைய இரண்டாவது இடத்தை தொடர்ந்து தக்க வைத்துள்ள பாக்கியலட்சுமி, சில புள்ளிகளில் முதலிடத்தை இழந்துள்ளது. இதன்மூலம் அடுத்த வாரத்தில் தன்னுடைய முதல் இடத்தை பெறும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இந்நிலையில் மூன்றாவது இடத்தில் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர், தொடர்ந்து மாஸ் காட்டி வருகிறது- அண்ணன் -தம்பிகள் பாசத்தை மையமாக கொண்டு எளிமையான கதையுடன் இந்தத் தொடர் ரசிகர்களை எதிர்கொண்டு வருகிறது. இந்தத் தொடருக்கு 7.21 புள்ளிகள் கிடைத்துள்ளன.
அடுத்தடுத்த இடங்களில் ஆஹா கல்யாணம் மற்றும் ஈரமான ரோஜாவே 2 தொடர்கள் இடம்பெற்றுள்ளன. இந்தத் தொடர்களிலும் சுவாரஸ்யமான சம்பவங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக ஈரமான ரோஜாவே 2 தொடர், ஒரே மாதிரியான காட்சிகளாக இருப்பதாக விமர்சனங்களை பெற்ற போதிலும், இந்தத் தொடரில் இரு ஜோடிகளின் ரொமான்ஸ் சிறப்பாக காட்டப்படுகிறது. ஜீவா மற்றும் பார்த்தி என இந்த சீரியல்களின் ஹீரோக்கள் தங்களின் மனைவிகளின் அன்பை பெற முயற்சிக்கும் காட்சிகள் சுவாரஸ்யமாக காணப்படுகின்றன.


Click it and Unblock the Notifications











