Baakiyalakshmi serial: கைக்கொடுக்க காத்திருக்கும் பழனிச்சாமி.. மறுக்கும் பாக்கியா.. ஏன் தெரியுமா?
சென்னை: விஜய் டிவியின் முன்னணி தொடரான பாக்கியலட்சுமி இந்த வாரமும் தொடர்ந்து இரண்டாவது இடத்திலேயே நிலை கொண்டுள்ளது.
இந்தத் தொடரின் அடுத்தடுத்த எபிசோட்கள் ரசிகர்களை கவர்ந்துவரும் நிலையில், 8.21 புள்ளிகளை பெற்று தொடர்ந்து சேனலின் இரண்டாவது இத்தில் உள்ளது.
இன்றைய எபிசோடில் ரசிகர்களை கவரும்வகையில் பல விஷயங்கள் சீரியலில் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக உயிருடன் திரும்ப வந்துள்ள அமிர்தாவின் கணவன் கணேஷ் குறித்த பல காட்சிகளை காண முடிந்தது.

விஜய் டிவியின் இன்றைய எபிசோடால் ரசிகர்கள் ஆர்வம்: விஜய் டிவியின் முன்னணி தொடரான பாக்கியலட்சுமி சீரியல் தொடர்ந்து பல வாரங்களாக இரண்டாவது இடத்தை பிடித்து வருகிறது. இந்த வாரமும் சிறகடிக்க ஆசை சீரியல் முதலிடத்தை பிடித்த நிலையில் பாக்கியலட்சுமி மற்றும் பாண்டியன் ஸ்டோர்ஸ் என இரு சீரியல்களும் 8.21 புள்ளிகளுடன் Rural மற்றும் Urban கேட்டகரியில் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளன. தொடர்ந்து அடுத்தடுத்த சிறப்பான எபிசோட்களை கொடுத்துவருகிறது பாக்கியலட்சுமி தொடர்.
இன்றைய எபிசோடிலும் ரசிகர்களை கவரும் பல அம்சங்கள் பாக்கியலட்சுமி சீரியலில் காணப்படுகின்றன. இன்றைய தினம் பழனிச்சாமி மற்றும் அவரது அம்மாவை அவர்களது வீட்டில் சென்று சந்திக்கிறார் பாக்கியலட்சுமி. அவர்களிடம் பேசிக் கொண்டிருக்கையில், பாக்கியாவின் அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து விசாரிக்கும் பழனிச்சாமி, எந்த உதவியாக இருந்தாலும் நண்பனாக தான் செய்ய காத்திருப்பதாக கூறுகிறார்.
ஆனால் அவரது உதவியை மறுக்கிறார் பாக்கியா. அவரை நல்ல நண்பராகவே தான் நினைப்பதாகவும் ஆனால் தான் விரும்பி செய்த கேன்டீன் கான்டிராக்டில் எந்த பிரச்சினை என்றாலும் தானே அதை எதிர்கொண்டு சமாளிக்கவே தான் விரும்புவதாக பாக்கியா கூறுகிறார். இந்த அவருடைய உதவியை மதிக்கும் பழனிச்சாமி, எதிர்காலத்தில் எந்த உதவி வேண்டுமென்றாலும் தயங்காமல் தன்னிடம் கேட்க அறிவுறுத்துகிறார்.
இறந்ததாக நினைத்துக் கொண்டிருந்த அமிர்தாவின் முன்னாள் கணவன் கணேஷ், தன்னுடைய மனைவி மற்றும் மகளின் இருப்பிடத்தை கண்டறிந்துள்ள நிலையில், அமிர்தாவும் எழிலும் பைக்கில் ஒன்றாக செல்வதை பார்த்து ஆத்திரமடைகிறார். தொடர்ந்து பாக்கியாவின் கண்களில் சிக்கும் கணேஷ், ஓடி ஒளிவதும் நடக்கிறது. இந்நிலையில் பார்க்கில் ராமமூர்த்தியுடன் விளையாட வரும் தன்னுடைய மகள் நிலாவை பார்த்து, விளையாடி மகிழ்கிறார்.

இதனிடையே தன்னுடைய நகைகளை அடகு வைத்து பணம் புரட்டும் பாக்கியா, தன்னுடைய ஊழியர்களுக்கு பணம் கொடுக்க ஏற்பாடு செய்கிறார். இதனால் அமிர்தா மற்றும் செல்வி இருவரும் வேதனை அடைகின்றனர். அவர்களை ஆசுவாசப்படுத்தும் பாக்கியா, இந்த நிலைமை மாறும் என்றும் ஆறுதல் தெரிவிக்கிறார். இதனிடையே கேன்டீனிலிருந்து வரவேண்டிய பாக்கிப் பணத்திற்காக தான் மெயில் போடுவதாகவும் அமிர்தா கூறுவதாக இன்றைய எபிசோட் காணப்படுகிறது.
இதனிடையே சென்னையில் உள்ள தங்களது மகன் கணேஷை தேடி அவரது பெற்றோர் சென்னைக்கே வந்த நிலையில், அவர்கள் அவரை தொடர்பு கொண்டு பேசுகின்றனர். அவரை நேரில் சந்தித்து பேச வேண்டும என்றும் கூறுகின்றனர். முதலில் ஆத்திரப்படும் கணேஷ், தான் இருக்கும் இடத்தை கூற, அவர்கள் உடனடியாக அவரை சந்திக்க செல்வதாக இன்றைய எபிசோட் முடிகிறது. அவர்கள் அமிர்தாவின் தற்போதைய நிலையை அவருக்கு புரிய வைக்க முயற்சித்து வரும் நிலையில், அவர் அதுகுறித்து கவலை கொள்ளாமல் தன்னுடைய மனைவி மற்றும் மகளுடன் தான் வாழ்வேன் என்று கூறிவருவது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











