Baakiyalakshmi serial: கோபியை வெளியே அனுப்புங்க.. இல்லன்னா நான் உள்ளே.. மாட்டுனது பாக்கியா தான்!

சென்னை: விஜய் டிவியின் முன்னணி தொடரான பாக்கியலட்சுமி சீரியல் அடுத்தடுத்து ரசிகர்களை கவரும்வகையில் எபிசோட்களை கொடுத்து வருகிறது.

இந்தத் தொடரில் அடுத்தடுத்து சிக்கலில் மாட்டியுள்ள தன்னுடைய மகன்களின் வாழ்க்கையை மீட்க பாக்கியா எப்படி செயல்பட போகிறார் என்பதை அறிய ரசிகர்கள் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இதேபோல உடல்நிலை சரியில்லாததால் கோபியை தன்னுடைய வீட்டிற்கு அழைத்து வருகிறார் ஈஸ்வரி. இதனால் செய்வதறியாமல் திகைக்கிறார் பாக்கியா.

Vijay TVs Baakiyalakshmi serial new episode impresses fans a lot

பாக்கியலட்சுமி தொடர்: விஜய் டிவியின் முன்னணி தொடரான பாக்கியலட்சுமி தொடரில் அடுத்தடுத்த பரபரப்பான எபிசோட்களை இயக்குநர் கொடுத்து வருகிறார். இந்தத் தொடரில் அடுத்தடுத்த சிக்கல்களில் தன்னுடைய மகன்கள் செழியன் மற்றும் எழிலின் வாழ்க்கை சிக்குண்ட நிலையில், அதிலிருந்து அவர்களை பாக்கியா எப்படி மீட்கப்போகிறார் என்பதை அறிய ரசிகர்கள் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர். மேலும் உடல்நிலை பாதிக்கப்பட்ட கோபியை, ஈஸ்வரி பாக்கியா வீட்டிற்கு அழைத்து வருகிறார்.

அச்சத்தில் பாக்கியா: முன்னதாக கோபி மற்றும் ராதிகா இருவரும் தன்னுடைய வீட்டில் வந்து தங்கிய நிலையில், ஏராளமான பிரச்சினைகளை சந்தித்தார் பாக்கியா. இதையடுத்து 20 லட்சம் ரூபாயை கொடுத்து அந்த வீட்டை தன்னுடைய பெயருக்கு ரிஜிஸ்டர் செய்தார். தொடர்ந்து கோபி மற்றும் ராதிகா இருவரும் வீட்டை விட்டு வெளியேறினர். இதனிடையே கோபியை மீண்டும் வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார் ஈஸ்வரி. இதனால் என்னமாதிரியான பிரச்சினைகள் ஏற்படுமோ என்ற அச்சத்தில் பாக்கியா தவித்து வருகிறார்.

Vijay TVs Baakiyalakshmi serial new episode impresses fans a lot

சண்டை பிடிக்கும் ராதிகா: இதனிடையே கோபியிடம் ராதிகா வீட்டிற்கு வெளியில் பேச முயல்கிறார். ஆனால் அதை தடுக்கும் ஈஸ்வரி, போனில் பேசுவதற்கும் தடை போடுகிறார். இதனால் அச்சமடையும் ராதிகா, தன்னுடைய லக்கேஜையும் எடுத்துக் கொண்டு, பாக்கியா வீட்டிற்கே வருகிறார். அவரிடம் ஈஸ்வரி சண்டை பிடிக்கிறார். அவரிடம் பதிலுக்கு சண்டை பிடிக்கும் ராதிகா, தன்னுடன் தன்னுடைய கணவனை அனுப்ப வேண்டும் என்றும் இல்லையென்றால் தான் அந்த வீட்டில்தான் தங்குவேன் என்றும் சண்டை பிடிக்கிறார்.

Vijay TVs Baakiyalakshmi serial new episode impresses fans a lot

பாக்கியா வீட்டில் ராதிகா: அவரை சமாதானப்படுத்த ராமமூர்த்தி முயற்சிக்கும் நிலையில், தன்னுடைய வாழ்க்கையை காப்பாற்றிக் கொள்ளவே தான் இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் ராதிகா கூறுகிறார். தொடர்ந்து பெட்டிப் படுக்கையுடன் கோபி காட்டும், அறைக்குள் செல்கிறார். இதனால் குடும்பத்தினர் அனைவரும் குழப்பத்தில் ஆழ்கின்றனர். இத்தனை பிரச்சினையிலும் எதுவும் பேசாமல் இருக்கிறார் கோபி. இதுவும் அனைவரையும் ஆத்திரப்பட வைக்கிறது.

பொங்கியெழும் எழில், பாக்கியா: இதையடுத்து ஆத்திரப்படும் எழில், ராதிகா இந்த வீட்டிற்கு வந்து அதிகாரம் செய்யும் நிலையில், நாம் அவர்களுக்கு அடிமையாக இருக்க வேண்டுமா என்று கேள்வி எழுப்புகிறார். இதையடுத்து அவர்களை சமாதானப்படுத்தும் ராமமூர்த்தி, தன்னுடைய மகனின் உடல்நலன் குறித்த பயத்தால் ஈஸ்வரியும் தன்னுடைய வாழ்க்கை குறித்த பயத்தால் ராதிகாவும் இப்படி செயல்படுவதாகவும் விரைவில் அனைத்தும் மாறும் என்றும் பாக்கியா உள்ளிட்டவர்களை சமாதானப்படுத்துகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X