Baakiyalakshmi: ஆணவம்தான் காரணம்.. பாக்கியாவை திட்டித் தீர்த்த ஈஸ்வரி -கோபி.. காரணத்திற்கா பஞ்சம்!
சென்னை: விஜய் டிவியின் முன்னணி தொடர்களில் ஒன்றான பாக்கியலட்சுமி சீரியல் அடுத்தடுத்த சிறப்பான எபிசோட்களை கொடுத்து ரசிகர்களை கவர்ந்து வருகிறது.
இந்த தொடரின் இன்றைய எபிசோடும் ரசிகர்களை கவரும்வகையில் அமைந்துள்ளது.

பொருட்காட்சி கான்டிராக்ட் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் ஒரு லட்சம் ரூபாயை முன்பணமாக பாக்கியா கட்டிய நிலையில் அந்த கான்டிராக்ட் கைநழுவியதால் வீட்டிலுள்ளவர்கள் திட்டித் தீர்க்கின்றனர்.
பாக்கியலட்சுமி தொடர்: விஜய் டிவியின் முன்னணி தொடரான பாக்கியலட்சுமி சீரியலில் அடுத்தடுத்த எபிசோட்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. இந்தத் தொடரில் கணவனை விவாகரத்து செய்த பாக்கியா, அவரது குடும்பத்தையும் தன்னுடைய மகன்கள், மகள் என அனைவரையும் பாதுகாக்கும் பொறுப்பை ஏற்கிறார். இதற்காக கேன்டீன் கான்டிராக்ட், மசாலா பிசினஸ், சமையல் கான்டிராக்ட் என அடுத்தடுத்த முயற்சிகளில் ஈடுபடுகிறார்.
பறிபோன கேன்டீன் கான்டிராக்ட்: மேலும் தன்னுடைய திறமைகளை வளர்த்துக் கொள்ளும்வகையில் ஆங்கில வகுப்பு, கல்லூரி படிப்பு என்றும் அடுத்தடுத்த கட்டங்களுக்கு அவர் சென்ற நிலையில், தற்போது ராதிகாவால் கேன்டீன் கான்டிராக்ட் பறிபோகிறது. தொடர்ந்து ஆங்கில வகுப்பிலிருந்தும் விலகுகிறார். மசாலா பிசினசும் கேள்விக்குறியாகியுள்ள நிலையில், அடுத்தது என்ன செய்வது எப்படி குடும்பத்தை வழி நடத்துவது என்ற கேள்வியுடன் அடுத்தடுத்த முயற்சிகளில் ஈடுபடுகிறார்.
கான்டிராக்டை பெற போராட்டம்: பழனிச்சாமியின் அறிவுறுத்தலின்பேரில் பொருட்காட்சியில் கேன்டீன கான்டிராக்டை எடுக்கும் முயற்சியில் ஈடுபடுகிறார் பாக்கியா. இதற்கான அப்ளிகேஷனை 10 ஆயிரம் ரூபாய் கொடுத்து வாங்கி விண்ணப்பித்த நிலையில், அடுத்ததாக முன்பணமாக ஒரு லட்சம் ரூபாய் கட்ட சொல்கிறார்கள். அதையும் தன்னுடைய மசாலா பிசினசின் உபகரணங்களை விற்பனை செய்து ரெடி செய்யும் பாக்கியா, கான்டிராக்டை பெறுவதற்காக கட்டுகிறார்.
கைநழுவிப் போன கான்டிராக்ட்: ஆனால் அதிகமான பேர் இந்த கான்டிராக்டிற்காக விண்ணப்பித்திருந்த நிலையில், குலுக்கல் முறையில் அதிகாரிகள் தேர்வு செய்கின்றனர். இதனால் மிகுந்த ஏமாற்றத்திற்கு உள்ளாகிறார் பாக்கியா. அழும் நிலைக்கு போன அவரை எழில் மற்றும் செல்வி தேற்றுகின்றனர். ஆனால் வீட்டிற்கு திரும்பும் அவரை ஈஸ்வரி மற்றும் கோபி ஆகியோர் திட்டித் தீர்க்கின்றனர். தாங்கள் சொன்னதை கேட்காமல் ஆணவமாக பாக்கியா நடந்துக் கொண்டதாக கோபி குற்றம் சாட்டுகிறார்.
திட்டித் தீர்த்த கோபி -ஈஸ்வரி: இதையடுத்து பாக்கியா பிசினஸ் என்று கூறி அதிகமானவற்றை இழந்துள்ளதாகவும் இனிமேல் அதை தொடராமல், எழில். செழியன் மற்றும் மாமனாரின் பென்ஷனை வைத்து வீட்டில் அடங்கி இருக்குமாறும் ஈஸ்வரி கூறியதை கேட்டு மனமுடைகிறார் பாக்கியா. ஆனாலும் தான் கண்டிப்பாக பிசினசை தொடர்வேன் என்று உறுதியாக குடும்பத்தினரிடம் கூறுகிறார். தொடர்ந்து அவர் தனியாக இருக்கும்போது கோபியும் வெறுப்பேற்றும் வகையில் பேசியதை இன்றைய எபிசோடில் பார்க்க முடிந்தது.
பாக்கியாவின் உறுதி: தொடர்ந்து பாக்கியாவிடம் பேசும் எழில், இந்த கான்டிராக்ட் கைநழுவி போனதால் வருத்தம் கொள்ள வேண்டாம் என்றும் இதைவிட பெரிதாக ஏதோ ஒன்று கிடைக்கவுள்ளதாகவும் தேற்றுகிறார். ஆனால் இந்த கான்டிராக்ட் தன்னை விட்டு போனதாக தான் கருதவில்லை என்றும் அது கண்டிப்பாக தனக்கு கிடைக்கும் என்று தான் தற்போதும் நம்புவதாகவும் பாக்கியா உறுதியாக கூறுகிறார். அவரின் இந்தப் பேச்சை கேட்டு எழில் மற்றும் செல்வி இருவரும் அவர் வருத்தத்தில் உளறுவதாக கூறுவதாக இன்றைய எபிசோட் காணப்படுகிறது.


Click it and Unblock the Notifications











