Baakiyalakshmi: ஜெனி வீட்டின் வாசலில் தவமிருக்கும் செழியன்.. மன்னிக்க மனமில்லாத ஜெனி!

சென்னை: விஜய் டிவியின் முன்னணி தொடர்களில் ஒன்றான பாக்கியலட்சுமி அடுத்தடுத்த பரபரப்பான எபிசோட்களை கொடுத்து வருகிறது.

தன்னுடைய மகன்களின் வாழ்க்கையில் ஏற்பட்ட பிரச்சினைகளை தானே சரிசெய்து விடலாம் என பாக்கியா நினைத்த நிலையில் செழியன் வாழ்க்கையில் மாலினியால் மிகபெரிய பிரச்சினை ஏற்பட்டுள்ளது.

Vijay TVs Baakiyalakshmi serial new episode makes fans more thrilling


செழியன் -மாலினி உறவு குறித்து தெரியவந்த நிலையில் வீட்டை விட்டு தன்னுடைய குழந்தையுடன் வெளியேறுகிறார் ஜெனி.

பாக்கியலட்சுமி தொடர்: விஜய் டிவியின் முன்னணி தொடராக பல ஆண்டுகளாக ரசிகர்களை கவர்ந்து வருகிறது பாக்கியலட்சுமி. பெங்காலியில் ஏராளமான ரசிகர்களை கவர்ந்த ஸ்ரீமோயி என்ற தொடரை மையமாக வைத்து உருவாகியுள்ள இந்தத் தொடரில் பாக்கியா, கோபி, ராதிகா என லீட் கேரக்டர்களை கொண்டு, அவர்களின் சொந்தங்களையும் சேர்த்து கதைக்களத்தை உருவாக்கியுள்ளார் இயக்குநர். கணவனை விவாகரத்து செய்த பாக்கியா, வாழ்க்கையில் சொந்த வாழ்க்கையிலும் கேரியரிலும் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை இந்தத் தொடர் எடுத்துக்காட்டி வருகிறது.

மீண்டும் வீட்டிற்குள் வந்த கோபி: சொந்த வாழ்க்கையில் 20 லட்சம் ரூபாய் கொடுத்து வீட்டை எழுதி வாங்கிவிட்டு, கோபியை வீட்டை விட்டு ராதிகாவுடன் வெளியேற்றுகிறார் பாக்கியா. இந்நிலையில் அவருக்கு உடல்நிலை சரியில்லாததை காரணம் காட்டி மீண்டும் வீட்டிற்கு அழைத்து வருகிறார் ஈஸ்வரி. தொடர்ந்து ராதிகாவும் பாக்கியா வீட்டிற்கு வருகிறார். இதனால் குடும்பத்தில் இவர்களால் பிரச்சினைகள் ஏற்படும என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வில்லத்தனம் காட்டிய மாலினி: ஆனால் ராதிகாவை விட பல மடங்கு அதிகமான வில்லத்தனத்தை தற்போது மாலினி அரங்கேற்றி வருகிறார். செழியனுடன் ரிலேஷன்ஷிப்பை ஏற்படுத்திக் கொண்ட அவர், அதை வைத்து அவரை மிரட்டுகிறார். தொடர்ந்து தன்னுடன் இருக்க கட்டாயப்படுத்துகிறார். ஆனால் தன்னுடைய மனைவி மற்றும் புதிதாக பிறந்த பெண்குழந்தையை பிரிய மனமின்றி அவருக்கு நோ சொல்கிறார் செழியன். இதனால் ஏற்படும் குழப்பங்களையும் அவர் சமாளிக்கிறார்.

வீட்டைவிட்டு வெளியேறிய ஜெனி: ஆனால் இந்த விஷயம் பாக்கியாவிற்கு தெரியவர, மாலினியிடம் தன்னுடைய மகனை விட்டுவிட அவர் கோருகிறார். ஆனால் இதற்கெல்லாம் செவிசாய்க்காத மாலினி, பாக்கியா குடும்பத்தினரிடம் செழியன் மற்றும் தனக்கிடையில் உள்ள தொடர்வை வெளிப்படுத்தி குடும்பத்தில் குழப்பத்தை ஏற்படுத்துகிறார். இதனால் ஆத்திரமடையும் ஜெனி, தன்னுடைய குழந்தையை அழைத்துக் கொண்டு அம்மா வீட்டிற்கு சென்று விடுகிறார்.

குடும்பத்தினரிடம் திட்டுவாங்கும் பாக்கியா: ஈஸ்வரி, கோபி ஆகியோர் இந்த குழப்பங்களுக்கெல்லாம் பாக்கியாதான் காரணம் என்றும், உண்மை தெரிந்தவுடன் குடும்பத்தினரிடம் அவர் தெரியப்படுத்தியிருக்க வேண்டும் என்றும் கோபப்படுகின்றனர். தன்னுடைய மகனின் வாழ்க்கை பாதிக்கப்பட்டதுடன் இதில் அனைவரும் தன்னை குற்றவாளியாக்கியது பாக்கியாவை உடைய செய்கிறது. இனியா மற்றும் எழில் அவரை சமாதானப்படுத்துகின்றனர். பழனிச்சாமி, ராதிகாவும் இந்த விஷயத்தில் அவருக்கு ஆறுதல் தெரிவிக்கின்றனர்.

தவறை உணர்ந்த செழியன்: இதனிடையே இந்த விஷயத்தில் மனமுடைந்து தன்னுடைய தவறை புரிந்துக் கொள்ளும் செழியன், தன்னுடைய மனைவி, மகள் மற்றும் அம்மா என அனைவரும் தன்னால் பாதிக்கப்பட்டதை நினைத்து மருகுகிறார். தொடர்ந்து ஜெனி வீட்டிற்கு செல்லும் செழியன், தன்னை மன்னிக்கும்படி ஜெனியிடமும் அவரது அம்மாவிடமும் கெஞ்சுகிறார். ஆனால் ஜெனியின் அம்மாவோ அவரை வீட்டிற்குள் சேர்க்காமல் கதவை தாழிடுவதாக இன்றைய எபிசோட் காணப்படுகிறது. மேலும் ஜெனியை சமாதானப்படுத்த பாக்கியாவும் அவருக்கு கால் செய்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X