Suchithra: விரைவில் எண்டு கார்டு போடும் பாக்கியலட்சுமி சீரியல்.. அடுத்த சீரியலுக்கு தாவிய சுசித்ரா!
சென்னை: விஜய் டிவியின் முன்னணி சீரியல்களில் ஒன்றான பாக்கியலட்சுமி சீரியல் கடந்த 5 ஆண்டுகளில் 1300 எபிசோடுகளை தாண்டி வெற்றி நடை போட்டு வருகிறது. இந்த சீரியல் விரைவில் எண்ட்கார்டு போட உள்ளதாக கடந்த சில மாதங்களாகவே தகவல்கள் வெளியாகி வருகின்றன. அதற்கேற்ப தற்போது சீரியலில் அடுத்தடுத்து ஒவ்வொரு விஷயங்களாக முடிக்கப்பட்டு வருகிறது.
அந்தவகையில் கோபி மற்றும் ராதிகாவிற்கு விவாகரத்து ஆகியுள்ளது. பாக்கியாவும் தன்னுடைய கேரியரில் அடுத்த கட்டமாக இரண்டாவது ரெஸ்டாரன்டை துவங்கியுள்ளார். அவரது மகன் எழிலின் படம் ரிலீசாகி அவரும் முன்னணி இயக்குநராக மாறியுள்ளதாக காட்டப்பட்டுள்ளது. செழியன் மற்றும் இனியா வாழ்க்கையிலும் அடுத்த கட்டங்கள் ஏற்பட்டுள்ளதாக இந்த சீரியல் அடுத்தடுத்து எபிசோடுகளை கொடுத்து வருகிறது. இதனால் விரைவில் சீரியல் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பாக்கியலட்சுமி சீரியல்: விஜய் டிவியின் மாஸ் காட்டும் சீரியல்களில் முக்கியமான சீரியலாக பாக்கியலட்சுமி தொடர் பார்க்கப்படுகிறது. இந்த சீரியலில் பாக்கியலட்சுமி என்ற லீட் கேரக்டரில் நடித்து வருகிறார் நடிகை சுசித்ரா. கடந்த ஐந்து ஆண்டுகளாக இந்த சீரியல் வெற்றிகரமான சீரியலாக நடை போட்டு வருகிறது. கடந்த சில மாதங்களாகவே இந்த சீரியல் எண்ட்கார்டு போடவுள்ளதாக தொடர்ந்து தகவல்கள் வெளியாகி வருகின்றன. ஆயினும் அதற்கான எந்த முகாந்திரமும் காணப்படாமல் இருந்தது. ஆனால் கடந்த சில வாரங்களாக அடுத்தடுத்த விஷயங்கள் சீரியல் விரைவில் நிறைவடைய உள்ளதாக காட்டுகிறது.
விரைவில் எண்ட் கார்ட்?: கோபி மற்றும் ராதிகாவிற்கு இடையில் விவாகரத்தாகி ராதிகா தனியாக பெங்களூரில் போய் செட்டில் ஆகிவிட்டார். இதனிடையே எழிலின் படமும் ரிலீசாகி மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றுள்ளதாக காட்டப்படுகிறது. செழியனும் தன்னுடைய மாமனாருக்கு உடல் நலக்குறைவு காரணமாக அங்கு சென்று செட்டிலானதாக காட்டப்படுகிறது. இதனிடையே இனியாவிற்கும் செல்வியின் மகனுக்கும் இடையில் காதல் ஏற்படுவதாகவும் சீரியலில் அடுத்தடுத்த எபிசோடுகளில் காணப்படுகின்றது. தன்னுடைய வீட்டின் வேலைக்காரியின் மகனை தன்னுடைய மருமகனாக பாக்கியா ஏற்பாரா அல்லது ஈஸ்வரி இதற்கு முட்டுக்கட்டை போடுவாரா என்பதாக ரசிகர்கள் யோசித்து வருகின்றனர்.
புதிய சீரியலில் இணைந்த சுசித்ரா: இந்நிலையில் தற்போது பாக்கியலட்சுமி கேரக்டரில் நடித்து வரும் நடிகை சுசித்ரா அடுத்த சீரியலில் கமிட்டாகியுள்ளார். கன்னடத்தில் விரைவில் ஒளிபரப்பாக உள்ள சிந்து பைரவி என்ற சீரியலில் தான் இவர் தற்போது கமிட்டாகியுள்ளார். சன் நெட்வொர்க்கின் கன்னட சேனலான உதயா சேனலில் இந்த சீரியல் விரைவில் ஒளிபரப்பாக உள்ளது. இதற்கான ப்ரோமோ தற்போது வெளியாகி உள்ளது. இதில் சிந்து என்ற பெண்ணின் அம்மாவாக சுசித்ரா நடிக்க உள்ளதாக தெரிகிறது. சுசித்ரா சிந்து பைரவி சீரியலில் தற்போது கமிட் ஆகியுள்ளதால் பாக்கியலட்சுமி சீரியல் விரைவில் நிறைவு பெறுமா என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்துள்ளது. விரைவில் இதற்கான விடை கிடைக்கும் என்று எதிர்பார்க்கலாம்.
ஆடுகளம் சீரியலின் ரீமேக்: சன் டிவியில் ஒளிபரப்பாகிவரும் ஆடுகளம் என்ற சீரியலின் கன்னட ரீமேக்காக உருவாகியுள்ளது சிந்து பைரவி. இந்த சீரியலிலும் வளர்ந்த பெண்களுக்கு அம்மாவாக நடிக்க சுசித்ரா கமிட்டாகியுள்ளார். பாக்கியலட்சுமி சீரியலில் மெச்சூர்டான கேரக்டரில் நடித்து வருகிறார் சுசித்ரா. வளர்ந்த இரு மகன்கள், அவர்களின் வாழ்க்கை, மருமகள்கள், மகள் இனியா இவர்கள் மட்டுமில்லாமல் தன்னுடைய மாமனார், மாமியார், தன்னுடைய கணவனின் இரண்டாவது மனைவி என அனைவரிடமும் இவர் அன்புடன் நடந்துக் கொள்கிறார். சமீபத்தில் தன்னுடைய வாழ்க்கையும் சிறப்பாக்கிக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் இவருக்கு ஏற்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











