Baakiyalakshmi serial: பாக்கியலட்சுமி 1000வது எபிசோட்.. கோபி வெளியிட்ட அழகிய வீடியோ!
சென்னை: விஜய் டிவியின் முன்னணி சீரியலாக ஏராளமான ரசிகர்களை கவர்ந்து வருகிறது பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் வளரத்துடிக்கும் குடும்பத் தலைவிகளுக்கு உதாரணமாக இருக்கிறார் பாக்கியா.
தன்னுடைய குடும்பத்தையும் விட்டுக் கொடுக்காமல் கேரியரையும் சிறப்பாக்கிக் கொண்டு வலம்வருகிறார் பாக்கியா.
சில சமயங்களில் தன்னுடைய குடும்பத்தினர் குறிப்பாக மாமியார் இழுத்த இழுப்பிற்கெல்லாம் வளைந்துக் கொடுக்கிறார் என்ற குற்றச்சாட்டும் அவர் மீது வைக்கப்பட்டு வருகிறது.

பாக்கியலட்சுமி தொடர்: விஜய் டிவியின் முன்னணி சீரியலாக ரசிகர்களை கவர்ந்து வருகிறது பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் பாக்கியா, கோபி, ராதிகா உள்ளிட்ட லீட் கேரக்டர்களையும் அவர்களின் நெருங்கிய சொந்தங்களையும் முன்னணி கேரக்டர்களாக வைத்து கதைக்களத்தை அமைத்து வருகிறார் இயக்குநர். இந்த நிகழ்ச்சியில் தன்னுடைய பழைய காதலை புதுப்பிக்கும் கோபி, அதற்காக தன்னுடைய மனைவி பாக்கியாவை ஏமாற்றி விவாகரத்திற்கு அப்ளை செய்கிறார்.
பாக்கியாவின் வளர்ச்சி: வளர்ந்த மூன்று பிள்ளைகளின் அப்பாவான அவரது காதல் விவகாரம் தெரிந்தபின்பு, தானே விரும்பி அவருக்கு விவாகரத்தை கொடுக்கிறார் பாக்கியா. 25 ஆண்டுகளாக தான் இந்த வாழ்க்கையில் எந்த சந்தோஷத்தையும் அனுபவிக்கவில்லை என்ற கோபியின் வார்த்தைகள் அவரை மிகவும் பாதிக்கிறது. அதனால் தானே விவாகரத்தை கொடுத்த பாக்கியா, அதையடுத்து அவரது வாழ்க்கையில் சந்திக்கும் பிரச்சினைகள், அதன் தீர்வுகள் ஆகியவற்றை இந்தத் தொடர் காட்சிப்படுத்தி வருகிறது.
ரசிகர்களை கவர்ந்த தொடர்: இந்நிலையில் ஏராளமான ரசிகர்களை கவர்ந்து விஜய் டிவியின் டிஆர்பியிலும் அதிகமான புள்ளிகளை பெற்றுவரும் இந்தத் தொடர் தற்போது 1000 எபிசோட்களை கடந்துள்ளதாக சீரியலின் முதன்மை கேரக்டரில் கோபியாக நடித்துவரும் நடிகர் சதீஷ் தெரிவித்துள்ளார். இதையொட்டி அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அழகிய வீடியோவையும் பகிர்ந்து தன்னுடைய சந்தோஷத்தை வெளிப்படுத்தியுள்ளார். இதேபோல விஜய் டிவியும் தன்னுடைய மகிழ்ச்சியை பகிர்ந்துள்ளது.
1000 எபிசோட்கள்: கடந்த 2020ம் ஆண்டில் பாக்கியலட்சுமி சீரியல் தன்னுடைய ஒளிபரப்பை துவங்கிய நிலையில் தற்போது 1000 எபிசோட்களை இந்த நிகழ்ச்சி கடந்துள்ளது. 3 ஆண்டுகளை கடந்து தன்னுடைய ஒளிபரப்பை இந்த நிகழ்ச்சி கடந்துள்ள நிலையில், இந்த நிகழ்ச்சி தொடர்ந்து சேனலில் அதிகமான டிஆர்பியை பெற்று முன்னணி சீரியலாக இருந்து வருகிறது. இந்த சீரியலின் வெற்றிக்கு கோபி கேரக்டரில் நடித்துவரும் கோபியும் முக்கியமான காரணமாக இருந்து வருகிறார்.
கோபி கேரக்டர்: நெகட்டிவ் ஷேடில் இவரது கேரக்டர் இருந்தபோதிலும், தனக்கு கீழ் தன்னுடைய முன்னாள் மனைவி பாக்கியா இருக்க வேண்டும் என்ற விருப்பத்துடன் இவர் செயல்படுவது இவருக்கான நியாயமாக கூறப்படுகிறது. ஒன்றும் தெரியாத அப்பாவியாக தனக்கு கீழ் இருந்த பாக்கியாவின் முன்னேற்றத்தை பொறுக்க முடியாமல், அதை தடுக்கும் வகையில் தொடர்ந்து கோபி செயல்பட்டு வருகிறார். தொடர்ந்து இந்த சீரியலின் அடுத்தடுத்த வீடியோக்களையும் அவர் வெளியிட்டு வருகிறார்.


Click it and Unblock the Notifications











