Baakiyalakshmi: வெட்கமாக இல்லையா.. ஆத்திரத்தில் கோபியிடம் கொந்தளிக்கும் ராதிகா!

சென்னை: விஜய் டிவியின் முன்னணி தொடராக தொடர்ந்து கெத்து காட்டி வருகிறது பாக்கியலட்சுமி சீரியல். தொடர்ந்து சேனலின் டிஆர்பி ரேட்டிங்கில் அதிக புள்ளிகளை பெற்று வருகிறது.

இந்த தொடரில் அடுத்தடுத்த சிறப்பான எபிசோட்களை கொடுத்து, ரசிகர்களை சீரியல் டீம் கட்டிப் போட்டு வருகிறது.

Vijay TVs Baakiyalakshmi serial new episode makes fans more fun

தற்போது பாக்கியலட்சுமி -பழனிச்சாமி உறவு குறித்து நடுரோட்டில் நிற்க வைத்து கேள்வி கேட்கும் கோபி, போலீசாரின் மிரட்டலுக்கு உள்ளாகிறார்.

பாக்கியா விவகாரத்தில் கோபியிடம் கொந்தளிக்கும் ராதிகா: விஜய் டிவியின் முன்னணி தொடராக தொடர்ந்து கெத்து காட்டி வருகிறது பாக்கியலட்சுமி. இந்த தொடரில் கோபியுடனான விவாகரத்திற்கு பிறகு தொடர்ந்து தன்னுடைய வாழ்க்கையில் முன்னேற்ற பாதையில் நடைபோட்டு வருகிறார் பாக்கியா. அவரது வளர்ச்சி மற்றும் பழனிச்சாமியுடனான நட்பு ஆகியவற்றை பொறுக்க முடியாமல் கோபி அலைபாய்கிறார். தொடர்ந்து இவை குறித்து பாக்கியாவிடம் மல்லுக்கு நிற்கிறார். அவரிடம் தொடர்ந்து வாங்கிக் கட்டிக் கொள்கிறார்.

விவாகரத்திற்கு முன்புவரை மிகவும் அப்பாவியாக இருந்த பாக்கியாவிற்கு, அவருடைய தொழில் உள்ளிட்டவை மிகுந்த தைரியத்தை கொடுத்துள்ளது. இதனால் தன்னுடைய கணவனிடம் தொடர்ந்து ஏச்சும் பேச்சும் வாங்கிவந்த பாக்கியா, தற்போது எதிர்த்து கேள்வி கேட்கத் துவங்கியுள்ளார். தன்னை சமையல் கான்டிராக்ட், கேன்டீன் கான்டிராக்ட், ஆங்கில வகுப்பு மற்றும் கல்லூரி என அடுத்தடுத்து என்கேஜ் செய்து வருகிறார். அவரது முயற்சிகளுக்கு அவருடைய குடும்பத்தினரும் சிறப்பாக தோள் கொடுத்து வருகின்றனர்.

ஆங்கில வகுப்பில் ப்ரபோஸ் செய்வது குறித்த டாஸ்கை பாக்கியாவிடம் மேற்கொள்கிறார் பழனிச்சாமி. இதை பார்க்கும் கோபி, மிகுந்த மனஉளைச்சலுக்கு உள்ளாகிறார். தன்னுடைய மனைவியை விவாகரத்து செய்த நிலையிலும், இவற்றையெல்லாம் அவரால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. இதுகுறித்து பழனிச்சாமியிடம் கேள்வி கேட்கும் அவர், தொடர்ந்து நடுரோட்டில் பாக்கியாவை வழி மறித்து சண்டையிடுகிறார். அப்போது அங்குவரும் போலீசாரிடம் கோபி குறித்து புகார் தெரிவிக்கிறார் பாக்கியா.

Vijay TVs Baakiyalakshmi serial new episode makes fans more fun

இதைதொடர்ந்து கோபிக்கு எச்சரிக்கை விடுத்து போலீசார் அனுப்பி வைக்கின்றனர். இதனால் அவமானப்படும் கோபி, தன்னுடைய மனைவி ராதிகாவிடம் ஆதங்கப்படுகிறார். இதை கேட்கும் ராதிகா கொந்தளிக்கிறார். கோபியை தொடர்ந்து பாக்கியா அவமானப்படுத்தினாலும் அவர் பின்னாடியே போகிறாரே, அவருக்கு வெட்கமாக இல்லையா என்று கேட்டு சண்டையிடுகிறார். இதற்கு மழுப்பலான பதிலையே கொடுக்கிறார் கோபி.

இதனிடையே இனியா முதல் நாள் கல்லூரிக்கு கிளம்புகிறார். அவரை குடும்பத்தினர் அனைவரும் இணைந்து உற்சாகமாக சாமி கும்பிட்டு, அனுப்பி வைக்கின்றனர். முன்னதாக இனியா மற்றும் பாக்கியா இருவரும் கல்லூரி செல்வதற்காக தாங்கள் வாங்கிய பொருட்களை கம்பேர் செய்து பேசுகின்றனர். தன்னுடைய செலக்ஷன்தான் சிறந்தது என இருவரும் செல்லச் சண்டையிடுகின்றனர். இவற்றாலும் குடும்பத்தினர் உற்சாகம் கரைபுரண்டோடுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X