Baakiyalakshmi: புஸ்ஸாகிப் போன கோபியின் வில்லத்தனம்.. பாக்கியாவிற்கு கைக்கொடுத்த பழனிச்சாமி!

சென்னை: விஜய் டிவியின் முன்னணி தொடரான பாக்கியலட்சுமி சீரியலில் இன்றைய தினம் பரபரப்பான காட்சிகள் அரங்கேறின.

கேரளாவிலிருந்து திரும்பிக் கொண்டிருந்த பாக்கியா அண்ட் டீம் காரின் முன்பு முதியவர் வந்து விழ விபத்து நேர்கிறது. முன்னதாக டிரைவிங் லைசென்சை பாக்கியா தொலைத்த நிலையில், போலீசாரிடம் சிக்கி நான்கு பெண்களும் பரிதவிக்கின்றனர்.

Vijay TVs Baakiyalakshmi serial new episode make fans more thrilling

ரசிகர்களை கவர்ந்த பாக்கியலட்சுமி தொடரின் புதிய எபிசோட்: விஜய் டிவியின் முன்னணி தொடராக பல மாதங்களாக மாஸ் காட்டி வருகிறது பாக்கியலட்சுமி. இந்தத் தொடரில் அடுத்தடுத்த சிறப்பான கதைக்களத்தால் சிறப்பான எபிசோட்களை கொடுத்து வருகிறார் இயக்குநர். கோபி, பாக்கியா மற்றும் ராதிகா மற்றும் அவர்களின் நெருங்கிய சொந்தங்களை மட்டுமே கேரக்டர்களாக கொண்டு, சிறப்பான ஸ்கிரீன் ப்ளே மூலம் ரசிகர்களை கவர்ந்து வருகிறது தொடர். இந்தத் தொடரின் கடந்த சில எபிசோட்கள் பரபரப்பிற்கு பஞ்சமில்லாமல் காணப்பட்டது.

தன்னுடைய மகள் ரோட் ட்ரிப்பிற்காக திட்டமிடுகிறார் கோபி. ஆனால் ராதிகாவின் மகள் மயூ பெரிய மனுஷியானதால் அவரால் அதில் பங்கேற்க முடியாத நிலையில், அந்த ட்ரிப்பை கையிலெடுத்து சிறப்பான அனுபவத்தை இனியாவிற்கு கொடுக்கிறார் பாக்கியா. ரசிகர்களுக்கும்தான். இந்தப் படத்தின் துவத்திலிருந்தே பாக்கியாவை மேலும் பக்குவப்படுத்தும் வகையில் பல்வேறு சம்பவங்கள் நடக்கின்றன. அனைத்தையும் சவாலாக ஏற்று தீர்வுகளையும் கொடுக்கிறார்.

கேரள ட்ரிப்பிற்கு கிளம்பிய உடனே, அப்பாவின் விபத்து காரணமாக டிரைவர் வெளியேற, தானே காரை ஓட்டிக் கொண்டு செல்கிறார் பாக்கியா. இதனால் பதறும் ஈஸ்வரி, இனியா மற்றும் செல்வி, பாக்கியாவின் கார் ஓட்டும் திறமையை பார்த்து ஆசுவாசப்படுகின்றனர். இதையடுத்து கேரளாவில், ஹோட்டல் கிடைக்காமல், திண்டாட்டம், நடுக்காட்டில் ஈஸ்வரி மிஸ்ஸிங், பாக்கியா பர்ஸ் காணாமல் போவது என அடுத்தடுத்த பரபரப்பான கட்டங்களை இந்தத் தொடர் கடந்த சில தினங்களாக கொடுத்து வருகிறது.

இதனிடையே, தொடர்ந்து கால் செய்து கோபி, பாக்கியாவிற்கு குடைச்சல் கொடுக்க, ஒரு கட்டத்தில் பொறுமை இழக்கும் ஈஸ்வரி, தன்னுடைய மகனையே திட்டும் நிலை ஏற்படுகிறது. தொடர்ந்து தங்களின் ட்ரிப்பை முடித்துக் கொண்டு, சென்னை திரும்ப மனமில்லாமல் அவர்கள் தங்களது பயணத்தை மேற்கொள்கின்றனர். இதற்கிடையில் நடுவழியில், பாக்கியாவின் கார் முன்பு முதியவர் ஒருவர் சைக்கிளில் வந்து விழ, போஸ்சாரிடம் சிக்குகின்றனர் பாக்கியா அண்ட் டீம்.

இதை கேள்விப்படும் கோபி, வில்லத்தனமாக, தன்னிடம் இருந்த மாற்றுச்சாவியை பயன்படுத்தி, பாக்கியா வீட்டில் புகுந்து, அவரது லைசென்சை திருடுகிறார். தன்னுடைய லைசென்சை திருட்டுக்கொடுத்த பாக்கியா, ஒரிஜினல் லைசென்சையும் கோபி திருடியதால், போலீஸ் ஸ்டேஷனுக்கு செல்லும் நிலைக்கு தள்ளப்படுகிறார். ஆனால் உரிய நேரத்தில் கோபி வீசியெறியும் லைசென்சை கைப்பற்றும் பழனிச்சாமி, அதை மொபைலில் அனுப்பி வைப்பதால், பாக்கியா தப்புகிறார்.

இதனிடையே, கைதாகாமல் பாக்கியா தப்பித்ததை கேள்வியுறும் கோபி, தன்னுடைய நண்பன் செந்திலிடம் தன்னுடைய ஆத்தரத்தை கொட்டித் தீர்க்கிறார். தான் திருடிய லைசென்ஸ் எப்படி, பழனிச்சாமியிடம் சென்றது என்பது குறித்து யோசிக்கும் அவர், முன்னதாக பாக்கியா மற்றும் பழனிச்சாமி இருவரும் நண்பர்கள் என்பதால், பழனிச்சாமியிடம் பாக்கியா தன்னுடைய லைசென்சை கொடுத்து வைத்திருக்கலாம் என்றும் ஆத்திரத்துடன் கூறுவதாக இன்றைய எபிசோட் காணப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X