Baakiyalakshmi serial: ஜெனிக்கு பெண் குழந்தை.. கொண்டாட்டத்தில் பாக்கியலட்சுமி பேமிலி!
சென்னை: விஜய் டிவியின் முன்னணி தொடரான பாக்கியலட்சுமியின் இன்றைய எபிசோட் ரசிகர்களை நெகிழ்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
இன்றைய தினம் செழியனின் மனைவி ஜெனிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. இதையொட்டிய குடும்பத்தினரின் பரிதவிப்பு, கொண்டாட்டம் போன்றவை இன்றைய எபிசோடில் ஒளிபரப்பாகியுள்ளன.
பேத்தி பிறந்த சந்தோஷத்தில், மருத்துவமனையிலேயே கோபி இருக்க, ராதிகாவின் அம்மா, இதுகுறித்து தன்னுடைய மகளுக்கு எச்சரிக்கை விடுக்கிறார்.

விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியல் புதிய எபிசோட்: விஜய் டிவியின் முன்னணி தொடரான பாக்கியலட்சுமி அடுத்தடுத்த சிறப்பான எபிசோட்களை கொடுத்து வருகிறது. தன்னுடைய கணவன் விரும்பிய விவாகரத்தை மனமுவந்து கொடுக்கிறார் பாக்கியா. இதையடுத்து அவர் தன்னுடைய வாழ்க்கையில் சந்திக்கும் பிரச்சினைகள், சந்தோஷங்கள், சவால்கள் உள்ளிட்டவற்றை தொடர்ந்து கதைக்களமாக கொண்டுள்ளது பாக்கியலட்சுமி தொடர். குடும்பம், தன்னுடைய தொழில் என அடுத்தடுத்த களங்களில் தன்னை சிறப்பாக வெளிப்படுத்தி வருகிறார் பாக்கியா.
அவரது முன்னேற்றத்தை சகித்துக் கொள்ள முடியாத கோபி மற்றும் ராதிகா இருவரும் அவரது வளர்ச்சிக்கு தடையாக இருக்க, பாக்கியாவின் கேன்டீன் கான்டிராக்டை அவரிடமிருந்து பறிக்கிறார் ராதிகா. இதனால் மன உளைச்சலுக்கு உள்ளாகும் பாக்கியா, தன்னை சுருக்கி கொள்கிறார். இதற்கேற்ப அவரது மாமியார் ஈஸ்வரியும் அவரை திட்டித் தீர்க்கிறார். இதனால் கல்லூரிக்கு செல்வதை நிறுத்திக் கொள்ளவுள்ளதாக பாக்கியா குடும்பத்தினரிடம் கூறுகிறார்.

இதை கேள்வியுறும் எழில், பாக்கியாவின் நண்பர் பழனிச்சாமியை கொண்டு அவரிடம் பேச வைக்கிறார். இதையடுத்து பாக்கியாவிடம் பேசும் பழனிச்சாமி, பாக்கியா சூரியனை போன்றவர் என்றும், தன்னை சூழ்ந்துள்ள மேகக்கூட்டங்கள் குறித்து அவர் கவலை கொள்ளக்கூடாது என்றும் சமாதானம் கூறுகிறார். மேலும் அவருடைய பிரச்சினைகள் அனைத்தும் அந்த மேகங்கள் போல கலைந்து போகும் என்றும் தெரிவிக்கிறார்.
அவரது இந்த சமாதானம் பாக்கியாவிற்கு தெம்பை அளித்தாலும் கேன்டீன் கான்டிராக்ட் தன்னை விட்டு போனதை அவரால் ஏற்றுக் கொள்ள முடியாத நிலை காணப்படுகிறது. இதனிடையே செழியனின் மனைவி ஜெனிக்கு பிரசவ வலி ஏற்பட்டு அவர் மருத்துவமனையில் சேர்க்கப்படுகிறார். அவர் வலியால் கஷ்டப்படுபவதை பார்த்து, செழியனும் கண்ணீர்விட்டு கதறுகிறார். அவர் ஜெனிக்கு ஆறுதல் கூறுவார் என்று குடும்பத்தினர் எதிர்பார்க்க, அவருக்கு மற்றவர்கள் ஆறுதல் கூறும் நிலை ஏற்படுகிறது.

இதனிடையே, ஜெனிக்கு பெண் குழந்தை பிறக்கிறது. இதனால் குடும்பத்தினர் மிகுந்த மகிழ்ச்சியடைகின்றனர். மருத்துவமனைக்கு வரும் கோபி, தனக்கு பேத்தி பிறந்ததை கேள்வியுற்று குதூகலத்துடன் செழியனை தூக்கி சுற்றுகிறார். மருத்துவமனையில் அனைவருக்கும் இனிப்பு வாங்கி கொடுக்கிறார்.இதனிடையே, அவருக்கு கால் செய்யும் ராதிகா அவர் எப்போது வீடு திரும்புவார் என்று கேட்கிறார். ராதிகாவின் அம்மாவோ, உடனடியாக கோபியை வீட்டிற்கு அழைத்து வருமாறு தன்னுடைய மகளுக்கு எச்சரிக்கை விடுக்கிறார்.


Click it and Unblock the Notifications











