Baakiyalakshmi: நிஜமாவே நீங்க என்னோட அம்மாதான்.. ஈஸ்வரி குறித்து நெகிழ்ந்த பாக்கியா!

சென்னை: விஜய் டிவியின் நம்பர் ஒன் தொடரான பாக்கியலட்சுமி தன்னுடைய இடத்திலிருந்து சற்றே இறங்கியுள்ளது. விஜய் டிவியின் சிறகடிக்க ஆசை தொடர், தற்போது பாக்கியலட்சுமியின் முதலிடத்தை பிடித்துள்ளது. Urban மற்றும் Urban + Rural கேட்டகரியில் சிறகடிக்க ஆசை அதிக புள்ளிகளை பெற்றுள்ளது.

மீண்டும் தன்னுடைய இடத்தை வரும் வாரத்தில் பாக்கியலட்சுமி தொடர் மீட்டெடுக்கும் என்று எதிர்பார்க்கலாம். அதற்கேற்ப கடந்த சில தினங்களாக தொய்வாக இருந்த தொடர், தற்போது மீண்டும் சூடு பிடிக்கத் துவங்கியுள்ளது.

Vijay TVs Baakiyalakshmi serial new episode makes fans feels great

கோபியை கேள்வி கேட்ட ஈஸ்வரி -நெகிழ்ந்த பாக்கியா: விஜய் டிவியின் நம்பர் ஒன் இடத்தை பல மாதங்களாக தொடர்ந்து பிடித்திருந்தது பாக்கியலட்சுமி தொடர். இந்தத் தொடரின் அடுத்தடுத்த எபிசோட்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வந்தது. விருப்பமில்லாமல் தன்னுடன் வாழ்ந்த கணவனுக்கு அவரது விருப்பத்திற்கேற்ப விவாகரத்தை கொடுத்த பாக்கியாவிற்கு துவக்கத்தில் தன்னுடைய வாழ்க்கை குறித்த தெளிவு இல்லாமல்தான் இருந்தது. ஆனால் அடுத்தடுத்து வாழ்க்கை கொடுத்த அடி வாழ்க்கை குறித்த புரிதலை பாக்கியாவிற்கு கொடுக்கிறது.

இந்நிலையில் தான் செய்துவந்த மசாலா பொருட்கள் வியாபாரத்துடன், சமையல் கான்டிராக்ட்களை எடுத்து செய்கிறார். ராதிகாவின் அலுவலகத்தில் மிகுந்த போராட்டத்திற்கு பிறகு கேன்டீன் கான்டிராக்டையும் எடுத்து செய்கிறார். கோபி -ராதிகா, தங்களது வீட்டில் வந்து குடைச்சல் கொடுக்க, ஒரு கட்டத்தில் அவருக்கு கொடுக்க வேண்டிய 18 லட்சம் ரூபாயை கொடுத்து வீட்டை மீட்கிறார். தன்னுடைய பேரிலும் ரிஜிஸ்டர் செய்கிறார்.

Vijay TVs Baakiyalakshmi serial new episode makes fans feels great

இதற்காக அவர் பட்ட கஷ்டங்கள், அவமானங்கள், பிரச்சினைகள் என அடுத்தடுத்த எபிசோட்களில் பார்க்க முடிந்தது. ஒரு நண்பராக, பழனிச்சாமி, பாக்கியாவின் செயல்களில் ஊக்கம் கொடுக்க, முன்னாள் கணவனான கோபி, பாக்கியாவை பலவிதங்களில் மாட்டி விட முனைகிறார். அப்பாவியாக, கோழையாக இருந்த தன்னுடைய மனைவி, தன்னுடைய கண்முன்னாலேயே வளர்வதை அவரால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. இந்த ஆட்டத்தில் ராதிகாவும் இணைகிறார்.

இந்த பிரச்சினைகளை எல்லாம் சிறப்பாக சமாளித்து, 5000 பேருக்கு தொடர்ந்து மூன்று நாட்கள் சமைத்து மாஸ் காட்டுகிறார் பாக்கியா. இதன்மூலம் கிடைக்கும் பணத்துடன், மகன்களும் கைகொடுக்க, கோபிக்கு கொடுக்க வேண்டிய 18 லட்சம் ரூபாய் திருப்பி கொடுகிறார். இதையடுத்து வீட்டை விட்டு ராதிகாவுடன் வெளியேறும் கோபி, தொடர்ந்து பல விஷயங்களில் மூக்கை நுழைத்துக் கொண்டுதான் இருக்கிறார். பாக்கியா மற்றும் பழனிச்சாமி இடையில் உள்ள நட்பை சந்தேகப்பட்டு, அவர்களிடமே அதுகுறித்து கேட்டு கொச்சைப்படுத்கிறார். பழனிச்சாமியின் அம்மாவிடமும் சென்று பற்ற வைக்கிறார்.

Vijay TVs Baakiyalakshmi serial new episode makes fans feels great

இது எதுவும் வொர்க் அவுட் ஆகாமல் தவிக்கிறார். இதனிடையே, தன்னுடைய கல்லூரி கனவை நிறைவேற்றிக் கொள்கிறார் பாக்கியா. தன்னுடைய மகளின் கல்லூரியிலேயே மாலைநேர வகுப்பில் சேர்கிறார். இதற்கு அவருடைய மாமியார் சம்மதிக்க மாட்டார் என்று குடும்பமே அச்சத்தில் இருக்க, பழனிச்சாமி கொடுத்த அட்வைஸ்படி அவரை சிறப்பாக சமாளித்து சம்மதம் வாங்குகிறார் பாக்கியா. இதையடுத்து அந்த காலனியே இவர்கள் இருவரையும் பாராட்டுகிறது.

இதனிடையே, பாக்கியா கல்லூரிக்கு போவதை பொறுக்க முடியாமல் தன்னுடைய அம்மாவும் அதற்கு துணை போவதை பார்த்து கடுப்பாகிறார் கோபி. இதுகுறித்து தன்னுடைய அம்மாவிடம் கேட்கிறார். ஈஸ்வரி தனக்கு ஆதரவாக பேசுவார் என்று எதிர்பார்த்த நிலையில், அவர் பாக்கியாவிற்கு ஆதரவாக பேசுகிறார். தங்களை பற்றி யோசிக்காமல் கோபி இரண்டாவது கல்யாணம் செய்த நிலையில், பாக்கியாதான் தங்களுக்கு ஆதரவாக இருப்பதாக ஈஸ்வரி சுட்டிக் காட்டுகிறார்.

பாக்கியா கல்லூரிக்கு போவது மட்டுமில்லாமல் தன்னுடைய வாழ்க்கைக்கு வெற்றி தரும் என்று நினைக்கும் எந்த விஷயத்தையும் செய்ய தான் துணை நிற்பேன் என்றும் கோபியிடம் ஈஸ்வரி காட்டமாகவே கூறுகிறார். இதை பால்கனியிலிருந்து பாக்கியா மற்றும் எழில் பார்த்து நெகிழ்ச்சி அடைகின்றனர். இதையடுத்து கீழே இறங்கிவரும் பாக்கியா, ஈஸ்வரியை கட்டியணைத்து, அவர் உண்மையிலேயே தன்னுடைய அம்மாதான் என்று நெகிழ்ச்சியை வெளிப்படுத்துவதாக இன்றைய எபிசோட் காணப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X