Baakiyalakshmi: பாக்கியாவை தனி ஆளாக நின்னு கஷ்டப்பட வைப்பேன்.. கோபி வன்மம்!

சென்னை: விஜய் டிவியின் முன்னணி தொடரான பாக்கியலட்சுமி தொடர் கடந்த சில தினங்களாக தொய்வடைந்திருந்த நிலையில் தற்போது மீண்டும் சூடு பிடிக்கத் துவங்கியுள்ளது.

இந்தத் தொடரில் கோபியாக நடித்துவரும் சதீஷ் தனது சிறப்பான நடிப்பால் ஆன்டி ஹீரோவாக அனைவரையும் கவர்ந்து வருகிறார். பாக்கியா, ராதிகா கேரக்டர்களும் அதிரடியாக காணப்படுகின்றன.

Vijay TVs Baakiyalakshmi serial new episode makes fans angry on Gopi

அந்த வகையில் கடந்த சில தினங்களாக பாக்கியா, 40க்கும் மேற்பட்ட வயதில் தற்போது தன்னுடைய மகளின் கல்லூரியிலேயே படிப்பதற்காக சேர்ந்துள்ளார்.

பாக்கியா மீது ஆத்திரப்படும் கோபி: விஜய் டிவியின் முன்னணி தொடராக பல மாதங்கள் மாஸ் காட்டி வந்தது பாக்கியலட்சுமி. இந்தத் தொடர் பல மாதங்களாக முதலிடத்தில் மாஸ் காட்டி வந்தது. தொடரின் முன்னணி கேரக்டர்களும் தங்களது சிறப்பான நடிப்பால் தங்களது கேரக்டர்களுக்கு உயிரூட்டி வருகின்றனர். குறிப்பாக சீரியலில் கோபி கேரக்டர் ஆன்டி ஹீரோவாக இருந்தாலும் அனைவரும் விரும்பும் வகையில் தன்னுடைய கேரக்டரை வெளிப்படுத்தி வருகிறார்.

இந்நிலையில் இந்தத் தொடரில் கடந்த சில வாரங்களாக அடுத்தடுத்த சிறப்பான பல எபிசோட்கள் ஒளிப்பரப்பாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. வீட்டை கோபியிடம் இருந்து மீட்கும் வகையில் பாக்கியாவின் அதிரடி நடவடிக்கைகள், அதற்கு துணை நின்ற பழனிச்சாமி மற்றும் குடும்பத்தினர், பாக்கியாவை வீழ்த்த முயற்சி செய்த கோபி மற்றும் ராதிகா, கைக்கொடுத்த மகன்கள் என பல நிகழ்வுகளை கடந்த சில மாதத்தில் இந்த தொடர் ஒளிபரப்பியது.

இந்நிலையில் இந்தத் தொடரில் தன்னுடைய மகள் இனியாவை கல்லூரியில் சேர்க்க சென்ற பாக்கியாவிற்கு தான், தவறவிட்ட கல்லூரி வாழ்க்கை மனதில் சஞ்சலத்தை ஏற்படுத்த, பழனிச்சாமி மற்றும் எழிலின் உதவியுடன் மாலைநேர கல்லூரியில் சேர்கிறார். கேன்டீன், சமையல் கான்டிராக்ட், மசாலா பிசினஸ், ஆங்கில வகுப்பு இதற்கிடையில் துணிந்து கல்லூரியிலும் சேர்கிறார் பாக்கியா. இப்படி பிசியாக இருப்பதுதான் தனக்கு மகிழ்ச்சியை கொடுப்பதாகவும் அவர் கூறுகிறார்.

இதனிடையே, கல்லூரியிலும் இனியாவின் தோழிகளிடமும் பிரபலமாகிறார். தன்னுடைய வகுப்பு தோழிகளிடமும் சிறப்பான பெயரெடுக்கிறார். அவரது இத்தகைய நடவடிக்கைகள் இனியாவிற்கு கடுப்பை ஏற்படுத்துகிறது. தன்னுடைய மாமியாரிடமும் நல்ல பெயரை தொடர்ந்து வாங்கி, கல்லூரியில் சேர அனுமதியும் வாங்குகிறார் பாக்கியா. இந்நிலையில், இதுகுறித்து தன்னுடைய அம்மாவிடம் புகார் தெரிவிக்கும் கோபி, அவரிடம் திட்டு வாங்கியதுதான் மிச்சம்.

இந்நிலையில், தன்னை தன்னுடைய குடும்பத்தினர் வெறுத்து ஒதுக்க பாக்கியாதான் காரணம் என்று நினைக்கிறார் கோபி. அவர், தன்னுடைய மனைவி ராதிகாவிடம் இதுகுறித்து ஆத்திரமாக பேசுகிறார். தன்னுடைய குடும்பத்தினரிடம் இருந்து தான் பிரிய காரணமான, பாக்கியாவை அதேபோல தன்னுடைய குடும்பத்தினரிடமிருந்து பிரித்து, யாருமில்லாமல் தனியாக நின்று அழ வைப்பேன் என்று சபதமிடுகிறார்.

இதனிடையே, ஆங்கில வகுப்பை முடித்துவிட்டு பழனிச்சாமி, பாக்கியா மற்றும் லோபிகா மூவரும் வெளியில் ஒரு கடையில் நின்றபடி காபி குடிக்கின்றனர். இதை பார்க்க நேரும் கோபி, அவர்களது உறவை மீண்டும் கொச்சைப்படுத்தி தன்னுடைய நண்பர் செந்திலிடம் ஆத்திரப்படுகிறார். பழனிச்சாமி இரு பெண்களுடன் கூத்தடிப்பதாக அவர் ஆத்திரத்துடன் கூறுகிறார். அவர் தொடர்ந்து பாக்கியாவின் செயல்பாடுகளிலேயே கவனம் செலுத்துவதால் தன்னுடைய பிசினசில் அடுத்தடுத்து முன்னேற்றமில்லாமல் உள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X