Baakiyalakshmi serial: ஆயுசுக்கும் என்கிட்ட பேசாதே.. செழியனை வறுத்தெடுத்த பாக்கியா!
சென்னை: விஜய் டிவியின் முன்னணி தொடரான பாக்கியலட்சுமி தொடரின் அடுத்தடுத்த எபிசோட்கள் ரசிகர்களை கவர்ந்து வருகிறது.
மாலினி - செழியன் விவகாரம் குடும்பத்தினருக்கு தெரியவந்த நிலையில் குழந்தையுடன் ஜெனி வீட்டை விட்டு வெளியேறுகிறார். இதனால் பாக்கியாவை, ஈஸ்வரி மற்றும் கோபி திட்டித் தீர்க்கின்றனர். முன்னதாகவே அவர் இதுகுறித்து குடும்பத்தினருக்கு தெரியப்படுத்தியிருக்க வேண்டும் என்று கூறுகின்றனர்.

பாக்கியலட்சுமி தொடர்: விஜய் டிவியின் முன்னணி தொடர்களில் ஒன்றான பாக்கியலட்சுமி அடுத்தடுத்த பரபரப்பான எபிசோட்களை ரசிகர்களுக்கு கொடுத்து வருகிறது. மாலினி -செழியன் விவகாரம் தெரியவந்த நிலையில், அதற்கு தீர்வு கொடுக்க வேண்டும் என்று பாக்கியா முன்னதாக அதிகமான முயற்சி எடுத்துவந்தார். ஆனால் இந்த விவகாரத்தை செழியன் குடும்பத்தினரிடம் போட்டுடைக்கிறார் மாலினி. மேலும் பாக்கியாவிற்கு இந்த விஷயம் முன்னதாகவே தெரியும் என்பதையும் வெளிப்படுத்துகிறார்.
வீட்டை விட்டு வெளியேறிய ஜெனி: இதனால் குடும்பத்தில் குழப்பம் ஏற்பட்டு, பாக்கியாவும் உண்மையை மறைத்துவிட்டதாக மனம் வெறுக்கும் ஜெனி, குழந்தையுடன் தன்னுடைய அம்மா வீட்டிற்கு சென்றுவிடுகிறார். இதனால் குடும்பத்தில் நிம்மதி இல்லாத சூழல் ஏற்படுகிறது. ஜெனியையும் குழந்தையையும் பிரியும் செழியன் பரிதவிக்கிறார். அவருக்கு கோபி ஆறுதல் கூறுகிறார். ஜெனிக்கு சிறிது கால அவகாசம் கொடுக்கும்படியும் செழியனிடம் தெரிவிக்கிறார்.
சமாதானப்படுத்த செழியன் முயற்சி: ஆனால் ஜெனி மற்றும் குழந்தையை பார்க்கும்பொருட்டு அவருடைய அம்மா வீட்டிற்கு செல்கிறார் செழியன். ஆனால் அவரை வீட்டிற்குள் அவரது அம்மா அனுமதிக்காத நிலையில், தன்னை மன்னிக்கும்படி கதறுகிறார். ஆனால் அவரை மன்னிக்கும் மனநிலை அங்கு யாருக்கும் இல்லாதநிலையில், கோபி வந்து அவரை அங்கிருந்து அழைத்து செல்கிறார். தற்போது அதிகமான கோபத்தில் ஜெனி இருப்பதையும் சுட்டிக் காட்டுகிறார்.
பாக்கியாவை குற்றம்சாட்டும் ஈஸ்வரி: இதனிடையே, இந்த நிலை ஏற்படுவதற்கு பாக்கியாதான் காரணம் என்று ஈஸ்வரி அவரை தொடர்ந்து குற்றம் சாட்டுகிறார். முன்னதாகவே இந்த விஷயம் தெரிந்த நிலையில், அவர் இதை முன்னதாகவே குடும்பத்தினரிடையே கூறியிருக்க வேண்டும் என்று கூறுகிறார். தானே அனைத்தையும் சமாளிக்க வேண்டும் என்ற நினைப்பில் பாக்கியா இப்படி செயல்பட்டதாகவும் குற்றம் சாட்டுகிறார். இதனால் மனம் உடையும் பாக்கியா, ஜெனிக்கும் கால் செய்ய முயற்சிக்கிறார்.
செழியனிடம் பாக்கியா ஆத்திரம்: ஆனால் அவர் காலை எடுக்காத நிலையில், ஜெனியின் அம்மா போனை எடுத்து, பாக்கியா தங்களை ஏமாற்றி விட்டதாக கூறுகிறார். இதனால் அவரது மன உளைச்சல் மேலும் அதிகரிக்கிறது. இதனிடையே தன்னால்தான் தன்னுடைய அம்மா அனைவரிடமும் திட்டு வாங்குகிறார் என்பதை புரிந்து அவரிடம் மன்னிப்பு கேட்க வருகிறார் செழியன். அவரது அப்பா செய்த அதே தவறை செழியனும் செய்துள்ளதை சுட்டிக் காட்டும் பாக்கியா, அவரை திட்டித் தீர்க்கிறார். இனி தன்னிடம் ஆயுசுக்கும் பேச வேண்டாம் என்றும் கூறுகிறார்.
ஜெனி மீது அக்கறை: இதையடுத்து ஜெனியை மீண்டும் வீட்டிற்கு அழைத்து வர வேண்டும் என்றும் அவரது வீட்டிற்கு சென்று அழைக்கலாம் என்றும் ஈஸ்வரி, பாக்கியாவை கூப்பிடுகிறார். ஆனால் தன்னால் அங்கு வர முடியாது என்று பாக்கியா கூறுகிறார். இதை தொடர்ந்து செழியன் மீது பாக்கியாவிற்கு அக்கறை இல்லை என்று இன்றைய எபிசோடில் ஈஸ்வரி குற்றம் சாட்டுகிறார். தனக்கு செழியன் மீது மட்டுமில்லை ஜெனி மீதும் அக்கறை இருப்பதாகவும் பாக்கியா கூறுகிறார்.


Click it and Unblock the Notifications











