Baakiyalakshmi: அமிர்தாவை தேடிச்செல்லும் கணேஷ்.. வீட்டை விட்டு வெளியேற்றிய மாமியார்!
சென்னை: விஜய் டிவியின் முன்னணி தொடரான பாக்கியலட்சுமி சீரியல் தொடர்ந்து இந்த வாரமும் இரண்டாவது இடத்தையே பெற்றுள்ளது.
இந்தத் தொடரில் பரபரப்பான காட்சிகளை தொடர்ந்து கொடுத்து வருகிறார் இயக்குநர். இருந்தபோதிலும் முதலிடத்தை பிடிக்க தொடர் தடுமாறி வருகிறது. தன்னுடைய வீடு புகுந்து தன்னுடைய டிரைவிங் லைசென்சை திருடிய கோபியின் வீட்டிற்கே செல்லும் பாக்கியா, அவரிடம் அதிரடியாக பேசி தன்னுடைய வீட்டு சாவியை வாங்குகிறார்.

அமிர்தாவை தேடிச் சென்ற கணேஷிற்கு நேர்ந்த அவமானம்: விஜய் டிவியின் முன்னணி தொடர்களில் ஒன்றாக கடந்த பல மாதங்களாக மாஸ் காட்டி வரும் பாக்கியலட்சுமி தொடர், தற்போது தன்னுடைய நிலையிலிருந்து பின்தங்கியுள்ளது. இருந்தபோதிலும் ரசிகர்களின் விருப்பத்திற்குரிய தொடராகவே பாக்கியலட்சுமி தொடர்ந்து மாஸ் காட்டி வருகிறது. இந்தத் தொடரின் அடுத்தடுத்த எபிசோட்கள் ரசிகர்களை கவர்ந்துள்ள நிலையிலும் டிஆர்பியில் பின்தங்கி இரண்டாவது இடத்திலேயே தொடர்ந்து நிலைப்பெற்றுள்ளது பாக்கியலட்சுமி தொடர்.
விஜய் டிவியின் முதலிடத்தில் சிறகடிக்க ஆசை சீரியல் தொடர்ந்து இருந்து வருகிறது. இந்தத் தொடரின் முத்து மற்றும் மீனா கேரக்டர்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. பாக்கியலட்சுமி தொடரிலும் பாக்கியா, கோபி மற்றும் ராதிகா என லீட் கேரக்டர்கள் மற்றும் அவர்களை சுற்றி சில கேரக்டர்கள் என குறைவான கேரக்டர்களிலேயே நிறைவான எபிசோட்களை கொடுத்து வருகிறார் இயக்குநர்.
இந்தத் தொடரில் யாரும் இல்லாத நேரத்தில் தன்னுடைய வீடு புகுந்து தன்னுடைய டிரைவிங் லைசென்சை தன்னுடைய முன்னாள் கணவன் கோபி திருடியது குறித்து எழில்மூலம் தெரிந்துக் கொள்கிறார் பாக்கியா. அவருக்கு இது அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. இவ்வளவு கீழ்நிலையில் கோபி யோசிக்கிறாரா என்று அவரது பெற்றோரும் மனஉளைச்சலுக்கு ஆளாகின்றனர். தன்னுடைய அப்பாவை மிகவும் உயர்வான இடத்தை வைத்து பார்த்துவந்த இனியாவிற்கும் இந்த விஷயம் அதிர்ச்சியை உண்டாக்குகிறது.
இந்நிலையில் கேரளா டிரிப்பிற்கு சென்ற பாக்கியா, வரும்வழியில் விபத்து ஒன்றில் சிக்கிக் கொள்கிறார். அவரது லைசென்ஸ் தொலைந்த நிலையில் ஒரிஜினல் லைசென்சை அனுப்ப தன்னுடைய மாமனாரிடம் அவர் கேட்கிறார். இதை கேள்விப்படும் கோபி, பாக்கியாவை பழிவாங்க சரியான சந்தர்ப்பம் என்பதை உணர்ந்து, பாக்கியா வீடு புகுந்து அவரது ஒரிஜினல் லைசென்சை திருடுகிறார். யாருக்கும் தெரியாமல் அதை உடைத்தும் போடுகிறார். இதனால் பாக்கியா கைதாகும் சூழல் உருவாகிறது.
இதனிடையே அந்த லைசென்சை கைப்பற்றும் பழனிச்சாமி, அதை புகைப்படம் எடுத்து அனுப்ப, பாக்கியா, கைதாவதில் இருந்து தப்புகிறார். பாதுகாப்பாக அவர், தன்னுடைய மகள், மாமியார் மற்றும் செல்வியை மீண்டும் வீட்டிற்கு அழைத்து வருகிறார். மேலும் கோபியின் திருட்டுத்தனம் வெட்டவெளிச்சமாகிறது. இதனால் மனமுடையும் பாக்கியா, இந்த அளவிற்கு அவர் செய்ய தான், அவருக்கு என்ன கெடுதலை செய்தேன் என்று குமுறுகிறார்.
இதனிடையே, கோபியின் வீட்டிற்கு செல்லும் பாக்கியா, கோபி மற்றும் ராதிகாவிடம் சண்டையிட்டு, தன்னுடைய வீட்டு சாவியை பெறுகிறார். அவரது இந்த அதிரடியான மாற்றம் கோபிக்கு மட்டுமில்லாமல் ராதிகாவிற்கும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. இதனிடையே, உயிருடன் திரும்பிவரும் அமிர்தாவின் கணவன் கணேஷ், அமிர்தாவை தேடி அவரது மாமியார் வீட்டிற்கு செல்கிறார். அமிர்தா குறித்து விசாரிக்கிறார். அவரை உயிருடன் பார்க்கும் மாமியார் அதிர்ச்சிக்குள்ளாகிறார்.
அமிர்தாவின் மறுமணம் குறித்து அவரது பெற்றோர் சொல்லாமல் இருப்பது குறித்து தெரியவரும் நிலையில், சாதுர்யமாக பேசி, கணேஷை வீட்டை விட்டு வெளியேற்றுகிறார். இதனால் ஆத்திரத்துடன் கதவை தட்டிவிட்டு கணேஷ் அந்த இடத்தில் இருந்து வெளியேறுகிறார். இதனிடையே, கேன்டீனில் பாக்கியாவை மீண்டும் ராதிகா வம்பிழுப்பதாக இன்றைய எபிசோட் காணப்படுகிறது. தொடர்ந்து அவரது டார்ச்சர்கள் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











