Baakiyalakshmi serial: மசாலா பிசினசிலும் சிக்கல்.. பாக்கியாவிற்கு சப்போர்ட் செய்யும் ராதிகா!

சென்னை: விஜய் டிவியின் முன்னணி சீரியலான பாக்கியலட்சுமி தொடரின் இன்றைய எபிசோட் ரசிகர்களை கவரும் வகையில் அமைந்துள்ளது.

ஏற்கனவே கேன்டீன் கான்டிராக்டை பறிகொடுத்துவிட்டு தன்னுயை வாழ்வாதாரத்தை இழந்து நிற்கும் பாக்கியாவிற்கு மசாலா பிசினசிலும் அடுத்த அடி ஏற்பட்டுள்ளது.

Vijay TVs Baakiyalakshmi serial new episode makes fans impressive

இதனிடையே பாக்கியாவை பழனிச்சாமி, இந்த இக்கட்டான நேரத்தில் அவருக்கு பண உதவி ஏதாவது தேவையா என்று கேட்கிறார். ஆனால் பாக்கியா அதற்கு மறுப்பு தெரிவிக்கிறார்.

பாக்கியலட்சுமி தொடர்: விஜய் டிவியின் முன்னணி தொடர்களில் ஒன்றான பாக்கியலட்சுமி அடுத்தடுத்த எபிசோட்களால் ரசிகர்களை கவர்ந்து வருகிறது. இந்தத் தொடரில் தற்போது மாலினி -செழியன் விவகாரம் குடும்பத்தினருக்கு தெரியவந்த நிலையில் ஆத்திரமடைந்த ஜெனி, வீட்டை விட்டு தன்னுடைய குழந்தையுடன் தன்னுடைய அம்மா வீட்டிற்கு சென்றுவிட்டார். இதனால் அவரை சமாதானப்படுத்தும் வழி தெரியாமல் பாக்கியா உள்ளிட்ட குடும்பத்தினர் பரிதவித்து வருகின்றனர்.

Vijay TVs Baakiyalakshmi serial new episode makes fans impressive

வீட்டை விட்டு வெளியேறிய ஜெனி: மாலினியுடன் பழகும்போது ஜெனி தன்னிடம் சரியாக பேசுவதில்லை என்று பல்வேறு காரணங்களை கற்பித்துக் கொண்ட செழியன், தற்போது ஜெனியை தேற்றும் வழி தெரியாமல் அவரது வீட்டின் வாசலிலேயே அழுகையுடன் காத்திருக்கிறார். தன்னுடைய மனைவி மற்றும் குழந்தையை கண்ணில் காட்டுங்கள் என்று தன்னுடைய மாமியாரிடம் கெஞ்சுகிறார். இதையடுத்து தான் அது போன்ற ஒரு விஷயத்தை செய்ய மாட்டேன் என்று அவர் உறுதியுடன் இருக்கிறார்.

Vijay TVs Baakiyalakshmi serial new episode makes fans impressive

மசாலா பிசினசிலும் சிக்கல்: இதனிடையே கேன்டீன் கான்டிராக்டை பறிகொடுத்த பாக்கியா மசாலா பிசினசை தொடர்வதாக காட்டப்பட்டது. ஆனால் தற்போது அதற்கும் ஆப்பு வந்துள்ளது. அவர் இந்த பிசினசை செய்வதற்காக தனியாக வீடு எடுத்து வேலைகளை செய்து வந்தார். ஆனால் தற்போது அந்த வீட்டை காலி செய்ய வீட்டின் உரிமையாளர் கூறிவிட்டதால் அதிலும் பாக்கியாவிற்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. அந்த வீட்டில் இருந்த பொருட்களை எல்லாம் அவர் தனது வீட்டிற்கு கொண்டு வந்த நிலையில் வாசலில் இருந்த பொருட்களை பார்த்து கோபி கோபப்படுகிறார்.

Vijay TVs Baakiyalakshmi serial new episode makes fans impressive

கோபியின் ஆதங்கம்: தன்னுடைய காரை பார்க் செய்யும் இடத்தில் அந்தப் பொருட்கள் வைக்கப்பட்டுள்ளதாக தன்னுடைய அம்மாவிடம் கூறுகிறார். இதையடுத்து அவர் தனது முந்தைய வீட்டில் காரை வீட்டில் வெளியில் பார்க் செய்ததை ராதிகா சுட்டிக் காட்டுகிறார். தனக்கு சப்போர்ட் செய்யாமல் எப்போதும் பாக்கியாவிற்கே ராதிகா சப்போர்ட் செய்வதாக தன்னுடைய அம்மாவிடமும் தன்னுடைய ஆதங்கத்தை கொட்டித் தீர்க்கிறார் கோபி.

பாக்கியாவின் கோரிக்கை: கேன்டீன் கான்டிராக்ட்டும் கைவிட்டு போன நிலையில், தற்போது மசாலா பிசினசும் கேள்விக்குறியாகியுள்ள சூழலில் அடுத்தது பாக்கியா என்ன செய்யப்போகிறார் என்ற கேள்வி அவருக்கு மட்டுமில்லாமல் பார்க்கும் ரசிகர்களுக்கும் எழுந்துள்ளது. இந்நிலையில் பழனிச்சாமி மற்றும் லோபிகாவை சந்திக்கும் பாக்கியா, அடுத்தடுத்து தனக்கு சமையல் கான்டிராக்ட் கிடைக்க உதவி கேட்கிறார். கண்டிப்பாக செய்வதாக கூறும் பழனிச்சாமி, நிதி உதவி ஏதாவது தேவை என்றாலும் கேட்கும்படி கூறுகிறார். ஆனால் பாக்கியா அதை மறுப்பதாக இன்றைய எபிசோட் காணப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X