Baakiyalakshmi serial: கைநழுவிய கான்டிராக்ட்.. கண்ணீரில் பாக்கியா.. அடுத்தது என்ன நடக்கும்?
சென்னை: விஜய் டிவியின் முன்னணி சீரியல்களில் ஒன்றான பாக்கியலட்சுமி தொடரின் இன்றைய எபிசோட் ரசிகர்களை கவரும்வகையில் அமைந்துள்ளது.
இன்றைய எபிசோடில் பொருட்காட்சியில் கேன்டீன் அமைப்பதற்கான முயற்சியில் முன்பணமாக 1 லட்சம் ரூபாயை செலுத்துகிறார் பாக்கியா. கேன்டீன் தனக்கு கண்டிப்பாக கிடைக்கும் என்ற நம்பிக்கையில் உள்ளார்.
ஆனால் அதிகமான பேர் விண்ணப்பித்ததால் குலுக்கல் முறையில் ஒரு நபர் தேர்ந்தெடுக்கப்பட்டு அவருக்கு கான்டிராக்ட் கிடைக்கிறது.

பாக்கியலட்சுமி தொடர்: விஜய் டிவியின் முன்னணி தொடரான பாக்கியலட்சுமி சீரியலில் தொடர்ந்து அடுத்தடுத்த பரபரப்பான எபிசோட்களை தயாரிப்புத் தரப்பு வழங்கி வருகிறது. தன்னுடைய மகன்கள் எழில் மற்றும் செழியன் வாழ்க்கையில் ஏற்பட்டுள்ள நெருக்கடி காரணமாக அதில் உழன்றுக் கொண்டிருந்த பாக்கியாவிற்கு கேன்டீன் கான்டிராக்ட் பறிபோகிறது. இதற்கு ராதிகா காரணமாக அமைந்த நிலையில், பாக்கியாவின் மசாலா பிசினசும் நெருக்கடியை சந்திக்கிறது.
பொருட்காட்சி கேன்டீன்: இதனால் அடுத்ததாக என்ன செய்வது என்று தெரியாமல் முழி பிதுங்கி நிற்கிறார் பாக்கியா. அந்த நேரத்தில் பழனிச்சாமி கொடுத்த ஐடியாவால், பொருட்காட்சியில் கேன்டீன் அமைப்பதற்கான முயற்சியில் ஈடுபடுகிறார் 10,000 ரூபாய் கொடுத்து இதற்கான அப்ளிகேஷனை வாங்கிய நிலையில், முன் பணமாக ஒரு லட்சம் ரூபாய் செலுத்த வேண்டும் என்று கூறப்படுகிறது. இதையடுத்து தன்னுடைய மசாலா பிசினசின் உபகரணங்களை விற்பது உள்ளிட்டவற்றை செய்து ஒரு லட்சம் திரட்டி பணத்தை கட்டுகிறார் பாக்கியா.
பாக்கியா நம்பிக்கை: இந்த கான்டிராக்ட் கிடைக்கும் என்று மிகவும் உறுதியும் தன்னம்பிக்கையும் அதிகமாக அந்த அலுவலகத்திற்கு செல்கிறார் பாக்கியா. அங்கு கேன்டீன் கான்டிராக்டிற்காக 46 பேர் விண்ணப்பித்திருந்த நிலையில், குலுக்கல் முறையில் கான்டிராக்ட் ஆறுமுகம் என்பவருக்கு கிடைக்கிறது. இதுகுறித்து எதுவும் தெரியாத நிலையில், இது நடைமுறை வழக்கம்தான் என்பதை தெரிந்துக் கொள்ளும் பாக்கியா அதிர்ச்சியடைகிறார். அவருடன் எழில் மற்றும் செல்வியும் சென்ற நிலையில் அவர்களுக்கும் இந்த நடைமுறை அதிர்ச்சியை அளிக்கிறது.

பரிதவிப்பில் பாக்கியா: மேலும் இந்த முயற்சியை ஆரம்பத்தில் இருந்தே தடுத்த கோபி மற்றும் ஈஸ்வரி என்ன சொல்வார்கள் என்று புலம்பித் தீர்க்கிறார் பாக்கியா. மேலும் எதையாவது செய்து முன்னேறிவிடலாம் என்று தான் நினைத்தால் எல்லாவற்றிற்கும் முட்டுக்கட்டை வருகிதே என்று வருத்தத்தையும் எழில் மற்றும் செல்வியிடம் கொட்டுகிறார். அவரை அவர்கள் இருவரும் சமாதானப்படுத்துகின்றனர். இதனிடையே தன்னுடைய கல்லூரி நிகழ்விற்காக புதிய உடை வாங்க ஷாப்பிங் செல்ல தீர்மானிக்கிறார் இனியா.
இனியாவிற்கு கைகொடுத்த ராதிகா: ஆனால் பாக்கியா இந்த கேன்டீன் நடைமுறையில் சிக்கிக் கொள்ள வீட்டிற்கு வர தாமதமாகிறது. இதனால் தன்னுடன் ஷாப்பிங் வருவதற்குகூட இந்த வீட்டில் யாரும் இல்லை என்று அங்கலாய்க்கிறார் இனியா. தான் பழைய ட்ரஸ்ஸையே போட்டுக் கொள்வதாக கூறுகிறார். அப்போது அங்கே வரும் ராதிகா, தான் இனியாவுடன் ஷாப்பிங் வருவதாக கூறுகிறார். இதனால் அதிர்ச்சியடையும் இனியா வேண்டாம் என்று கூற, ஈஸ்வரி ராதிகாவுடன் செல்லுமாறு கூறுகிறார். இதனால் ராதிகாவும் அதிர்ச்சியடைவதாக இன்றைய எபிசோட் காணப்படுகிறது.


Click it and Unblock the Notifications











