Baakiyalakshmi: நடுரோட்டில் மக்கர் செய்த கார்.. சாலையில் பரிதவித்து நின்ற பாக்கியா & டீம்!

சென்னை: விஜய் டிவியின் நம்பர் ஒன் தொடராக பல மாதங்களாக நீடித்து வந்த தொடர் பாக்கியலட்சுமி.

தற்போது டிஆர்பியில் சறுக்கியுள்ள இந்தத் தொடர் மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

இருந்தபோதிலும் தன்னுடைய முயற்சியில் சிறிதும் தளராத தொடரின் இயக்குநர் அடுத்தடுத்த சிறப்பான காட்சிகளை ரசிகர்களுக்கு கொடுத்து வருகிறார்.

Vijay TVs Baakiyalakshmi serial new episode makes everyone thrilling

நடுரோட்டில் மக்கர் செய்த காரால் பரிதவிக்கும் பாக்கியா & டீம்: விஜய் டிவியின் நம்பர் ஒன் தொடராக பல மாதங்களாக நீடித்து வந்தது பாக்கியலட்சுமி தொடர். கடந்த சில வாரங்களாக இந்தத் தொடர் அடுத்தடுத்து ரசிகர்களை கவரத் தவறியுள்ளது. இதனால் டிஆர்பியிலும் பின்தங்கியுள்ள தொடர், மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. முதல் இரண்டு இடங்களை சிறகடிக்க ஆசை மற்றும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர்கள் பிடித்துள்ளன. ஆனாலும் விட்ட முதலிடத்தை மீண்டும் பிடிக்கும் வகையில் தொடரில் அடுத்தடுத்த சுவாரஸ்யங்களை புகுத்தி வருகிறார் இயக்குநர்.

ராதிகாவின் மகள் மயூ, பெரிய மனுஷியான நிலையில், இனியாவின் கல்லூரி பிராஜெக்ட்டிற்கான ரோட் ட்ரிப்பில் இணைய முடியாமல் அதை கேன்சல் செய்கிறார் கோபி. இதனால் தன்னுடைய ப்ராஜெக்டை செய்ய முடியாமல் இனியா கதறி அழுகிறார். இதை பார்க்க முடியாத பாக்கியா, டிரைவர் துணையுடன் தன்னுடைய மாமியார், செல்வியையும் இணைத்துக் கொண்டு, இனியாவின் ரோட் ட்ரிப்பை திட்டமிடுகிறார். இதற்கு எழிலும் சிறப்பான ஏற்பாடுகளை செய்கிறார்.

அவர்களது பயணம் சிறப்பாக துவங்கிய நிலையில், சிறிது தூரத்திலேயே, டிரைவரின் அப்பாவிற்கு ஆக்சிடெண்ட் என்பது தெரியவர, அவர் பாதியிலேயே இவர்களை விட்டுவிட்டு அப்பாவை பார்க்க சென்றுவிடுகிறார். இதனால் அடுத்தது என்ன செய்வது என்று அவர்கள் அனைவரும் குழம்பிய நிலையில், வீட்டிற்கு சென்றுவிடலாம் என மாமியார் ஈஸ்வரி கூறுகிறார். ஆனால் தன்னுடைய ப்ராஜெக்ட் வேலை தடைபடுவது குறித்து இனியா புலம்பித் தீர்க்கிறார்.

இதனால், பழனிச்சாமி கொடுத்த தைரியத்தில், தானே இந்த பயணத்தில் காரை ஓட்டுவது என தீர்மானிக்கிறார் பாக்கியா. இனியா, செல்வி, ஈஸ்வரி என மூவருமே இதனால் அதிர்ச்சியடைகிறார்கள். ஆனால் பாக்கியா சிறப்பாக வண்டியை ஓட்டுவதைப் பார்த்து மூவரும் சமாதானமடைகிறார்கள். ஆனாலும் ஈஸ்வரி அரை மனதுடன் பயணத்தை தொடர்கிறார். இந்நிலையில் வழியில் ஒரு ஹோட்டலில் அனைவரும் சாப்பிடுகிறார்கள். அந்த சூழல் ஈஸ்வரிக்கு அச்சத்தை ஏற்படுத்துகிறது.

இதனிடையே, ஹோட்டலுக்கு செல்ல சிறிது தூரம் உள்ள நிலையில், வழியில் கார் மக்கர் செய்து நின்று விடுகிறது. இருட்டான, சாலை விளக்குகள்கூட இல்லாத ஒரு இடத்தில் கார் நின்றுவிட, அடுத்து என்ன செய்வது என அனைவரும் பரிதவிக்கிறார். பாக்கியாவை திட்டித் தீர்க்கும் ஈஸ்வரி, கோபிக்கு கால் செய்ய முனைகிறார். ஆனால் அவர், திரும்பி வரும்படி சொல்வார் என கூறும் பாக்கியா, அதை தடுக்கிறார். இதனிடையே, அவர்கள் அனைவரும் காரைவிட்டு வெளியில் வருகிறார்கள்.

இருட்டான சூழலில், வயதுப் பெண்ணான இனியாவை வைத்துக் கொண்டு நிற்பது குறித்து ஈஸ்வரி கலவரமான சூழலில் இருக்க, அந்தப் பக்கமாக இருசக்கர வாகனத்தில் ஒருவர் கடந்து செல்கிறார். அவரது உதவியை கேட்கலாமா என்று அனைவரும் பார்க்கும் சூழலில், அவரது கெட்டப் அவர்களை கலவரப்படுத்துகிறது. இதனிடையே, முன்னேறி செல்லும் அவர், இவர்களை பார்த்துவிட்டு திரும்ப வருவதாக இன்றைய எபிசோட் காணப்படுகிறது. அடுத்தது என்ன நடக்கும் என அவர்கள் மட்டுமில்லாமல் ரசிகர்களும் பரிதவித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X