Baakiyalakshmi: கல்லூரியில் இணைந்த பாக்கியா.. புதிய அவதாரத்தில் ஈஸ்வரி.. என்னங்க நடக்குது!
சென்னை: விஜய் டிவியின் முன்னணி தொடரான பாக்கியலட்சுமி அடுத்தடுத்த எபிசோட்களால் களைகட்டி வருகிறது.
சேனலின் டிஆர்பியிலும் அதிக புள்ளிகளை பெற்று தொடர்ந்து முதலிடத்தில் பாக்கியலட்சுமி தொடர் நிலை கொண்டுள்ளது.

இந்தத் தொடரில் அடுத்தடுத்த சுவாரஸ்யங்களை கொண்டுவந்து ரசிகர்களை கட்டிப் போட்டு வருகிறார் இயக்குநர்.
முதல் நாளிலேயே கல்லூரியில் அனைவரையும் கவர்ந்த பாக்கியா: விஜய் டிவியின் முன்னணி தொடராகவும் டிஆர்பியில் அதிக புள்ளிகளை பெற்று முதலிடத்திலும் உள்ள தொடர் பாக்கியலட்சுமி. இந்தத் தொடரின் அடுத்தடுத்த எபிசோட்களை ரசிகர்களை சிறப்பாக கவரும்வகையில் திட்டமிடப்பட்டு ஒளிபரப்பாகி வருகிறது. தொடரில் பாக்கியா, கோபி மற்றும் ராதிகா என லீட் கேரக்டர்களுக்குள் ஏற்படும் பிரச்சினைகளை வைத்துக் கொண்டு சடுகுடு ஆடி வருகிறார் இயக்குநர். இவர்களுக்கு சிறிய, பெரிய பிரச்சினைகளை கிளப்பி சுவாரஸ்யத்தை கூட்டி வருகிறார்.
தன்னுடைய முன்னாள் கணவன் கோபியிடம் இருந்து 18 லட்சம் ரூபாயை கொடுத்து வீட்டை மீட்டு, குடும்பத்தினர் விருப்பப்படி அதை தன்னுடைய பெயரில் ரிஜிஸ்டர் செய்கிறார் பாக்கியா. தொடர்ந்து தன்னுடைய வேலைகளில் மும்முரமாக இருக்கும் அவருக்கு தன்னுடைய தந்தை இறப்பால் கைநழுவிப்போன கல்லூரி படிப்பின்மீது விருப்பம் ஏற்படுகிறது. இதையடுத்து மாலைநேர கல்லூரியில் சேர்கிறார். அவருடைய மகள் இனியா படிக்கும் கல்லூரியிலேயே சேர்கிறார்.
இதனால் அடுத்தடுத்து ஏற்படப் போகும் பிரச்சினைகளை தற்போதே யூகிக்க முடிகிறது. முதல் நாளிலேயே மகளின் தோழிகளிடம் தன்னை இனியாவின் அம்மா என்றும் தான் இதே கல்லூரியில் சேர்ந்துள்ளதாகவும் பாக்கியா கூற, அவர்கள் சிரிக்க, இனியாவிற்கு அவமானமாக போகிறது. ஆனால் இதையெல்லாம் யோசிக்காமல், அதையும் தனக்கான அங்கீகாரமாகவே கருதுகிறார் பாக்கியா. ஆனால் அவரது வகுப்பில் அவருக்கு அதிகமான நண்பர்கள் கிடைக்கும் சூழல் ஏற்படுகிறது.
இதனிடையே, பாக்கியாவின் ஒவ்வொரு முயற்சிக்கும் காரணமாக அமைந்து, அவரது வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் பழனிச்சாமி, தன்னுடைய அம்மாவை அழைத்துக் கொண்டு, பாக்கியாவை பார்க்க அவரது கல்லூரிக்கே வந்து, அவரது முதல் நாள் வகுப்பிற்கு வாழ்த்து கூறுகிறார். பழனிச்சாமியின் அம்மாவும், பாக்கியாவிற்கு வாழ்த்துக்களை பகிர்கிறார். இதனிடையே, கேன்டீனில் பாக்கியா இல்லாததால் அங்கு குளறுபடி ஏற்படுகிறது.
தான் இல்லாத நேரங்களில் ராதிகா, வம்பிழுப்பார் என்று முன்னதாகவே தனக்கு கீழ் பணியாற்றும் செல்வி உள்ளிட்டவர்களை எச்சரிக்கை செய்கிறார் பாக்கியா. ஆனால் அவர் கூறியதற்கு ஏற்ப, ராதிகா, தோசை ஆர்டர் செய்ய, சிலிண்டர் தீர்ந்ததால், அதை மாற்றி பின்பு, அவருக்கு தோசையை பரிமாற நேரம் பிடிக்கிறது. இதை வைத்துக் கொண்டு, செல்வியை வம்பிழுக்கிறார். தொடர்ந்து பிரச்சினைகள் ஏற்பட்டால் விளைவுகளை சந்திக்க நேரும் என்றும் எச்சரிக்கிறார்.
இதனிடையே, காசிக்கு போன ஈஸ்வரி, திரும்புகிறார். ஆனால் வேறு மாதிரியாக திரும்புகிறார். முற்றிலும் சாமியாராக அவர் மாறி குடும்பத்தினருக்கு அதிர்ச்சியை கொடுக்கிறார். தனக்கு ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடு ஏற்பட்டுள்ளதாகவும் வாழ்க்கையை அனுபவிக்காமல் போட்டி, பொறாமை என அதை சிக்கலாக்கிக் கொள்வதாகவும் இனிமேல் தான் மற்றவர்களுக்கு உதாரணமாக வாழப் போவதாகவும் கூறுவதாக இன்றைய எபிசோட் காணப்படுகிறது.


Click it and Unblock the Notifications











