Baakiyalakshmi: பாக்கியா செய்த சாலை விபத்து.. போலீசிடம் சிக்கிக் கொண்டு தவிப்பு!

சென்னை: விஜய் டிவியின் முன்னணி தொடர்களில் ஒன்றாக உள்ள பாக்கியலட்சுமி தொடர் இந்த வார டிஆர்பியிலும் தொடர்ந்து இரண்டாவது இடத்திலேயே உள்ளது.

சில புள்ளிகளில் முதல் இடத்தை சிறகடிக்க ஆசை தொடரிடம் மீண்டும் விட்டுக் கொடுத்துள்ளது.

தற்போது இனியாவின் ப்ராஜெக்ட் வேலையை முடித்துக் கொண்டு சென்னைக்கு வரும்வழியில் நடக்கும் சம்பவங்களை மையமாக கொண்டு இந்தத் தொடர் ஒளிபரப்பாகி வருகிறது.

Vijay TVs Baakiyalakshmi serial new episode makes everyone thrilling 15-09-23

சாலை விபத்தை சந்தித்த பாக்கியலட்சுமி: விஜய் டிவியின் முன்னணி தொடர்களில் ஒன்றாக பல மாதங்களாக இருந்துவரும் பாக்கியலட்சுமி தொடர், ரசிகர்களை வெகுவாக கவர்ந்து அடுத்தடுத்த சிறப்பான எபிசோட்களை கொடுத்து வருகிறது. இந்தத் தொடரில் சுவாரஸ்யங்களை கூட்டி ரசிகர்களை தொடர்ந்து உற்சாகப்படுத்தி வருகிறார் இயக்குநர். வில்லத்தனம் செய்யும் பெண்கள் இந்த சீரியலில் இல்லாததே மிகப்பெரிய ஆறுதல். ஒன்றுமே தெரியாத எதற்கும் லாயக்கில்லாதவர் என்று நினைத்து தன்னுடைய மனைவியை விவாகரத்து செய்கிறார் கோபி.

தொடர்ந்து பெரிய நிறுவனத்தில் பெரிய பதவியில் இருக்கும் தன்னுடைய முன்னாள் காதலியை இரண்டாவது திருமணம் செய்யும் கோபி, தன்னுடைய முதல் குடும்பத்தை விட்டுக் கொடுக்க முடியாமல் திணறுகிறார். இதனால் இரண்டாவது மனைவி ராதிகாவிடம் அவர் வாங்கிக் கட்டிக் கொள்வது சிறப்பாக காட்சிப்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக, இக்கட்டான சூழ்நிலைகளில் தன்னுடைய முகபாவனைகள் மூலம் ரசிகர்களை கவர்ந்து சிறப்பாக ஸ்கோர் செய்கிறார் கோபி.

தற்போது இனியாவின் பராஜெக்ட்டிற்காக ரோட் ட்ரிப்பிற்கு கேரளாவுக்கு பயணம் மேற்கொண்டனர் பாக்கியா, ஈஸ்வரி, செல்வி மற்றும் இனியா. இந்த சாலை பயணத்தின்போது அவர்கள் சந்திக்கும் இடர்பாடுகள், அதை பொறுமையாக சமாளிக்கும் பாக்கியா, அதை மெச்சும் மாமியார் ஈஸ்வரி, இந்த ட்ரிப்பை சிறப்பாக என்ஜாய் செய்யும் இனியா மற்றும் செல்வி என அடுத்தடுத்த கேரக்டர்களின் வித்தியாசத்தை காட்சிகளின் வழி சிறப்பாக வெளிப்படுத்தி வருகிறார் இயக்குநர்.

காட்டில் தன்னுடைய மாமியாரை தொலைத்துவிட்டு பரிதவிக்கும்போது நிதானத்தை கைவிடாமல், அவரை உடனடியாக தேடி கண்டுபிடித்து நல்ல பெயர் வாங்குகிறார் பாக்கியா. இதனிடையே தங்களின் பயணத்தை நிறைவு செய்துவிட்டு அவர்கள் காரிலேயே வீடு திரும்புகின்றனர். ஆனால் முன்னதாக கோபி, பாக்கியாவிடம் தன்னுடைய அம்மா மற்றும் மகளை பாதுகாப்பாக வீட்டிற்கு அழைத்துவர எச்சரிக்கிறார்.

Vijay TVs Baakiyalakshmi serial new episode makes everyone thrilling 15-09-23

அவர் எச்சரித்ததற்கு ஏற்றாற்போல, திரும்பி வரும்போதும் பிரச்சினையில் சிக்கிக் கொள்கிறார் பாக்கியா. அவர் பொறுமையாகவே காரை ஓட்டி வந்தபோதிலும், வயதான ஒருவர் சைக்கிளில் வந்து, சாலையின் குறுக்கில் விழுகிறார். அவருக்கு லேசான அடிதான் என்றபோதிலும், அவருக்காக அந்தப்பகுதி மக்கள் அதிகமாக சப்போர்ட் செய்து, பாக்கியாவை திட்டித் தீர்க்கின்றனர். இதையடுத்து அங்குவரும் போலீஸ் அதிகாரி, பாக்கியாவிடம் டிரைவிங் லைசென்சை கேட்கிறார்.

ஆனால் முன்னதாக ஹோட்டலில் தன்னுடைய பர்சை பாக்கியா தொலைத்த நிலையில், அதில் லைசென்சும் காணாமல் போகிறது. இதனால் காவல்நிலையத்திற்கு அவர்களை அழைத்து செல்ல அதிகாரி முற்படுகிறார். அந்த நேரத்தில் பாக்கியாவிற்கு கால் செய்யும் பழனிச்சாமி, வீட்டிலுள்ளவர்களிடம் பேசி, வீட்டில் இருக்கும் லைசென்சை கேட்டுப் பெற அறிவுறுத்துகிறார். மிகுந்த பதற்றத்தில் என்ன செய்வது என்று தெரியாமல் இருக்கும் பாக்கியா இதனால் நிம்மதி அடைகிறார். தன்னுடைய மாமனாருக்கு அவர் கால் செய்வதாகவும், அங்கே இருக்கும் கோபி, அதை கேட்பதாகவும் இன்றைய எபிசோட் அமைகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X