விரைவில் எண்ட் கார்ட் போடும் பாக்கியலட்சுமி சீரியல்.. விஜய் டிவி அதிரடி முடிவு.. என்ன காரணம்?
சென்னை: விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலின் அடுத்தடுத்த எபிசோட்கள் சிறப்பாக ஒளிபரப்பாகி வந்த போதிலும் இந்த சீரியல் ரசிகர்களை அதிகமாக கவராமல் டிஆர்பியிலும் குறைந்து அடுத்தடுத்து நான்காவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில் ஒட்டுமொத்த சீரியல்களின் டிஆர்பி வரிசையிலும் இந்த சீரியல் தற்போது மிகவும் கீழிறங்கியுள்ளது.
இதனால் விரைவில் பாக்கியலட்சுமி சீரியல் எண்ட் கார்டு போட உள்ளதாகவும் இதற்காக விஜய் டிவி தரப்பு நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. கடந்த ஐந்து ஆண்டுகளாக வெற்றிகரமான சீரியலாக நடைபோட்டுவரும் பாக்கியலட்சுமி சீரியல் விரைவில் நிறைவு பெற உள்ளதாக கூறப்படும் தகவல் ரசிகர்களை ஏமாற்றத்திற்கு உள்ளாக்கியுள்ளது.

பாக்கியலட்சுமி சீரியல்: விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியல் தொடர்ந்து முன்னணி சீரியலாக சேனலில் பல ஆண்டுகளாக இருந்து வந்தது/ ஒரு கட்டத்தில் சேனலின் சிறகடிக்க ஆசை சீரியலிடம் தன்னுடைய முதலிடத்தை விட்டுக் கொடுத்து தொடர்ந்து சில மாதங்கள் இரண்டாவது இடத்தில் மெயின்டெயின் செய்தது. ஆனால் அடுத்தடுத்து பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 மற்றும் மருமகள் என மற்ற சீரியல்களிடம் போட்டி போட முடியாமல் அடுத்தடுத்த இடங்களுக்கு கீழிறங்கியுள்ளது. இந்த சீரியலின் மவுசு ரசிகர்களிடையே மிகவும் குறைந்ததை இது காட்டுகிறது. சீரியலின் டிஆர்பி தொடர்ந்து கீழே இறங்கிய நிலையில் விரைவில் சீரியல் நிறைவடையவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
அதிகமாக குறைந்த டிஆர்பி: கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக சீரியலின் டிஆர்பியை உயர்த்தும்வகையில் முக்கியமான கேரக்டராக வலம்வந்த ராமமூர்த்தியை சீரியல் தரப்பினர் உயிரிழக்க செய்தனர். தொடர்ந்து அதை வைத்து பல தினங்கள் ரசிகர்களை கடுப்பேற்றவும் செய்தனர். நிஜ வாழ்க்கையில் செய்யப்படும் ஒவ்வொரு சம்பிரதாயம் மற்றும் சடங்குகளையும் ராமமூர்த்திக்கு செய்து சீரியல் தொடர்ந்து பல நாட்களை ஓட்டியது. இந்த சீரியலிலேயே மிகவும் பாசிட்டிவான கேரக்டராக வலம்வந்த ராமமூர்த்தி இல்லை என்பதையே ரசிகர்களால் டைஜஸ்ட் செய்ய முடியவில்லை. இதனிடையே, அவரது உடலுக்கு செய்யப்பட்ட சடங்குகளும் அவர்களை பதைபதைக்க செய்தன.
விரைவில் எண்ட் கார்ட்?: விரைவில் இந்த சீரியல் நிறைவடையவுள்ளதாகவும் அதனால் தான் தன்னுடைய கேரக்டர் முடிந்து விட்டதாகவும் முன்னதாக இந்த ராமமூர்த்தி கேரக்டர் நடிகர் தெரிவித்திருந்தார். இதனிடையே அவர் இறந்தும் சில மாதங்கள் கழிந்த நிலையில் சீரியல் இன்னும் ஒளிபரப்பாகி வருகிறது. 5 ஆண்டுகளை கடந்து இந்த சீரியல் அடுத்தடுத்த எபிசோடுகளை கொடுத்து வரும் நிலையில் தற்போது டிஆர்பியிலும் குறைந்துள்ளதால் இந்த சீரியலை விரைவில் நிறைவு செய்ய விஜய் டிவி திட்டமிட்டுள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளன. டிஆர்பி குறைந்தால் உடனடியாக அந்த குறிப்பிட்ட சீரியலை நிறைவு செய்வதை சேனல்கள் வாடிக்கையாக வைத்துள்ளனர்.
ரசிகர்கள் எதிர்பார்ப்பு: அந்த வகையில் அடுத்ததாக பாக்கியலட்சுமி சீரியலும் நிறைவடைய உள்ளதாக கூறப்பட்டுள்ளது. தற்போது தான் இந்த சீரியலில் தன்னுடைய அம்மாவை நிராகரித்து விட்டு அப்பாவின் ஆதரவில் செழியன், இனியா உள்ளிட்டவர்கள் செயல்பட்டு வருவதாக காட்சிகள் காணப்படுகின்றன. கோபியும் பாக்கியாவை பழிவாங்கும் மும்முரத்துடன் செயல்பட்டு வரும் நிலையில் இந்த சீரியலை எப்படி நிறைவு செய்வார்கள் என்பது குறித்து ரசிகர்கள் யோசித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











