Baakiyalakshmi serial: அரசாங்க கான்டிராக்டிற்காக போராடும் பாக்கியா.. திட்டித்தீர்க்கும் ஈஸ்வரி!

சென்னை: விஜய் டிவியின் முன்னணி தொடர்களில் ஒன்றான பாக்கியலட்சுமி தொடர், தொடர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

கோபியை விவாகரத்து செய்தபோதிலும் தன்னுடைய மாமனார், மாமியாரை தன்னுடைய சொந்தமாக நினைத்து அவர்களுடன் இருந்து வருகிறார் பாக்கியா.

Vijay TVs Baakiyalakshmi serial new episode makes fans happy 16-11.2023

தன்னுடைய மகன்கள், மகள், மருமகள்கள், வேலை என அனைத்து விஷயங்களிலும் அக்கறை செலுத்தும் நபராக ரசிகர்களை கவர்ந்து வருகிறார் பாக்கியா.

பாக்கியலட்சுமி தொடர்: பாக்கியலட்சுமி தொடர் விஜய் டிவியின் முன்னணி தொடராக பல மாதங்களாக ரசிகர்களை கவர்ந்து வருகிறது. முன்னதாக டிஆர்பியில் அதிக புள்ளிகளை பெற்று முதலிடத்தில் இருந்துவந்த இந்தத் தொடர், தற்போது இரண்டாவது இடத்தில் இருந்த போதிலும் ஏராளமான ரசிகர்களின் விருப்பத்திற்குரிய தொடராக தொடர்ந்து இருந்து வருகிறது. ஸ்ரீமோயி என்ற பெங்காலி தொடரின் ரீமேக்காக இருந்தபோதிலும் தமிழ் ரசிகர்களை கவரும் வகையில் இந்தத் தொடர் ஒளிபரப்பாகி வருகிறது.

ஏளனப்படுத்தும் கோபி: தன்னை ஏமாற்றி விவாகரத்து கொடுக்க நினைக்கும் கணவனின் காதல் விவகாரம் தெரிந்து, அவர் கேட்கும் விவாகரத்தை தானே மனமுவந்து கொடுக்கிறார் பாக்கியா. தொடர்ந்து தன்னுடைய வீட்டிலிருந்து கோபியை வெளியேற்றுகிறார். தொடர்ந்து பாக்கியாவின் வளர்ச்சியை பிடிக்காமல் தன்னுடைய இரண்டாவது மனைவி ராதிகாவுடன் இணைந்து பல வேலைகளை செய்கிறார் கோபி. பல இடங்களில் தன்னுடைய மனைவியை ஏளனப்படுத்துகிறார்.

Vijay TVs Baakiyalakshmi serial new episode makes fans happy 16-11.2023

பதிலடி கொடுக்கும் பாக்கியா: ஆனால் தன்னை சுற்றி என்ன நடந்தாலும் தான் அதிலிருந்து மீண்டு வெற்றியடைவேன் என அடுத்தடுத்த நிகழ்வுகளின்மூலம் கோபிக்கு பதிலடி கொடுத்து வருகிறார் பாக்கியா. தற்போது ஈஸ்வரியின் கட்டாயத்தின்பேரில், பாக்கியாவின் வீட்டிற்கு வந்து தன்னுடைய மனைவியுடன் தங்கியிருக்கும் கோபி, பாக்கியாவிற்கு எதிராக தொடர்ந்து பேசி வீட்டிலுள்ளவர்களை மட்டுமின்றி, ரசிகர்களையும் வெறுப்பேற்றுகிறார். ஆனாலும் இதையெல்லாம் கண்டுகொள்ளாமல் தன்னுடைய வேலையில் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறார் பாக்கியா.

அரசாங்க கான்டிராக்ட்: கேன்டீன் கான்டிராக்ட், மசாலா பிசினஸ் என அடுத்தடுத்து தன்னுடைய வேலைகளை இழக்கிறார் பாக்கியா. என்றபோதிலும் அவருடைய தன்னம்பிக்கை அப்படியே இருக்கிறது. பழனிச்சாமியின் ஆலோசனையின்பேரில் பொருட்காட்சியில் கேன்டீன் கான்டிராக்டை பெறும் முயற்சியில் ஈடுபடுகிறார் பாக்கியா. இதற்கான விண்ணப்பத்தை 10 ஆயிரம் ரூபாய் கொடுத்து வாங்கி அப்ளை செய்கிறார்.

முன்பணத்திற்கான தேவை: தொடர்ந்து ஒரு லட்சம் ரூபாய் கட்டினால் மட்டுமே கான்டிராக்ட் கிடைக்கும் சூழல் ஏற்படுகிறது. அந்த பணத்தை கொடுக்க பழனிச்சாமி, எழில், மாமனார் ஆகியோர் முன்வந்தாலும் தான் சமாளித்துக் கொள்வதாக பதிலளிக்கிறார். தொடர்ந்து மசாலா பிசினசும் கேள்விக்குறியான நிலையில், மசாலா அரைக்கும் உபகரணங்களை விற்க முயல்கிறார். இதனிடையே, பாக்கியாவிடம் வேலை செய்பவர்களும் வீட்டிற்கு வருகின்றனர்.

பாக்கியா உறுதி: அவர்களிடம் தனக்கு அரசு கான்டிராக்ட் கிடைக்கவுள்ளதாகவும் விரைவில் அவர்களது பாக்கிகள் அனைத்தையும் செட்டில் செய்து விடுவேன் என்றும் பாக்கியா உறுதியாக கூறுகிறார். ஆனால் இது எல்லாம் சாத்தியம் இல்லை என்று கோபி கூறுகிறார். இதையடுத்து பாக்கியா தன்னால் முடியாதவற்றை எல்லாம் செய்வதாகவும் அகலக்கால் வைப்பதாகவும் ஈஸ்வரி அவரை திட்டித் தீர்க்கிறார். ஆனால் இந்த கான்டிராக்ட் தனக்கு கண்டிப்பாக கிடைக்கும் என்று பாக்கியா கூறுவதாக இன்றைய எபிசோட் அமைந்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X