Baakiyalakshmi: நம்பிக்கை துரோகம் செய்ய அசிங்கமாக இல்லையா.. ஜெனி கேள்வியால் நிலைகுலைந்த செழியன்!

சென்னை: விஜய் டிவியின் முன்னணி தொடராக ரசிகர்களை கொண்டாட செய்து வருகிறது பாக்கியலட்சுமி சீரியல்.

இந்த நிகழ்ச்சியில் பாக்கியாவின் செயல்பாடுகள் சில நேரங்களில் கலவையான விமர்சனங்களை பெற்றபோதிலும் பரபரப்பான எபிசோட்களால் இந்த தொடர் களைகட்டி வருகிறது. தன்னுடைய மகன்களின் வாழ்க்கையில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளை களையும் நோக்கில் பாக்கியா செயல்பட்ட நிலையில், தற்போது செழியன் விவகாரம் குடும்பத்தினருக்கு தெரியவந்துள்ளது.

Vijay TVs Baakiyalakshmi serial latest episode makes fans more thrilling


பாக்கியலட்சுமி தொடர்: விஜய் டிவியின் முன்னணி நிகழ்ச்சிகளில் ஒன்றாக ரசிகர்களை கவர்ந்து வருகிறது பாக்கியலட்சுமி தொடர். இந்தத் தொடரில் பாக்கியா -கோபி -ராதிகா என முன்னணி கேரக்டர்களையும் அவர்களுக்கு நெருங்கிய உறவினர்களை மட்டுமே கேரக்டர்களாக காட்சிப்படுத்தி வருகிறார் இயக்குநர். கோபியை விவாகரத்து செய்தபோதிலும் எந்தவிதமான நிம்மதியும் இல்லாமல் அவரது பெற்றோர், தன்னுடைய மகன்கள், மகள் என அனைவரையும் யோசித்து செயல்பட்டு வருகிறார் பாக்கியா.

முடங்கிய பாக்கியா: கேன்டீன் கான்டிராக்டை ஏற்று செயல்படுத்திவந்த பாக்கியா இடையில் சமையல் கான்டிராக்ட், மசாலா பிசினஸ் என அனைத்தையும் செய்துவந்த நிலையில் ஆங்கில வகுப்பு, கல்லூரி படிப்பு என அடுத்தடுத்து தன்னை சிறப்பாக வெளிப்படுத்தி வந்தார். இந்நிலையில் ராதிகாவால் அவரது கேன்டீன் கான்டிராக்ட் பறிக்கப்பட ஆங்கில வகுப்பு, கல்லூரி படிப்பு என அனைத்தையும் நிறுத்திவிட்டு தற்போது வீடு, சமையல் கான்டிராக்ட் என முடங்கியுள்ளார்.

மீண்டும் பாக்கியா வீட்டிற்கு வந்த கோபி: தன்னுடைய வாழ்க்கையை கேள்விக்குறியாக்கிய கோபி மீண்டும் ஈஸ்வரியால் தன்னுடைய வீட்டிற்கே வர, அவரைத் தொடர்ந்து அவரது இரண்டாவது மனைவி ராதிகாவும் வருகிறார். இதனால் குடும்பத்தில் அவர்கள் ஏற்படுத்தப்போகும் பிரச்சினைகளை எண்ணி கலக்கமடைகிறார் பாக்கியா. இந்நிலையில் பாக்கியாவை மிஞ்சும்வகையில் அடுத்தடுத்து கணேஷ். மாலினி விஸ்வரூபம் எடுக்கிறார்கள். தன்னுடைய மகன்களின் வாழ்க்கையை கேள்விக்குறியாக்க நினைக்கும் இவர்களை பாக்கியா எப்படி சமாளிக்கப் போகிறார் என்பதை அறிய ரசிகர்கள் ஆர்வம் காட்டினார்.

தலைதூக்கிய செழியன் -மாலினி விவகாரம்: இந்நிலையில் முதலாவது பிரச்சினை தற்போது தலைதூக்கிவிட்டது. தான் எந்த விஷயம் குடும்பத்தினருக்கும் ஜெனிக்கு தெரியக்கூடாது என்று நினைத்து அடுத்தடுத்து யோசித்து வந்தாரோ தற்போது அது மாலினி மூலம் அரங்கேறிவிட்டது. தன்னை கோயிலில் பார்த்து, செழியனிடம் இனி பேசக்கூடாது என்று கூறிய பாக்கியாவை பழிவாங்கும் நோக்கில், அவரது வீட்டிற்கே வந்து மாலினி, செழியனுக்கும் தனக்கும் Illegal contact உள்ளதாக குடும்பத்தினரிடையே போட்டுடைக்கிறார்.

அதிர்ச்சியின் உச்சத்தில் ஜெனி: செழியன் தன்னிடம் ஐ லவ் யூ சொன்ன வீடியோக்களையும் ஜெனி உள்ளிட்ட குடும்பத்தினரிடம் காட்டுகிறார் மாலினி. இதனால் அதிர்ச்சியாகும் ஜெனி, விரக்தியின் உச்சத்திற்கே செல்கிறார். தான் பல்வேறு விஷயங்களில் தன்னுடைய கணவனுக்கு சாதகமாக நடந்துக் கொண்ட நிலையில், தன்னை பைத்தியக்காரியாக்கிவிட்டு இதுபோன்ற உறவில் செழியின் ஈடுபட்டதை ஏற்றுக் கொள்ள முடியாமல் செழியனிடம் பல்வேறு கேள்விகளை ஆத்திரத்துடன் கேட்கிறார் ஜெனி. மேலும் இந்த விஷயத்தை தன்னிடம் இருந்து மறைந்த பாக்கியாமீதும் ஜெனிக்கு கடுமையான கோபம் ஏற்படுகிறது.

வீட்டை விட்டு வெளியேறும் ஜெனி: அவரை சமாதானப்படுத்த குடும்பத்தினர் அனைவரும் முயல, ஆனால் அவரால் இந்த விஷயத்தை ஜீரணிக்க முடியாமல், வீட்டை விட்டு வெளியேறும் முடிவை எடுக்கிறார் ஜெனி. இதனால் பரிதவிக்கும் செழியன், தான் செய்த தவறுக்காக ஜெனி காலில் விழத் தயாராக இருப்பதாக கூறுகிறார். ஆனாலும் ஆத்திரம் குறையான ஜெனி, தன்னையும் தன்னுடைய குழந்தையையும் இனி யாரும் பார்க்க வரக்கூடாது என்று கண்டிப்புடன் கூறுகிறார். மேலும் அந்தக் குடும்பத்திற்கும் குழந்தைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும் கூறுவதாக இன்றைய எபிசோட் காணப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X