Vijay TV top 5 serials: மீண்டும் முதலிடத்தில் சிறகடிக்க ஆசை.. தொடர் இறங்குமுகத்தில் பாக்கியலட்சுமி!

சென்னை: இந்த வாரத்தின் முதலிடங்களை பிடித்துள்ள சீரியல்களின் பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது.

இதில் விஜய் டிவி சீரியல்களில் டாப் இடத்தில் தொடர்ந்து சிறகடிக்க ஆசை தொடர் நிலைகொண்டுள்ளது

இந்த வாரமும் பாக்கியலட்சுமி தொடர் தொடர்ந்து இரண்டாவது இடத்தையே பிடித்துள்ளது. மூன்றாவது இடத்தில் வழக்கம்போல பாண்டியன் ஸ்டோர்ஸ் உள்ளது.

Vijay TVs Baakiyalakshmi serial gets second place in Urban +Rural category

விஜய் டிவியின் டாப் 5 சீரியல்கள்: சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ் உள்ளிட்ட சேனல்களுக்கு மத்தியில் கடுமையான போட்டி நிலவி வருகிறது. வாரந்தோறும் இந்த சேனல்களின் டிஆர்பி புள்ளிகள் கணக்கிடப்பட்டு, முன்னணியில் இடம்பெறும் தொடர்களின் பட்டியல் வெளியிடப்பட்டு வருகின்றன. இந்த வாரமும் சன் டிவி தொடர்கள் முதலிடங்களை கைப்பற்றியுள்ளன. முதல் நான்கு இடங்களை சன் டிவியின், எதிர்நீச்சல், கயல், சுந்தரி, வானத்தை போல தொடர்கள் உள்ளன.

கடத்ந வாரத்தில் 5வது இடத்தில் இருந்த சன் டிவியின் இனியா தொடர், இந்த வாரம் 6வது இடத்திற்கு கீழிறங்கியுள்ளது. இதையடுத்து ஒட்டுமொத்த சேனல்களின் டிஆர்பியில் 8.17 புள்ளிகளை பெற்று விஜய் டிவியின் சிறகடிக்க ஆசை தொடர், 5வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. இதையடுத்து பல மாதங்களாக விஜய் டிவி சீரியல்களில் முதலிடத்தில் இருந்த பாக்கியலட்சுமி தொடர், 7.65 புள்ளிகளை பெற்று 8வது இடத்திலும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் 7.60 புள்ளிகளை பெற்று 9வது இடத்திலும் உள்ளன.

விஜய் டிவியை பொறுத்தவரை முதல் மூன்று இடங்களில் சிறகடிக்க ஆசை, பாக்கியலட்சுமி மற்றும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர்கள் உள்ளன. அடுத்தடுத்த இடங்களில் ஆஹா கல்யாணம், மகாநதி, மோதலும் காதலும் தொடர்கள் இடம்பிடித்துள்ளன. Urban Ratingsல் இந்தத் தொடர்கள் மாஸ் காட்டியுள்ளன. தொடர்ந்து பல மாதங்களாக முன்னணியில் இருந்த பாக்கியலட்சுமி தொடர் கடந்த சில வாரங்களாக இரண்டாவது இடத்திற்கு பின்தள்ளப்பட்டுள்ளது.

Vijay TVs Baakiyalakshmi serial gets second place in Urban +Rural category

அடுத்தடுத்த பரபரப்பான கட்டங்களை கொடுத்து வருகிறது பாக்கியலட்சுமி தொடர், ஆனாலும் கடந்த சில வாரங்களாக விட்ட தன்னுடைய முதலிடத்தை பிடிக்க படாத பாடு பட்டு வருகிறது. கதையில் அடுத்தடுத்த திருப்பங்களை கொடுத்து, ரசிகர்களை மீண்டும் கவர சீரியல் இயக்குநர் பல்வேறு பிரயத்தனங்களை செய்து வருகிறார். ஆனாலும் சிறகடிக்க ஆசை தொடருடன் மோத முடியாமல் பின்தங்கியுள்ளார். சிறகடிக்க ஆசை தொடரில் முத்து, மீனா உள்ளிட்ட அடுத்தடுத்த கேரக்டர்கள், சிறப்பான கதைக்களம் ரசிகர்களை அதிகமாக கவர்ந்துள்ளது.

இதனிடையே, சன் டிவியின் எதிர்நீச்சல் தொடரும் தொடர்ந்து முதலிடத்தில் காணப்படுகிறது. முன்னதாக இந்த சேனலின் கயல் சீரியல் முதலிடத்தை பிடித்திருந்த நிலையில், எதிர்நீச்சல் தொடரில் ஆதி குணசேகரனாக நடித்துவந்த மாரிமுத்து சமீபத்தில் உயிரிழந்த நிலையில், எதிர்நீச்சல் தொடரின்மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்து காணப்படுகிறது. தொடர்ந்து அடுத்த குணசேகரன் யார் என்பதை நோக்கிய எபிசோட்களை இந்தத் தொடரில் காண முடிகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X