Baakiyalakshmi: சிக்கலில் பாக்கியா.. வீடு புகுந்து டிரைவிங் லைசென்சை திருடிய கோபி!
சென்னை: விஜய் டிவியின் முன்னணி தொடர்களில் ஒன்றாக தொடர்ந்து ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுவரும் தொடர் பாக்கியலட்சுமி.
குறைவான கேரக்டர்களில் ரசிகர்களை கவர முடியும் என்பதற்கு உதாரணமாக இந்தத் தொடர் தொடர்ந்து காணப்படுகிறது.

பாக்கியலட்சுமி தொடரில் பாக்கியா, அவரது வளர்ச்சியை பிடிக்காத முன்னாள் கணவர் மற்றும் அவரது இரண்டாவது மனைவி ராதிகா இவர்களை சுற்றியே கதைக்களம் காணப்படுகிறது.
பூட்டிய வீட்டை திறந்து பாக்கியாவின் லைசென்சை திருடிய கோபி: விஜய் டிவியின் முன்னணி தொடராக பல மாதங்கள் தொடர்ந்து சேனலில் ஆதிக்கம் செய்து வருகிறது பாக்கியலட்சுமி தொடர். குறைவான கேரக்டர்களில் நிறைவான எபிசோட்களை கொடுத்து வருவது தொடரின் ப்ளசாக பார்க்கப்படுகிறது. தன்னுடைய கல்லூரி காதல் மற்றும் அதையொட்டி சுயநலமாக யோசிக்கும் கோபி, தான் 25 வருடங்களாக இணைந்து வாழ்ந்துவந்த மனைவி, குழநதைகள் மற்றும் பெற்றோரை பிரிய வைக்கிறது.
இதையடுத்து தான் நினைத்தபடியே இரண்டாவதாக ராதிகாவை திருமணம் செய்துக் கொள்கிறார் கோபி. அதையொட்டி அவர் சந்திக்கும் பிரச்சினைகள், பொறாமைகள், கோபங்கள், சிக்கல்களை இந்தத் தொடர் கதைக்களமாக கொண்டு அடுத்தடுத்த எபிசோட்களை இந்தத் தொடர் கொடுத்து வருகிறது. இதனிடையே ஒன்றுமே தெரியாத இடியட் என்று அவர் நினைக்கும் அவரது மனைவி பாக்கியா, விவாகரத்துமூலம் கிடைத்த சுதந்திரத்தை சிறப்பாக பயன்படுத்தி அடுத்தடுத்த கட்டங்களுக்கு நகர்கிறார்.கலில் பாக்கியா.. வீடு புகு
பாக்கியாவின் இந்த வளர்ச்சி கோபிக்கு எரிச்சலையும் இயலாமையையும் கொடுக்கிறது. விவாகரத்தை காரணமாக வைத்து, தன்னை தன்னுடைய குடும்பத்தினரிடமிருந்து பாக்கியா பிரித்ததையும் தொடர்ந்து தனக்கு மனதளவில் கொடுத்துவரும் குடைச்சலையும் அவரால் ஏற்க முடியாததே அவரது இந்த எரிச்சலுக்கு காரணமாக அமைகிறது. இதையடுத்து, தன்னுடைய மனைவியின் ஒவ்வொரு செயல்பாட்டிலும் குறை கண்டுபிடித்து அதை பெரிதாக்குகிறார்.
ஆனால் கோபியின் பெற்றோர் உள்ளிட்ட அனைவரும் பாக்கியாவிற்கு சப்போர்ட்டாக இருப்பதையும் அவரால் ஏற்க முடியவில்லை. இந்நிலையில், கோபியால் செல்ல முடியாத இனியாவின் கல்லூரி ப்ராஜெக்ட் ரோட் ட்ரிப்பை தானே கார் ஓட்டி சென்று முடிக்கிறார் பாக்கியா. இதையும் ஏற்க முடியாத கோபி, தொடர்ந்து வழியில் அவர் சந்திக்கும் பிரச்சினைகளை பெரிதாக்குகிறார். ஒரு கட்டத்தில் கோபயின் அம்மா ஈஸ்வரியே இதையொட்டி கோபியை திட்டும் சூழலையும் ஏற்படுத்துகிறார்.
இதனிடையே சென்னைக்கு திரும்பும் வழியில் காரை ஓட்டி வரும் பாக்கியா, ஒரு விபத்தை சந்திக்கிறார். சைக்கிளில் வரும் முதியவர் ஒருவர், காரின் முன்பு விழுந்து அடிபடுகிறார். இதையடுத்து அங்கு கூட்டம் கூடி, போலீசார் வருகின்றனர். பாக்கியாவிடம் டிரைவிங் லைசென்சை போலீஸ் அதிகாரி கேட்கிறார். ஆனால் முன்னதாகவே ஹோட்டலில் அது திருடு போக, என்ன செய்வது என்று தெரியாமல் பாக்கியா அண்ட் டீம் முழிக்கின்றனர்.

இந்நிலையில் பாக்கியாவிற்கு கால் செய்யும் பழனிச்சாமி, வீட்டில் இருக்கும் ஒரிஜினலை யாரையாவது கொண்டு அனுப்பி வைக்கும்படி அறிவுரை வழங்குகிறார். இந்த விஷயத்தை கேள்விப்படும் கோபி, பாக்கியாவை பழிவாங்கும் சரியான சந்தர்ப்பம் இது என்பதை அறிந்து, யாரும் இல்லாமல் இருக்கும் பாக்கியா வீட்டிற்கு சென்று, அங்கிருக்கும் அவரது டிரைவிங் லைசென்சை திருடிவிடுகிறார். இதனால் வீட்டில் அமிர்தா மற்றும் தாத்தா இருவரும் தேடியும் லைசென்ஸ் கிடைக்காததை கேள்விப்பட்டு பாக்கியா தவிக்கிறார்.
பாக்கியா மற்றும் அனைவரையும் காவல்நிலையத்திற்கு வரும்படி போலீசார் கூறும் நிலையில், தன்னுடைய நண்பர் செந்திலிடம் தான் பாக்கியாவின் லைசென்சை திருடியதை பெருமையுடன் பகிர்கிறார் கோபி. இந்நிலையில் அவர்கள் இருவரும் இருக்கும் ஹோட்டலுக்கு பழனிச்சாமி வருவதாக இன்றைய எபிசோட் காணப்படுகிறது. இந்த சிக்கலில் இருந்து பாக்கியாவை பழனிச்சாமி எப்படி மீட்கிறார் என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.


Click it and Unblock the Notifications











